கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 1, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்

 

 அந்த அறைக்குள் சிண்டரெல்லாவையும்,ஹிட்லர் பாட்டியையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.அரிவை சிண்டரெல்லாவின் பார்வை பழமை மாறாத ஹிட்லர் பாட்டியின் மேல் படிந்தது. ஹிட்லர் பாட்டி எந்த நேரத்திலும் தன் கடைசி மூச்சைவிட தயாராக இருந்தாள்.பெருமளவு தோலை எலும்பு விழுங்கியிருந்தது.எலும்புகள் துருத்திக்கொண்டு சற்றே அதிகப்படியாய் குழி விழுந்த கன்னங்களோடு இருந்த அவளைப் பார்க்கையில் மருத்துவத்துறை மாணவர்களுக்கு மத்தியில் கிடத்தப்பட்ட மனித எலும்புக்கூட்டுக்கு கைலி,இரவிக்கை போர்த்தி விட்டது போலிருந்தாள்.சிண்டரெல்லாவுக்கு அவளை அந்தக் கோலத்தில் பார்க்கும்போதும் பயம் எள்ளளவும் குன்றாமல்தான் இருந்தது.


பிதா மகன்கள்

 

 அகிலா அப்பாவை நினைத்துக் கொண்டாள். அப்பாவின் அன்பு நினைத்துப் பார்க்கவும் இயலாதது. அவர் ஒருநாளும் தன் மனம் கோனவிட்டதில்லை. அது பிரச்சினையில்லை. தன் மனசில் இருப்பதைத் தெரிந்துதான் சந்தோசப்படும்படி அதை முடித்துத் தருவதில் அவரை மிஞ்ச இன்னொரு அப்பா என்று யாரும் கிடையாது… ஒரு நாள் அப்படித்தான் நடந்தது… வீட்டுக்கு எதிரில் ஒரு பொட்டல் மாதிரி இருக்கும். மார்கழிக் குளிரில் குடிசைகளில் இருக்கிற சின்னப் பையன்கள் குளிரைப் போக்க குப்பைகளை செத்தைகளை எரிக்கிறதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது


குழல் விளக்கு

 

 சாவி வாங்க வேண்டி வந்ததினால் அங்கு வந்தேன்.இல்லையெனில் வந்திருக்க மாட்டேன். ஒரு டீ நாவின் சுவையறும்புகள் மீது படர்ந்து தொண்டைக் குழி வழியாக இறங்கி சுவை கொடுக்கிறதாக அல்லது திருப்தியோ, மன நிம்மதியோ கொள்ளச் செய்வதாக காளியம்மா வீடு, பெருமாள் சாமி டீக்கடை,சிந்திக்கிடந்த மண் விரிந்து கிடந்த சாலை. அழகர்சாமி டீக்கடை, எல்லாம் கடந்து பஸ்டாப்பிற்கு போன ஐந்தரை மணிப்பொழுதிற்கெல்லாம் இப்பொழுது நீங்கள் ஊர்ப்போக பேருந்து இல்லை. இன்னும் கால் மணியிலிருந்து 20 நிமிடங்கள் வரை ஆகலாம்.


அடக் கடவுளே !

 

 எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். நாக்குல சனிம்பாங்களே, அது நமக்கு இருக்கு போல. எம் மச்சான் தண்டபாணியாலத் தான் அது எனக்கு தெரியணும்னு இருந்திருக்கு. ‘கவலையை விடுங்க மாமா, நீங்க எங்க போகப் போறீங்க பாருங்க’ன்னானே, அப்ப ‘ஜிவ்’வுன்னு பறந்தவன், இப்படி ‘பொதேர்’னு விழுவேன்னு நினைக்கவே இல்லை. ‘தங்கத் தேர்’ தினமும் 8 மணிக்கு ‘உண்மை’ சானல்ல வர்ற ஸீரியல். அதை பாத்தே ஆகணும் எனக்கு; இல்லேன்னா தலை வெடிச்சுடும். அன்னைக்கு அதைப் பாத்துக்கிட்டிருக்கும் போது


புழுவல்ல பெண்

 

 “வேலையிலிருந்து வீடு திரும்ப இவ்வளவு நேரமா? ஆறரை மணிக்குப் பள்ளிக்கூடம் விடுது. இப்போ என்ன மணி, பாத்தியா?” இரண்டு பஸ் பிடித்து, இரவு எட்டு மணிக்குமேல் வீடு வந்திருக்கும் மனைவிக்கு வழியில் என்ன அசௌகரியமோ என்ற ஆதங்கம் கிஞ்சித்தும் இல்லை கேசவனிடத்தில். `இவள் எப்போது சமையல் ஆரம்பித்து, நான் எப்போது சாப்பிடுவது!’ என்ற வயிற்றுப்பசியே அப்போது பிரதானமாகப்பட்டது. ஒன்றும் பேசாது, அவனெதிரிலேயே நின்றபடி இருந்தாள் விமலா, தன் நைலக்ஸ் புடவையின் நுனியைத் திருகிக்கொண்டு. வார்த்தைக்கு வார்த்தை எதிர்பேச்சுப்