கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 3, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

அடைத்துக்கொண்ட காதும் அடங்காத நானும்

 

 எஸ்கூஸ்மீ… உங்ககிட்ட கோட்டன்பாட் இருக்கா? மன்னிக்கனும் காதுபஞ்சு இருக்கா? காது கொடையுனும்! என்னங்க அப்படி பாக்குறீங்க! இருக்கா இல்லையா? இல்லனா சொல்ல வேண்டியதுதானே…எதுக்கு இந்த மொறப்பு? காது கொடையுற சுகம் தெரியாத ஆளா இருப்பீங்க போல! அதான் கண்ணுல கடுப்பு கொழுந்துட்டு எரியுது! காது கொடையுறது எவ்வளவு சுகமுன்னு தெரியுமா உங்களுக்கு? கொடைய கொடைய சும்மா கொடைஞ்சிகிட்ட இருக்கனும்னு தோனும் போங்க… என்னையே எடுத்துகோங்க, பொழுது போகலனா உடனே காதக் கொடைய ஆரம்பிச்சுடுவேன். காது கொடையும் போது


ஒரு கோயிலும் இரண்டு பெண்களும்

 

 பிரகாரத்தை மூன்றாவது சுற்று சுற்றிக்கொண்டிருந்த அக்காவை இமைக்காமல் பார்த்தாள் ப்ரியா. அப்படியே இருக்கிாள். இந்த இரண்டு வருடங்களில் கொஞ்சமும் மாற்மில்லை. அமைதியான முகம், சின்னதாய் குங்குமப் பொட்டு, தலையில் கொஞ்சமே கொஞ்சம் மல்லிகை, கையில் பூஜைக்கூடை, அதில் கொஞ்சமும் வெளித்தெரியாது அழகாய் அமைத்த பூ மற்றும் பூஜைப் பொருட்கள், வேகமில்லாத நிதானமான நடை, வாயில் முணுமுணுக்கி ஸ்லோகம் என்று அக்கா மாவே இல்லை. அன்று பார்த்தது போலவே இருக்கிாள். கடவுளே இவளை எப்படி நான் அன்றைக்கு நினைக்காது


அவள் போகட்டும்

 

 அதோ, அவள் போகிறாள். போகட்டும்….. இனி நானிருந்த இடத்தை நிம்மதிக்கு விட்டுக் கொடுக்கிறேன். நிம்மதியே! எனக்கு பதில் நீ அவளோடு இரு. அவள் வாழ்க்கையில் இனி நான் குறுக்கிட மாட்டேன். கண்களைத் தாண்டிச் செல்லும் பிரியாவை போ என்று புத்தி சொன்னாலும், போகாதே என்றல்லவா பாழாய்ப் போன மனசு சொல்கிறது. இந்த புத்திக்கும் மனசுக்கும் இடையில் நடக்கிற போருக்கு பலியானது கண்கள் தானா? என் கண்களில் இருந்து அருவியை ஒத்த கண்ணீர் பெருகுகிறதே! கொஞ்ச நேரம் கழித்து,


கசிவு

 

 ‘நாயோட வாலுல புடிச்சுக் கட்டிவுட்டாப்புலல்ல இந்தப் பய நாலு தெரு சுத்தறான். எதுக்குங்குறே. ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்ல. சும்மாச் சும்மா தெரு அளந்துட்டுத் திரியுறான். நீ ஒருக்காப் போய் தேடிப் பார்த்துட்டு வாயேன் ராசா. காலைல வெளிய இறங்கினவன். பசி தாங்கமாட்டானே புள்ள’ வழமையாக சோறு வடித்து, பானையை இறக்கி வைக்கும்போதே பசியெனக் கத்திக் கொண்டு வந்து நிற்பவனை இன்னும் காணவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த வள்ளித்தாயி, வாசலோடு ஒட்டிய உள்தரையில் அமர்ந்திருந்தாள். அவள் ஏவிய மூத்தவன், அவளது


வழித் துணை

 

 கொழும்பு நகரத்து ஆடம்பரக் கல்யாண விழா ஒன்றில்,சேர்ந்து குழுமியிருக்கிற மனித வெள்ளத்தினிடையே, ஒரு புறம்போக்குத் தனி மனிதனாக விசாகன் கரை ஒதுங்கியிருந்தான் , மணப் பெண்ணுக்குத் தோய, வார்ப்பதைப் படம் பிடிப்பதற்காகப் போயிருந்த வீடியோ படப் பிடிப்பாளர்கள், இன்னும் மண்டபத்திற்கு வந்து சேராததால் ,முகூர்த்தம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.மணவறை முன்னால் ஐயர் வேறு காத்துக் கொண்டிருந்தார். சாஸ்திரம் மீறிய இந்தச் சடங்குகள் , ஒன்று திரண்ட கலியின்ஒரு காலக் கோளாறாய், , கண்ணை எரித்தது விசாகனுக்கு மட்டும்