கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2014

100 கதைகள் கிடைத்துள்ளன.

கடற்கல்லறைகள்

 

 இராமேஸ்வரம் வந்திறங்கியப்போது, காலை ஏழ மணி, மஞ்சள் வெயிலும், கடலின் நிற்காத ஓசையும் எங்களை வரவேற்றது. முதல்முறை இங்கு வருகிறேன், அதுவும் அம்மாவின் வேண்டுதல் மற்றும் வற்புறுத்தல்களால். இராமநாதபுர ஜில்லாவின் கோடை வெயில் மகத்துவத்தை ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தால், அம்மாவின் ஆசையை மூன்று மாதங்களாக கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் ஆசையே ஏக்கமாகி அம்மாவின் முகத்தில் வடுக்களாக பதிய ஆரம்பித்தபோது, சரி இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று முடிவெடுத்து இன்று வந்தாகிவிட்டது. கோவில் புனஸ்காரங்களையெல்லாம் முடித்துவிட்டு இன்றிரவே சென்னைக்கு இரயில்


டோக்கன் நம்பர் 24

 

 ஆரார் மிதுன் Subject: டோக்கன் நம்பர் 24 கதை: India சில நேரங்களில், நாம் ஒருவருக்கு உதவுவதாக நினைத்து செய்யும் செயல்கள் வேறு சிலரைப் பாதிப்பதோடல்லாமல் அவர்களின் எரிச்சலையும் சம்பாதித்துக் கொடுக்கக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை. எந்த சூழ்நிலையிலும், கொஞ்சம் யோசித்து, நிதானமாக செயல்பட்டால், முடிந்தவரை இம்மாதிரியான இக்கட்டான நிலைமைகளை நம்மால் தவிர்க்கமுடியும். —————– நேற்று காலை என் மகள் ஜானவி – பி.இ. முடித்துவிட்டு மேற்கொண்டு படிப்பதா அல்லது வேலைக்குச் செல்வதா என்று இன்னும் முடிவு


கேதம்

 

 சூரியன் உதிக்கத்தொடங்கியது… மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஒலித்த ஒப்பாரி ஓலம் சற்றே தணிந்திருந்தது… பெண்கள் தொண்டை வற்றியவர்களாக எச்சிலை விழுங்கியபடி, வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தனர்… வாசற்படியில் அமர்ந்திருந்த வைரவனும் கூட தன்னிலை மறந்தவனாய் வானத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்…. வாசலில் புழுதியை கிளப்பியபடி வந்து நின்ற அம்பாசிடர் காரிலிருந்து, வைரவனின் சின்ன தங்கச்சி இறங்கி, நடையும் ஓட்டமுமாக மார்பில் அடித்தபடி வீட்டிற்குள் நுழைய, பழைய ஓலம் மீண்டும் ஒப்பாரி வடிவில் தொடங்கியது… “ஐயா…. என்னப்பெத்த ராசா….


விநாடி முள்ளின் நகர்வுகள்…

 

 அப்பாக்களின் இறப்பு தவிர்க்க முடியாததும் நடப்பதும் தான் என்றாலும் கூட அவர்களின் இழப்பு எற்படுத்திவிட்டுச் செல்கிற வெற்றிடம் மிகப் பெரியாதாகவே. நண்பரின் அப்பா இறந்து போகிறார் ஒரு அதிகாலைப் பொழுதாக என போன் வந்த வேலை காலை 8.00 அல் லது 8.05 இருக்கலாம், என்ன இப்பொழுது ஐந்து நிமிடம்முன்னப்பின்ன,,,என்கிறசொல்லாக்க ங்களை கடிகாரங்களும், நேரம்காட்டிகளும் ஏற்றுக்கொ ள்வதில்லை. வட்ட வடிவ கடிகாரத்திற்குள்ளாய் அடைபட்டுக்கிடந்த முட்கள் மூன்றும் சிறியது, பெரியதும்,விநாடி முள் எனவுமாய் தனி ரகம் காட்டி ஓடிக்


ஆண் குழந்தை

 

 “ மூணாவதும் பெண் குழந்தையா?….இனி என்னடா செய்வது?…..ஸ்ருதிக்கு ஆண் குழந்தை பாக்கியமே இல்லே!….நீ பேசாமே உங்க அத்தை பெண் மாலதியை இரண்டாம் தாரமா செய்துக்கோ!….உன் அத்தையும் பெண் கொடுக்க தயாரா இருக்கா!….நம் சொத்துக்கும், குலத்திற்கும் ஒரு ஆண் வாரிசு கட்டாயம் வேண்டுமடா!….நீ குழந்தையைப் பார்க்க திருச்சி போகும் பொழுது ஸ்ருதியிடம் எப்படியாவது சொல்லி ….அவ சம்மதத்தை வாங்கி விடு….மத்ததை நான் பாத்துக்கிறேன்!…..” “ ஏம்மா!….ஸ்ருதி பெண்ணியம் அது இதுனு பேசற படிச்ச புதுமைப் பெண்!….இந்த விஷயத்தை அவளிடம்