கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 3, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

அடிபம்பும், கார்சியா மார்க்வெஸ்ஸும், புல்புல்தாராவும்

 

 ஒரு மணிக்கு அலாரம் அடித்தபோது சமையலறையில் கரகரவென்று ஸ்டவ் நகர்கிற சத்தம். சபேசன் எழுந்து விளக்குப் போடாமல் அங்கே போனான். மண்ணெண்ணெய் வாடை தூக்கலாக வ்ர, படைப்பைக் கல் மேடையில் ஸ்டவ் மூன்று தடவை ஒரு காலை உயர்த்தித் தட்டிவிட்டு ஓரமாக திரும்பிக் கொண்டது. அம்மா வந்திருக்கிறாள். ‘சீக்கிரம் வாளியை எடுத்துட்டுக் கீழே போ..வாிசை பொிசாயிடும்.. ‘ ஸ்டவ் காலில் அவள் பொறுமையில்லாமல் பேசினாள். ‘போய்ட்டுத்தானே இருக்கேன்.. ‘ சபேசன் சலித்துக் கொண்டபடி சமையல் மேடைக்குக் கீழே


திருஷ்டி

 

 “போன வேகத்திலேயே திரும்பி வர்றியே. என்னடா ஆச்சு?” அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள். “வாசல்ல பக்கத்து வீட்டுப் பாட்டி நின்னுகிட்டு இருக்கு” வருண் எரிச்சலுடன் சொன்னான். “சனி கூட ஏழரை வருஷத்துல விட்டுடும். ஆனா இந்தக் கிழவி நம்மள விடற மாதிரி தெரியலை” அம்மா அலுத்துக் கொண்டாள். பக்கத்து வீட்டுப் பாட்டியைப் பார்த்தால் அவர்கள் எல்லோருக்கும் பயம். பார்ப்பதற்கு குள்ளமாக, ஒடிசலாக இருக்கும் அந்த விதவைப் பாட்டியின் கண்களில் முக்கியமான சில தருணங்களில் படுவது பிரச்சினையை விலை கொடுத்து


உழவு

 

 ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் விரிந்துக் கிடக்கிறது நெற் பயிர். கதிர் முற்றி விட்டதால் பசுமை குறைந்து தலை சாய,, அறப்புக்கு தயாராய் படுத்துக் கிடக்கிறது.. சற்று தூரத்தில் அறுவடை இயந்திரம் ஒன்று அசுரனைப் போல் காத்திருக்கிறது,துவம்சம் பண்ணுவதற்காக… நாலஞ்சி வருசமாகவே இந்த பக்கம் சரியான மழையில்லாம வெள்ளாமை அத்துப் போச்சுது. ஏதோ புண்ணியவசம்.இந்த வருசந்தான்


இரவல் தீர்வுகள்!

 

 வழக்கமாக வரும் காய்கறி வண்டியை எதிர்பார்த்து வாசலில் நின்ற ஜானகிக்கு எதிர் வீட்டு வாசல் பார்வையில் பட்டது. ‘மீனாட்சி இன்றைக்கு ஆபீஸ் போகவில்லையா?’ என்று யோசித்தாள். அதே நேரம் மீனாட்சியும் ஜானகியைப் பார்த்துவிட்டு, சோகையாய்ப் புன்முறுவலித்தாள். “லீவா இன்னைக்கு…” என்று கத்தினாள் ஜானகி. “ஆமா மாமி!… உடம்பு சரியில்லை…” “மத்தியானமா வாயேன்!…ராஜா ஸ்கூலுக்குப் போயிட்டானா?…” “ம்” என்று தலையசைத்தாள் மீனாட்சி. ஜானகி. ஐம்பது வயது முடிந்து விட்டது. மீனாட்சிக்கும் அவளுக்கும் இருபது வயது வித்தியாசம். எதிர் வீட்டில்


கருணையினால் அல்ல!

 

 உச்சி வெய்யில். ஒரே சனம். கோவில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. கடைசிநாள் பூசை. ஒலிபெருக்கியில் இடைவிடாது மந்திரங்கள் ஒலிக்கின்றன. கோயிலின் உள்ளே நகரமுடியாதிருந்தது. ஒரு கர்ப்பிணிப்பெண் கஸ்டப்பட்டு உள்ளே புகுந்து சென்றாள். ‘வழி! வழி!!” என்று சத்தமிட்டபடியே ஐயர் ஒருவர்போனார். கோயிலின் உள்ளே அர்ச்சனைக்காக ஒரு சிறிய வரிசையும், வெளியே அன்னதானத்திற்காக ஒரு நீண்ட வரிசையும் காத்திருந்தன. சாப்பாட்டை எடுத்துக் கொண்டு நிழலுக்காக இடம் தேடி, தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த பந்தலுக்குள் ஒதுங்கினேன். திடீரென்று சலசலப்பு.