கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2014

100 கதைகள் கிடைத்துள்ளன.

கண்டேன் கர்த்தரை!

 

 (கடவுளைக் காண முடியுமா? ஒரு ஆத்மார்த்தமான தேடலைப் பற்றிய கதை) நாளை கிறிஸ்துமஸ். ஜான் டேவிடின் இன்றைய தேவாலயப் பணிகள் முடிந்து விட்டன. மக்கள் திரளாக வர இன்னும் சில மணி நேரங்களாவது ஆகும் என்று மனதில் கணக்குப் போட்ட ஜான் டேவிட் தன் புதிய கிறிஸ்துமஸ் உடையை ப்ளாஸ்டிக் பையில் எடுத்துக் கொண்டு தேவாலயத்தின் பிரார்த்தனை மண்டபத்தில் நுழைந்தான். அங்கு ஒரு சில பணியாளர்கள் மின்விளக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். பிரார்த்தனை மண்டபத்தின் வாயிலுக்கு அருகே உள்ள


வலி!

 

 விடாமல் அடித்த போனை கல்பனா தான் எடுத்தாள். திருப்பூரிலிருந்து சித்தி மகள் பேசினாள் “அக்கா!….அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்….காலமாகி விட்டார்….” “அப்படியா?…..அட அடா.!…எப்ப எடுப்பாங்க?” “மாலை ஆறு மணி ஆயிடும்!……” “சரி!…நான் வந்து விடுகிறேன்…நேரில் பேசிக்கலாம்!” இரண்டு மாதம் கழித்து இரவு பத்து மணிக்கு மேல் போன். கல்பனாவின் கணவர் ராஜசேகரன் தான் போனை எடுத்தார். கோவையிலிருந்து அவருடைய பெரியப்பா மகன் சுந்தரம் பேசினார். “அண்ணா….அம்மா காலமாகிட்டாங்க.!…” “அப்படியா?…” அதற்குள் கல்பனா புருஷன் பக்கத்தில் வந்து என்ன ஏது


இளமையின் ரகசியம்

 

 குண்டுகளில் பலவகை உண்டு. வெடிக்கக்கூடிய குண்டுகளைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. இது ரசிக்கக்கூடிய குண்டு. அழகிய குண்டு. அந்த வகையைச் சேர்ந்தவள்தான் அசியா. வழமையாக அவள் அணியும் உடலிறுக்கமான காற்சட்டையும் மேற்சட்டையும் அவளது குண்டு போன்ற தோற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம். அசியாவைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது, இந்தோனேசியாவில். தினமும் மாலை ஐந்து மணியளவில் அவள் வேலை செய்யும் ரெஸ்ரோரண்டிற்கு முன்னே அசியா காணப்படுவாள். ஒரு பெண், தான் பணிபுரியும் ரெஸ்ரோரண்டின் முன்னே தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற் காணப்பட்டால்,


கொக்கு

 

 என்றும் இல்லாத அளவுக்கு அன்று, வெயில் சற்று அதிகமாகவே வாட்டி யெடுத்தது. மணி மூணு இருக்கும். எதிர் வெயில் கண்ணை பிளக்கத் தொடங்கியது, சரி வீட்டுக்கு கெளம்பலாம்னு பாத்தா, அன்னிக்குன்னு பாத்து எப்பவும் விக்கற ஒன்னு ரெண்டு புஸ்தகம் கூட விக்கல. வேலுக்கு என்ன பண்றத்துன்னு தெரில., சரி, பத்து நிமிஷம் பாக்கலாம், பத்து நிமிஷம் பாக்கலாம்ன்னு ஒரு மணி நேரம் ஆனது தான் மிச்சம். நாலு மணிக்கெல்லாம் வேலுக்கு கண் இருண்டது. தலை சுற்றி, மயங்கி


ஆண்களின் உலகம்

 

 “எல்லாரும்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க! நாம்ப கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செய்து பாப்போமேன்னுதான்..!” நான் கேட்காமலேயே விளக்கம் தந்தாள். அவள் — கமலினி. கலைத்துறைக்காக வைத்துக்கொண்ட பெயர். பெற்றோர் வைத்த பெயர் கோமளம் என்று எங்கோ, எப்போதோ, படித்த நினைவு. “உங்களுடைய எழுத்தை ஒன்றுவிடாமல் படித்திருக்கிறேன், ஆன்ட்டி! பெண்கள் தைரியமாக இருக்கவேண்டிய அவசியத்தைப்பற்றி உங்களைமாதிரி யார் எழுத முடியும்!’ என்று ஏதோ இலக்கிய விழாவில், தானே வந்து பாராட்டினாள். பெருமையுடன், அந்தப் பெண்மேல் பச்சாதாபமும் உண்டாயிற்று. தெரிந்தவர்கள் பலரும்