கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 15, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

கசப்புப் பதனீர்

 

 விஷயம் தெரியுமா உங்களுக்கு? என்படி வந்தாள் செல்லம்மாள். செல்லம்மாளுக்கு எப்படியும் 60 வயதிருக்கும். ஒரு சாயம் போன சேலை, எந்த நித்தில் எப்போது வாங்கியதென்று தெரியாத ஒரு இரவிக்கை. தினமும் நடக்கி விஷயம்தான் இது. காலையில் ரேடியோ கேட்பதுபோல செல்லம்மாவின் செய்தியை பக்கத்து வீட்டிலிருப்போரெல்லாம் கேட்டாகவேண்டும். தினமும், சந்தையில் காய்கறியும், மீனும் வாங்கும்போதே காற்றுவாக்கில் வரும் எல்லா செய்திகளையும் கேட்டு வீட்டுக்கு வந்து ஒலிபரப்புவது தான் செல்லமாவின் பொழுது போக்காய் இருந்தது. என்ன சமாச்சாரம் கொண்டு வந்திருக்கே


யார் அந்த சண்முகம்?

 

 1 திருமணமாகி மூன்றாண்டுகள் ஒய்யாரமாய் ஓடிவிட்டன. என் மருமகள் செண்பகத்தின் வயிற்றில்தான் இன்னும் எந்த மாறுதலும் இல்லை. திருமணத்திற்கு முன்பு இருந்த அதே தட்டை வடிவில்தான் இருக்கிறது. அது கொஞ்சம் உப்பினால்தான் என்னவாம்? பேரனையோ பேத்தியையோ பார்க்க எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? என்னைவிட ஐந்து ஆண்டு இளைய கிழடுகள் எல்லாம் தாத்தா பட்டத்தைத் தலைமேல் சுமந்து கொண்டாடி மகிழுகிற வேளையில் நான் மட்டும் இதோ அதோ என்று மனசுக்கு ஆறுதல் சொல்லிக்கொள்கிறேன். செண்பகம் இருக்கிறாளே, அவள்


நீயே எந்தன் புவனம்

 

 (காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லைத்தான்,ஆனால் என்னவளுக்கு என் மனதில் உள்ளதை ஏதாவது முறையில் புரிய வைக்க வேண்டுமே! ) ரொரன்ரோ ஈற்ரன் சென்ரரில் ரொம்பவும் பிஸியான அந்தப் புத்தகசாலையில் ”வேலன்டையின்” கார்ட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். விதம் விதமான வர்ணங்களில் அவை, இருந்தாலும் எனக்குப் பிடித்தமான, பொருத்தமான வார்த்தைகள் அடங்கிய கார்டைத் தேடிக்கொண்டிருந்தேன். எப்படியும் வேலன்டைன் கார்ட் ஒன்றை, இன்று அவளுக்கு அனுப்பி விடுவது என்ற திடமான முடிவோடு தான் ,இங்கே வந்திருந்தேன். என் மனம்


ஜீவத்தோழமை

 

 விடிந்தும் விடியாத வைகûப்பொழுது. முதல் பஸ், மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்ாடுகி பஸ், நாலைந்து டிக்கட்கள்தான். காலைப்பனி காற்úாடு வந்து சீறுகிது. தடதட, கடகடாவெனப் பேயிரைச்சல் போடுகி தகரக் கூச்சல். பஸ் வேகம் ஜாஸ்திதான். டிரைவர் சீசன் துண்டை காது மûக்க தலையில் கட்டியிருந்தார். கண்டக்டர் கூதல் இல்லாத இடம் தேடி உட்கார, பஸ் அவரைத் தூக்கித் தூக்கிப் போடுகிது. ஊசிகளாகக் குத்துகி கூதல்காற்று. வடிவுக்கு கூதல் தாங்கவில்லை. கிடுகிடுத்தாள். பாவாடைக்குள் கால்களையும் நெருக்கினாள்.


மழை

 

 ‘ஹேய்’ உள்ளேயிருந்து வானுயரத்துக்கு எழுந்த ஒவ்வொரு கத்தலுக்கும் நாராயணனின் மனது உள்வரை போய்த் திரும்பி வந்தது. நிச்சயம் பிரம்மைதான், வெறும் மனதானாலும் நூறு ரூபாய் டிக்கெட் இல்லாமல் உள்ளே அனுமதிக்கக் கூடாதென்று கட்டாய உத்தரவாகியிருந்தது. சிலிர்த்தெழுந்த ùக்கைகளை யாரோ பலவந்தமாய் பிய்த்துப் பிடுங்கியதுபோல் எல்லா ஆரவாரமும் எழுந்த வேகத்திலேயே அவனுக்குள் அடங்கிப்போனது. ‘ஹோய்ய்ய்’, அதற்குள் இன்னொரு ஆரவாரம். முன்னெப்போதையும்விட இது பெரிதாய் இருக்கிது. உள்ளே என்ன நடந்திருக்கும் என்று அவன் நெஞ்சு அடித்துக்கொண்டது. வேùன்ன, சிக்ஸரோ, பவுண்டரியோ,