கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2014

100 கதைகள் கிடைத்துள்ளன.

ஏகபத்தினி விரதம்

 

 வானத்தில் நட்சத்திரங்கள் பூத்துவிட்டனவா? இரவு வந்துவிட்டது. ஓட்டை விழுந்த மேகம், பொய்யான மினுக்கங்கள். ஜன்னற் கம்பிகளின் வெளியே நிலா சிரிக்கின்றது. மயக்குகின்ற சிரிப்பு. விடிவதற்கு முன்னர் மறைந்துபோய்விடும். ஜன்னற் கம்பிகள்… உள்ளேயும் ஒரு சிறைத்தன்மையை உணர்த்துகின்றன. அவளும் இந்த இதயத்தினுள் சிறைப்பட்டிருந்தாள். அவளுடைய நினைவு வந்தபின்னர் இந்த வானத்தையும் நிலாவையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்த நிலவுக்கு முன்னால் அவள் மிதந்து வருவாள். அப்படியே ஜன்னற் கம்பிகளை ஊடறுத்து நுழைந்துகொண்டு இந்தக் கண்களினுள்ளும் வந்துவிடுவாள் – கண்கள் தான்


விடுதலை…?

 

 அந்தச் சத்தம் மீண்டும் இவனைச் சங்கடப் படுத்தியது. பெரும்பாலும் நினைவிலேயே இருந்து கொண்டிருக்கும் விஷயம். அனுதினமும் கண்கொண்டு பார்க்கும் விஷயம். மனதை இன்றுவரை விடாமல் தொந்தரவு செய்யும் விஷயம். வாழ்க்கையில் சிலவற்றை அப்படிச் சட்டென ஒதுக்கிவிட முடிவதில்லை. அலுவலகப் பயணம் முடித்து அப்பொழுதுதான் திரும்பியிருந்தான். வீட்டுக்கு வந்தவுடனேயே வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. இப்டிப் படிலெல்லாம் அசிங்கப்படுத்தி வச்சா என்ன செய்றது? உங்க அப்பாவக் கொண்டு ரோட்டுல விடுங்கோ….என்னால கூட்டி அள்ள முடியாது தோட்டி மாதிரி….வீட்டுக்குள்ளயேன்னு எல்லாமும் ஆயிப்போச்சு….


தல புராணம்..!

 

 மே மாதத்தின் உக்கிரமான வெயில்,காலை பதினொரு மணிக்கே சுட்டெரித்துக் கொண்டிருந்தது.அனல் பறந்து கொண்டிருந்த சாலையில்,எதிரே வரும் வாகனங்கள் நீரில் மிதந்து வருவதுபோல நெளிசல்களுடன் வந்து, தம்மைக் கடப்பதை வேடிக்கை பார்த்தபடி,குளிரூட்டப்பட்ட காரின் முன் இருக்கையில், பவித்ராவும்,சீனுவும் அமர்ந்து கொண்டிருந்தனர். “அப்பா..பொள்ளாச்சிக்கு இன்னும் 12 கி.மீ..ன்னு போட்டிருக்கு..,அங்க போய் எனக்கு கூல்டிரிங்ஸ் வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கே..ஞாபகம் வெச்சுக்கோ..!” காரினை ஓட்டிக் கொண்டிருந்த வேல்முருகனை, சீனுவின் குரல் உசுப்பியது. பின்பாட்டு போல.. “எனக்கும் வேணும்..” மகள் பவித்ராவின் குரல். சாலையிலிருந்து


தண்ணீர் சிறுவன்

 

 அந்தி சாயும் வேளையில், அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வெள்ளை அரண்மனை போல தோற்றமுள்ள அந்த கட்டிடத்தின் பின்புறத்தில், பெரிய மைதானத்தில் அலங்கார மேடை போடப்பட்டிருந்தது. வளாக நுழைவு வாயில் முதல் மேடை வரை மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வளைவுகள், தோரணங்கள், வசதியான நாற்காலிகள், வி.ஐ.பி. சீட்கள் என ஆடம்பரமாக இருந்தது. மேடையின் மீது நான்கைந்து குஷன் நாற்காலிகள் வரிசையாக போடப்பட்டு, அதற்கு முன் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலும், சில காகிதங்களும், டீப்பாயின் மீது வைக்கபட்டிருந்தது.


யாழினியுடன் மாலை பொழுதின் மயக்கத்தில்

 

 மாலை பொழுதின் மயக்கத்தில் இசைச்சாரல் வானொலி வாயிலாக உங்களோடு இணைந்து இருப்பது உங்கள் யாழினி. இந்த இரவு நேரத்தில் உங்கள் கவிதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்க முதல் காதல், கவிதை, காதலி , இணைந்த காதல் , பிரிந்த காதல், தொலைத்த காதல் , தொலைந்த காதல் இப்படி நீங்க எழுதிய, எழுதி டைரியில் மறைத்து வைத்து எப்பவாது யாருக்கும் தெரியாமல் இரகசியமா நீங்க மட்டும் உங்க மனசுக்குள்ள படித்து உங்கள் கடந்த காலத்தை அசைபோடும்