கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 13, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

பாசம் போகும் பாதை!

 

  “ அசோக்!….எனக்கு ரெண்டு வாரமா உடம்புக்குச் சரியில்லே!……காலையிலே எழுந்திரிக்கும்போதே ஒரே தலை சுத்தல்…….உள்ளங்கால் பூராவும் ஒரே எரிச்சல்……வாயில் புண் வந்து ஆற மாட்டேன்கிறது……..ஒரு வாரமா நெஞ்சு வலியும் இருக்குடா!….வீட்டிலே ஒரு வேலையும் செய்ய முடியலே!…டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்!…..” என்று முணகிக் கொண்டே தன் மகன் அசோக்கிடம் சொன்னாள் பூரணி. “ சரியம்மா!….நீ ஒண்ணும் கவலைப் படாதே!…….டி.பி. ரோட்டிலே ஒரு கார்டியாலிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் இருக்காராம்!…….அவர் ரொம்பக் கெட்டிக்காரர் என்றும் ,அவர் இது விஷயத்தை கவனிச்சாச் சீக்கிரம்


தற்கொலை தான் முடிவு

 

 கல்பனா ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். இன்று தான் அவளது கடைசி நாள், இந்த பாழாய்ப் போன பூமியில். இந்த முடிவில் மாற்றத்திற்கே இடமில்லை. நோயிலும், வேதனையிலும் ஒரு நாளைப் போல சாவதை விட, ஒரேயடியாக போய் சேர்ந்து விடலாம். இது என்ன வாழ்க்கை, ஒரு பிடிப்பும் இல்லாமல், ? இந்த இருபத்திரண்டு வயதில் எல்லா வேதனைகளையும் அனுபவித்தாகி விட்டடது. போதுண்டா சாமி ! இதை விட நிம்மதியாகசெத்து மடியலாம். பாவம் கல்பனா, இரண்டு மூன்று முறை


முரண்

 

 அரசு மருத்துவமனை. வெள்ளை நிறத்தில் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. படுக்கையில் காலில் கட்டுடன் மூர்த்தி படுத்திருந்தான். சவரம் செய்யாத முகம். கண்களில் களையே இல்லை. கலைந்திருந்த தலை அவன் பல நாட்களாக இங்குதான் இருக்கிறான் என்பதைச் சொன்னது. கையில் பச்சை குத்தியிருந்த “லட்சுமி” என்ற பெயரைப் பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன், தன் காலை யாரோ தொட்டுப் பார்ப்பதை உணர்ந்து லேசாகத் திடுக்கிட்டு எழ, அருகில் இருந்த டாக்டர் அவன் காலைத் தொட்டுப் பார்த்தபடி, “வலிக்கிதா மூர்த்தி?…”


சொல்லத்தான் நினைக்கிறேன்

 

 அந்தம்மா வந்தா இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடு… – அவ்வளவு நேரம் கொதித்துக்கொண்டிருந்த அவளின் மனசுக்கு என்னின் இந்த வார்த்தைகள் ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும். ம்ம்…பார்த்தீங்களா…இவ்வளவு நேரமாச்சு…இன்னும் வரலை…என்னன்னு நினைக்கிறது?- வருமா, வராதா? – சுசீலாவின் வார்த்தைகளில் கோபம் கனன்றது. இதிலே நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? இன்னைக்கு அந்தம்மா வேலைக்கு வரலை…அவ்வளவுதான்… ஆமாம், ரொம்ப ஈஸியாச் சொல்லியாச்சு…இது மத்தவாளுக்கும் புரியாதா? திடீர் திடீர்னு வராம இருந்தா எப்படி? அதுதானே கேள்வி. சொல்லிக்கொண்டே அவள் கைகள் அரக்க அரக்கப்


செக்குமாடுகள்…

 

 ‘டொக்டர் மே ஐ கம் இன்’ ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். இரவு ஆரம்பித்த மழை இன்னும் தூறிக்கொண்டிருப்பது ஆஸ்பத்திரி கண்ணாடி யன்னலினூடாக மழுப்பலாகத் தெரிந்தது. மழையினாலோ என்னவோ ஓபீடீ வெறிச்சோடியிருக்க தூறல் மழையின் மெல்லிய ரீங்காரத் தாலாட்டிலே தூக்கம் கண்ணைச் சுழற்றிய போதுதான் இந்த ஆங்கில இடையூறு. ‘யெஸ் கம் இன்’ என்ற எனது பதிலை ஏற்கனவே எதிர்பார்த்துக் காத்திருந்தவன் போல உள்ளே நுழைந்தான் ஓர் இளைஞன். அவனுக்கு இருபத்தி ஐந்து வயதிருக்கலாம்.