கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 15, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

தோழி வேறு, மனைவி வேறு

 

 கையில் பிரித்த பத்திரிகையுடன் தன்னை நோக்கிவந்த மகளைக் கவனிக்காது, மும்முரமாக இட்லி மாவை வார்த்துக் கொண்டிருந்தாள் ராஜம்மா. “அம்மா! இன்னிக்கு என் கதை வந்திருக்கு!” அம்மா தன் உற்சாகத்தில் பங்கு கொள்ளமாட்டாள், குறைந்தபட்சம் அதைப் புரிந்துகொள்ளக்கூட அவளால் முடியாது என்பது தெரிந்திருந்தும், தேவியால் அந்த மகிழ்ச்சிகரமான செய்தியைப் பங்கு போட்டுக் கொள்ளாமல், இருக்க முடியவில்லை. அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் தன் காரியத்தைக் கவனிக்கலானாள் தாய். “எவனையோ பாத்துட்டு, சொக்கிப்போன மாதிரி எழுதியிருப்பே!” அவளுடைய குரலிலிருந்த கேலி


பாருக்குட்டி

 

 நான் மலையாளம் மற்றும் கிரிப்டாலஜி படிக்கப் போயிருக்காவிட்டால், போன மாதம் ஊருக்குப் போயிருக்காவிட்டால், இதை எழுதியே ருக்க மாட்டேன். இந்த நரை பாய ஆரம்பித்த மீசை, கண்ணாடி, கிருதா எல்லாவற்றையும் எடுத்து விட்டு, வயதிலும் கிட்டத்தட்ட நாற்பதைக் கழித்துக் கடாசி விட்டு, ஐந்தாம் கிளாஸ் படிக்கிற சின்னப் பையனாக என்னைப் பாருங்கள். பைஜாமாவாகத் தைக்க எடுத்து பாதியில் நிறுத்திய மாதிரி ஒரு டிராயர், மிட்டாய்க் கலரில் சட்டை, சிலேட், குச்சி சகிதம் குண்டு குண்டாக சுழித்துத் சுழித்து


கனவு மெய்ப்பட வேண்டும்!

 

 சற்குணம் கோயிலுக்கு முன்பாக நின்று தேங்காய் ஒன்றை வீசி எறின்றார். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாக சிதறி தமிழரின் வாழ்வு போலப் பறக்கின்றன. சற்குணம் கனடா போகவென்று கொழும்பு வந்து ஒரு வருஷமும் ஆறு மாதங்களும் உருண்டோடிவிட்டன. ஆனாலும் சற்குனம் கொழும்பைவிட பிற இடங்களில் இருந்த காலம்தான் அதிகம். பாகிஸ்தான் சிறைச்சாலையில் ஆறுமாதங்களும், ஜப்பான் ஹோட்டல்களில் மூன்றுமாதங்களுமாக காலத்தைக் கழித்துவிட்டு ‘பூமராங்’ போல புறப்பட்ட இடத்திற்கு வந்துவிட்டார். நிகழும் விஜ வருஷம் வைகாசித்திங்கள் 11ஆம் நாள், நல்லதொரு


மழை ஓய்ந்தது

 

 மழைப் பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ்மக்கள், எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்காருகிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. மனிதர்கள் இன்னமும் அப்படியேதான் வாழ்கிறார்கள். ஆரணி பஜார் முழுவதும் சேறாகக் கிடக்கிறது. அண்ணாசிலை துவக்கத்திலிருந்து பேருந்து நிலையம் வரையிலும் கால் வைக்க முடிவதில்லை. மக்கள் ஈரத்திலேயே நடக்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள், செருப்பால் பின்வருபவர்மேல் சேறடிக்கிறார்கள்… கடையில் நின்றபடி மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் தூறல் போட ஆரம்பித்ததும் ஜனங்கள்


வசியம்

 

 கடும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் பூபதியாப்பிள்ளை. சிவந்த மேனியோடு லேசான தொந்தியுடன் ‘ஹோவ்’ என்ற சத்ததோடு ஏப்பம் விட்டபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நாற்பது வயதில் நிம்மதியான உறக்கமின்றி அலையும் மனதோடு அவர் பெரும் கொதிப்பிலிருந்தார். உடலெங்கும் சின்ன சின்ன வேர்வைத் துளிகள் பனித்திருந்தன. ‘தானா வேர்த்தா நல்லதுடே’ என்று என்றோ அவரது அம்மா சொன்ன நினைவு வந்தது. உடனே இப்போது தானாக வேர்க்கவில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இரவு முழுதும் அரைத்தூக்கத்திலிருந்த கண்கள் சிவந்திருந்தன.