கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 13, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

பெண் என்னும் புதிர்

 

 “ஒங்க கையை இப்படி என் கை பக்கத்திலே வைங்கோ!” புது மனைவியின் விளையாட்டு வேடிக்கையாக இருந்தது மணிக்கு. அவன் சற்றும் எதிர்பாராத தாக்குதல் அடுத்து வந்தது தாராவிடமிருந்து. “நம்ப ரெண்டு பேரில யாரு கறுப்பு, சொல்லுங்கோ!” தயக்கமும் அவமானமும் போட்டிபோட, ஒரு முறை அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, பின் தலையை வேறுபுறம் திருப்பிக்கொண்டபடி, “நீதான்!” என்றான். குரலே எழும்பவில்லை. அப்போது அவள் முகத்தில் தோன்றி மறைந்த பிரகாசத்தைக் கவனிக்கும் மனநிலை அவனை விட்டு விலகியிருந்தது. தாரா!


பனித்துளி சுமக்கும் புற்கள்

 

 நெஞ்சம் வலிப்பது போன்று இருந்தது. கல் போன்ற பாரம் நெஞ்சை அழுத்துவது போல் இருந்தது. எட்டு வருட வாழ்க்கை ஒரு நொடியில் மாறிப்போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மனத்திலும் சுமை, கையிலும் சுமை. எப்படி தாங்கப்போகிறேன் கடவுளே! கடவுள்! என்ன மாதிரியான கடவுள் இவர். எல்லா இன்பங்களையும் ஒரு சேரக்கொடுத்து சுகமான ஒரு மனநிலையில் மிதந்து கொண்டிருக்கும் போது அதைத் தட்டி பறித்து எடுத்துப்போகிற கடவுள்,என்ன கடவுள்? நேற்றுக் காலை வரை எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. நன்றாகக்


தொலைந்தது போனவன்

 

 மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை தி நகர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. சூரியனின் வெட்பத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் நகரம் நகர்ந்து கொண்டு இருக்க தனது பயணத்திற்கான இறுதி கட்ட ஷாப்பிங் செய்து கொண்டிருந்தான் திலீபன். திலீபனின் தந்தை தமிழ் ஈழத்தின் மீது கொண்ட பற்றால் திலீபன் என்று இவனுக்கு பெயர் வைத்தார். அலுவல் காரணமாய் திலீபன் ஆறு மாத ஆஸ்திரேலியா நாட்டு பயணத்திற்கு தயார் ஆகிவிட்டான். தனது நண்பர்களுக்கு எல்லாம் ட்ரீட் கொடுத்து முடித்தாகிவிட்டது. முதல்


தேனும் ஒரு “கொயர்’ கோல நோட்டும்

 

 வாயெல்லாம் பிளந்து கிடக்க, சிகப்பு நித்துல நாக்கு மட்டும் துருத்திக்கிட்டு கதிர் தூங்குதப் பார்த்ததும் தேனு ஞாபகம்தான் சத்தியமா வருது. “ஆம்பிளைப் பசங்கல்லாம் கோமாளிப்பசங்க’னு அவ அடிக்கடி சொல்லுவா. ஆனாலும் ஆம்பிளைப் பசங்களோடப் பழகுத அவ ஒருநாளும் விடலை. அவளுக்கான கதைகளையும் அவர்களே தர்துனாலயும் அவங்க கூட அவ பழகியிருப்பானு நினைக்கிúன். ஆனாலும் அவங்ககூட ரொம்ப நேர்மையா அவ பழகியிருக்க முடியாதுன்னே தோணுது. ராத்திரி வெளிமுத்தத்துலே அவிச்ச வேர்கடலையை பொக்குபொக்குனு உடைச்சிக்கிட்டே ஒவ்வொருத்தன் பண்ணக் கூத்தையும் கிசுகிசுப்பா


ஒரு கவிதை தொகுப்பு!

 

 “சார்…! இந்தாங்க சார், என்னோட அஞ்சாவது கவிதை தொகுப்பு.” என்று ஒரு புத்தகத்தை நீட்டி “படிச்சு பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க!” என்று புன்னகைத்தான் விமல். இவனால் எப்படி இப்படி கவிதைகளை எழுதித்தள்ள முடிகிறதென்று வியப்பாக இருந்தது. “நீ நிலா, நானும் நீயும் செல்வோம் தேவ உலா!” இப்படி, லா-லா என முடித்து, இயைபுத் தொடையை அவன் கையாண்ட வலிதாங்காமல் தமிழ்த்தாயின் மேனியெங்கும் புண்ணாகியிருக்கும் இந்நேரம். அவனுக்குள் காதல் பொங்கிப் பெருகுவதென்னவோ உண்மைதான். அந்தக் காதல் ஒருபோதும்