கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 11, 2014

5 கதைகள் கிடைத்துள்ளன.

இடம் வலம்…

 

 இடதுக்குத்தெரியாமல் வலது கையில் ஒட்டிக்கிடக்கிற மண் துகள்கள்உதிர்ந்துவிடுகின்றன,கையில்மெலிதாயும்அடர்ந்துமாய்இருக்கிறபூனை முடிகளிலிருந்தும்அதுஅல்லாத வெற்று இடங்களில் இருந்து மாய்/ கையில்அடர்ந்து நிற்கிற மென் முடிகளை எடுத்துவிடலாம் ஷேவிங் பண்ணும்போதுஎனநினைப்பதுண்டு வெயில் நேரங் களிலும் அதிகமாய் வியர்த்து உப்புப்படிந்து விடுகிற பொழு துகளிலுமாய்/ஆனால்என்ன தான்கறாராகமுடிவெடுத்தாலும் அதை அமுல் செய்ய நினைக்கையில் வருகிறமனப் பிணக் கும் இன்ன பிறவுமாய் ஏதோதோ யோசிக்க வைத்து எடுத்த முடிவை அமல்படுத்தவிடாமல் செய்து விடுகிறதுதான். மென்மைபூத்தசிறுசிறுபூக்களைப்போலபூவோகாயோகனியோ ஒட்டியவையும்எடுத்தவையும்உதிரத்தானேவேண்டியிருக்கிற து. இடம் முழுவதுமாய்பூத்துக்கிடக்கிற பூக்களாயும் முளைத் துத் தெரிகிற செடிகளா


சிவப்புப் புள்ளிகள்

 

 அவளுக்கு அன்றுதான் முதல்நாள் வேலை. மிகவும் உற்சாகமாக இதுநாள்வரை தனக்காகவும் தொழிலுக்காகவும் கற்றதெல்லாம் பயன்படப்போகிறது என்பதை நினைத்துத் தனக்குத் தானே ‘ஷபாஷ்’ சொல்லி தட்டிக் கொடுத்துக் கொண்டாள் கலைமதி. தலைமையாசிரியர் அவளைத் தன் அறைக்கு அழைத்து, “பாரம்மா, அட்டவணையெல்லாம் பார்த்தாச்சா? நீ சொல்லிக் கொடுக்க வேண்டியது ஐந்தாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் கணிதமும் அறிவியலும். புரிஞ்சதா?” என்று ஆகக் கடைசியாகத் திட்டவட்டமாகக் கூறினார். “ஆம், விளங்கிருச்சு சார். இப்போது என்னுடைய பாடம்தான். ஐந்தாம் வகுப்புக்குக் கணிதப் பாடம்,”


வாளி

 

 குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது. செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏறியபோது போக வேண்டிய இடம் துல்லியமாக மனதில் இருந்தது. வண்டிக்குள்ளே இரைச்சலும், வியர்வையும் பக்கத்தில் நின்றவன் மூச்சில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த பூண்டு நெடியும் அவனைக் குழப்பமடைய வைத்திருந்தன. போதாக்குறைக்கு நடத்துனர். மீசை மழித்த அவர் முகம் கண்டிப்பையும், எந்த ஒழுங்கீனத்தையும் பொறுத்துக் கொள்ளத் தன்னால் முடியாது என்பதையும் காட்டியபடி இருந்தது. மீசைக்காரர்களிடம் தென்படும்


அவன் அப்பிடித்தான்..

 

 சத்தியனின் மனம் வெம்பியது. அவன் கைகளின் நடுக்கதை, கையிலிருந்த சிகரெட் நுனிச் சிதறல்கள் காட்டிக் கொடுத்தன. அவன் கண்கள் அடிக்கடி வீட்டினுள்ளே புகுந்து வெளியேறின. தான் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம் என்ற உணர்வு, அவனை அங்குமிங்கும் நிலையின்றி உலவ வைத்தது. தன் நிலை மெல்ல உணரப்பட அவனிடமிருந்து நீண்டதொரு பெருமூச்சு வெளியேறியது. மெதுவான அந்தப் புற்தரையில், வெறும் காலோடு நடப்பது சத்தியனுக்குப் பிடித்தமான ஒன்று. இன்று காலைகூட அவன்தான் பின் தோட்டப் புற்தரையை அழகாக வெட்டிவிட்டிருந்தான்.


கொள்ளெனக் கொடுத்தல்

 

 அந்த பெரியவர் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். பாலர் பள்ளிக்கு வெளியே இருந்த இருக்கைகளையும் அதற்கு கீழேயும், சற்று தள்ளி சுவரின் மூலையில் இருந்த பச்சை நிற குப்பைத் தொட்டிக்கு உள்ளேயும் பார்த்த படி இருந்தார். எப்படியும் எழுபது வயதிற்கு மேல் இருக்கும். தலைமுடி கருப்பு நிறத்திலிருந்தாலும் தோல் சுருக்கங்களும், களைப்படைந்த கண்களும் வயதை தெள்ளெனக் காட்டின. காக்கி கால் சட்டையும் ‘அன்பு நிரத்தரமானது’ என்று பொருள்தரும் வார்த்தைகள் கொண்ட வெளிர் நீல டீசர்ட்டையும்