கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2014

100 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னை விடமாட்டேன்

 

 அன்று அவனது பிறந்தநாள். அந்நினைவில் விரக்திதான் எழுந்தது சுப்பையாவிடம். அவனுடைய மகன் மோகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள். `இப்போது எத்தனை வயதிருக்கும் மோகனுக்கு? பத்தா?’ மனக்கணக்குப் போட்டுப் பார்த்தபோது, துக்கம் பீறிட்டது சுப்பையாவுக்கு. ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த பிளவு சரியாகிவிடும், தன் பிள்ளைக்கு ஒரு அப்பா வேண்டும் என்பதற்காகவாவது நந்தினி தன்னுடன் ஒத்துப்போவாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு ஏமாற்றம்தான். அவளைச் சொல்வானேன்! தான் இருந்த இருப்புக்கு இப்படி ஒரு துணையை தேடிக்கொள்வது சரியா என்று முதலிலேயே யோசித்து


காரி

 

 ஊரே மந்தையில் திரண்டிருந்தது. அந்த ஊரின் கோயில்மாடு காரி காலமாகி கண்மூடி பட்டியக்கல்லில் கிடந்தது. ஊரில் இண்டு இடுக்கு விடாமல் அத்தனை இடங்களிலும் துக்கம் அப்பிக் கிடந்தது. வயதான ஆண்கள் அழுகையை வாயில் துண்டை வைத்து அடக்கிக் கொண்டிருந்தனர். கிழவிகளும், பெண்களும் ஒப்பாரி வைத்து மாரடித்துக் கொண்டிருந்தனர். இளவட்டங்களோ தங்கள் நண்பனை இழந்தைப் போல துடிதுடித்து நின்றனர். இப்படி ஊரே உயிரற்றுப் போனது போலப் பரிதவித்துக் கிடந்தது. ஊரில் அன்று யாரும் வேலைவெட்டிக்குப் போகவில்லை. காரி இறந்த


தாமரைக் குளம்

 

 எப்பொழுதும் போல் அன்றும் பள்ளி முடிந்தவுடன் தோழிகளுடன் மிதிவண்டியில் வீட்டுக்கு செல்லத் தொடங்கினாள் கலைச்செல்வி, பள்ளியில் இருந்து அவளது வீடு சுமார் 9.5 கிலோமீட்டர் இருக்கும்.ஆம்,அவள் வசிப்பது கிராமம் தான், படிப்பது பண்ணிரெண்டாம் வகுப்பு என்பதால், சிறப்பு வகுப்பு எல்லாம் முடிய எப்படியும் மாலை ஆறாகிவிடும். அதைப்பற்றி அவளுக்கு கவலையோ பயமோ இல்லை, தோழிகள் துணைக்கு இருக்க..!! ஆம், தோழிகளின் துணையுடன் பாதைகள் பளிச்சிட்றது, நாலு கிலோமீட்டர் வரை. அதன் பிறகு அவள் தனிமையில் அவளது பயணம்


அன்புடன்…

 

 பதற்றத்தோடு அங்குமிங்கும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை அடைவதற்காக. ஆனால் அதுவோ அங்கிருந்த எல்லோரின் கைக்கும் மாறி மாறிச் சென்றது. வகுப்பறையிலிருந்த சிறுவர்கள் வாசுவை வெறுப்பேற்றுவதற்காக அவனுடைய நோட்டை மாற்றி மாற்றிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் இந்த முத்துவால் வந்தது, என்று மனசுக்குள் திட்டிக்கொண்டு கண்களில் லேசாக ஈரம் கசிய, “குடுங்கடா…” என்று கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டும், இயலாமையால் முகம் கோண, அழும் தோரணையில் எல்லோரின் கைகளை நோக்கியும்


பட்ட மரம் துளிர் விடுமா?

 

 சண்முகத்திற்கு வசதிக்கு குறைவு இல்லை. அவனுக்கு சாதியினர் பலம், உடல் பலம், பணபலம் எல்லாம் இருந்ததால் தெனாவெட்டு அதிகம்! அந்தக் காலனியில் யாரையும் மதிக்க மாட்டான். எந்தப் பிரச்னை வந்தாலும் அடாவடியாகத் தான் பேசுவான். அதனால் எல்லோரும் ஒதுங்கிப் போவார்கள். அவனைக் கண்டு எல்லோரும் பயந்து கொள்வதாக நினைத்து சண்முகம் பெருமை பட்டுக் கொள்வான் உண்மையில் சேற்றில் புரண்டு விட்டு சகதியோடு எதிரில் ஒரு பன்றி வந்தால், தங்கள் மேலே சகதி பட்டு விடக் கூடதென்று ஒதுங்கிப்