கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 10, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

மண்ணு வேணும்டா…

 

 “கால் கிரௌண்டா இருந்தாலும் நமக்குன்னு சொந்தமா மண்ணு வேணும்டா… அத விட்டுட்டு என்னமோ தீப்பெட்டி அடுக்குனமாதி, பிளாட்டு வாங்குறானுங்களாம் பிளாட்டு… எவனாச்சு பிளாட்டு வாங்கிருக்கேன், அது வாங்கிருக்கேன்னுட்டு என்ன வந்து தங்கச் சொன்னிங்க, நல்லா கேப்பேன்… தாத்தா அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான் என்று அப்பா சொல்வார். தாத்தா ஒரு காலத்தில் நல்ல சொத்துக்களோடு வாழ்ந்தவராம். அவருடைய அப்பா எப்போது சொத்துக்களையெல்லாம் விற்று குதிரைப் பந்தயத்தில் தோற்று, ஊர்க்காரர்களின் கிண்டலுக்கு ஆளானாரோ, அப்போதிருந்தே தானும் அந்த அளவுக்கு


மாற்றங்கள்

 

 வண்டியிலிருந்து இங்கும்போதே கேசவன் பார்த்துவிட்டான். கடைசியாக எப்படி விட்டுச் சென்úனோ அப்படியேதான் இருக்கிது. எதுவும் மாறினார் போல தெரியவில்லை. போர்டில் இருந்த எழுத்துக்களில் இருந்து, உதிர்ந்துபோன ஒற்û எழுத்தைத் தவிர. சரியாகச் சொன்னால் கடைசியாக விட்டுச் சென்தும் ஒரு பகல் வேளையில்தான். வெளியே ஒன்ன் மேல் ஒன்ாகக் கவிழ்த்து வைக்கப்பட்ட நாலு டேபிள்கள், மடிக்க முடியாத இரும்பு நாற்காலிகள் ஒன்றுக்குள் ஒன்ாக நுழைத்து வைக்கப்பட்டிருந்த உயரமான மூன்று வரிசைகளாக, எல்லாம் அப்படியேதான் இருக்கின்ன. மரத்தால் செய்யப்பட்ட கவுண்டர்


ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி

 

 வடக்கு தோப்பில் நேற்று தேங்காய் வெட்டு நடந்து தேங்காய்கள் சிதறி கிடந்தன. தேங்காய்களை ஒன்றுசேர்த்து கூடையில் அள்ளி கொட்டத்துக்கு முன் இருக்கும் களத்துமேட்டில் குவித்துக்கொண்டிருக்கின்றனர் ‘மலர்கொடி’ உட்பட ஐந்து பெண்கள். அதை நல்லதும் கெட்டதுமாக தரம் பிரித்துக்கொண்டிருக்கிறான் ‘கிறுக்கா என்ற கிட்ணா’. இவனுக்கு கிறுக்கா என்ற பட்டப்பெயர் வைத்தது கொட்டத்தில் அமர்ந்திருக்கும் இவர்களின் முதலாளி ‘மீனாள்’. கிட்ணா சிறுவயதில் இருந்தே இவர்களின் தோப்பில் ஊழியம் பார்பவன். மீனாளின் கணவன் ‘மட்டியூரான்’ வெளியூரில் படிக்கும் கிட்ணாவின் மகன் பெயரில்


சோற்றுத் திருடர்கள்

 

 ஒரு மனிதன் ஓடுகிறான்… அவனைத் துரத்திக்கொண்டு ஒரு பத்துப் பதினைந்து பேர் ஓடுகிறார்கள் – ‘விடாதே! பிடி!’ என்று கத்தியபடி. ஓட்டப் பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக வெற்றிபெற்ற அந்தப் பத்துப் பதினைந்து பேர், ஓடத்தெரியாத அந்த ஒற்றை மனிதனை ஓடிவிடாமல் கால்கள் பின்னிக்கொண்ட நிலையில் பிடித்துப் பந்தாடி முடித்ததும் – மூச்சுத் திணறும் வாய் குழறலோடு அவன் ஒப்புக் கொள்கிறான், தான் திருடியது உண்மை என்று. அந்த உண்மையை விடப் பெரிய உண்மை – அவனுக்குப் பசி எடுத்ததுதான்!


கற்பில்லாதவன்

 

 “60 வயதுடையவன் 7 வயதுள்ள பள்ளி மாணவியை பாலியல் பலத்காரம் செய்தான்” என அன்றைய நாளின் செய்தியைப் படித்துவிட்டு ராமன் கொதித்துப்படைந்தான். “இவனுங்கயேல்லாம் நடுரோட்டில் நிக்கவச்சு சுட்டுத் தள்ளனும்” என்று தன் கூட இருந்தவர்களிடம் சொல்லினான். “ஆமாண்ணே நீங்க சொல்வது சரிதான்னே” என்றார்கள் ராமனுடன். எப்போதும் சுற்றியே இருக்கும் அடிப்போடிகள். அவன், அந்த ஒரு குறிப்பிட்ட ஜாதி சங்கத்தின் முக்கிய பிரிதிநிதி, எப்போதும் தன் ஜாதி அடையாளம் கொண்ட, கரை வேட்டியே கட்டுவான். அவன் தோளில் இருக்கும்