கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2014

109 கதைகள் கிடைத்துள்ளன.

அருணாசலமும் 40 கழுதைகளும்

 

 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். அருணாசலத்திற்குச் சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை தினமும் வகுப்பில் திட்டுவார்! நீ எல்லாம் ஏன்டா? படிக்கவர்றே! கழுதை மேய்க்கத்தான் நீ லாயக்கு என்றார். பயிற்சி நோட்டைத் தூக்கி வீசினார். அப்பவும் அருணாசலம் சிரித்தபடி நின்றான். தலைமை ஆசிரியர் சங்கரன் வகுப்புகளைப் பார்வையிட வராந்தாவில் வந்தார். “”இவனைப் போல் 40 கழுதைகளை ஏன் ஐயா, பள்ளியில் சேர்த்தீங்க” எனக் கேட்டார் கனகவல்லி டீச்சர். “”இவங்கள்லாம்


அஸ்மியாவின் பயணம்

 

 ”பெல்ஜியம் சென்ட்ரல் மிகவும் கம்பீரமாக இருந்தது. பரபரப்பான வேலை நேரம். பெல்ஜியம், கண்ணாடிக்குப் பெயர் போன இடம். பொதுவாக பெல்ஜியத்தில் இருந்துதான் பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்கள் உலகின் மற்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்னுமொரு விஷயத்துக்கும் பெல்ஜியம் மறைமுகமாகப் பெயர்போன இடம். ஆள் கடத்தல், அகதிகள் கடத்தல்! இவற்றை தமிழர்கள்தான் முன் நின்று நடத்துகிறார்கள். ஆட்களைக் கடத்துவதன் சூட்சுமம் வலுவாகத் தெரிந்தவர்கள் தமிழர்கள். ஹார்பர்களுக்குப் போகும் கள்ளப்பாதைகள், கன்டெய்னர் யார்டுகளுக்கு எத்தனை வரிசை முள் கம்பி அடிக்கப்பட்டிருக்கின்றன,


காதல் எனப்படுவது யாதெனில்?

 

 என்னுரை – ரத்னா: என் பெயர் ரத்னா.. அப்பா ஒரு அரசு ஊழியர். அம்மா இல்லத்தரசி. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்ல புரிதல். மொத்த அன்பையும் கொட்டி வளர்க்க ஒரே ஒரு குழந்தையுடன் நிறுத்திவிட்டார்கள்.. பிறந்த ஒன்றும் பெண்.. அப்பாவோட அம்மாவுக்கு, அதாவது என் பாட்டிக்கு நான் பிறந்ததில் அவ்வளவாக விருப்பமில்லை … அவங்களுக்கு ஆண்பிள்ளை தான் உசத்தி. பெண்ணென்றால் வீண் செலவாம், பிறந்த வீட்டில் தங்கமாட்டாளாம். நான்-சென்ஸ்.. ஆனா அப்பா அப்படி இல்லை.. அப்பாவுக்கு நான் பிறந்ததில்


மறுமலர்ச்சி

 

 அன்று மாலைக் கதிரவன் தனது செங்கீற்றுக்களை அடிவானத்தில் பரப்பிக்கொண்டிருந்த வேளையது. ஹிஷாம் ‘ஷொபிங் பேக்’ ஒன்றில் மரக்கறிகளுடன் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். அடர்ந்து வளர்ந்துள்ள வாழைத் தோட்டத்து நடுவே காணப்படும் அச்சிறிய மண் வீடு வாசற் படியில் நின்றுகொண்டிருந்த அஸ்ரா, தம்பி ஹிஷாம் கையில் சுமந்துகொண்டு வரும் ஷொப்பிங் பேக்கை உற்று நோக்கியவாறு; ‘தம்பி இன்டக்கி சரி சம்பளக் காசி கெடச்சா?’ என்று கேள்வி எழுப்பினாள். ‘இல்ல தாத்தா! தொர என்ன ஏமாத்திகிட்டே இருக்காரு! கடையில சேர்ந்து


விச்சுவுக்குக் கடிதங்கள்

 

 என் அன்பார்ந்த விச்சு, உன் அருமையான கடிதம் கிடைத்தது. ‘அருமை’ என்ற பதத்தை நான் ரொம்ப ரொம்ப யோசனை செய்து உபயோகிக்கிறேன். குழந்தாய்! ‘என் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி’ நீ அந்தக் கடிதத்தில் ஐந்து தடவைகள் திரும்பத் திரும்ப ‘அருமை’யாக எழுதியிருப்பது ஒன்று. இரண்டாவது, நீ மதுரையில் உன் தகப்பனார் வீட்டுக்கு விடுமுறை தினங்களை ஆனந்தமாகக் கழிப்பதற்குச் சென்று, அங்கிருந்து கோடைக்கானலுக்குப் போய் மாசம் ஒன்றரை ஆகியும் கூட, மாமாவுக்கு அருமையாக எழுதும் முதல் காகிதம்


சிலந்திக்கூடுகள்

 

 கொழும்பிலே ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் உதவி இரசாயனப் பகுப்பாய்வாளாராக வேலை செய்து கொண்டிருக்கும் நான் பல வருடங்களுக்குப் பின்பு திடீரென்று ஒருநாள் ஊருக்குத் திரும்பி வந்திருந்தேன். வீட்டுக்கு வந்திறங்கியவுடன் முன்பு ஊரிலே ஒன்றாகத் திரிந்த எனது நண்பர்களில் சிலரையாவது உடனடியாகச் சந்திக்க நினைத்தேன். அவசர அவசரமாகக் குளித்து முடித்து தம்பியின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர் முச்சந்திக்கு புறப்பட்டேன். ‘அட என்ன தம்பி நீங்கதானா இது? நான் வேறு யாரோண்டல்லவா பார்த்தேன்.. முடியெல்லாம் வளர்த்து ஆளே மாறிப்போயிட்டீங்க’ என்று


சித்ராக்குட்டி

 

 நீங்க நல்லா அனுபவிப்பீங்க” சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து கொண்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து அரை பாட்டில் குளிர்ந்த நீரைக் காலி செய்துவிட்டு, ஃபேனை இன்னும் கொஞ்சம் வேகமாகச் சுழலவிட்டு, மீண்டும் கட்டிலில் தன் உடலைத் திணித்தாள். தப்பிச் செல்ல முடியாத ஏக்கத்தில் இன்னொரு தரம் கிறீச்சென்று சப்தமெழுப்பி ஓய்ந்தது அந்த இரும்புக்கட்டில். மீண்டும் தன் கண்களை மூட மிகுந்த பிரயாசை வேண்டியிருந்தது சரோஜாவுக்கு. பகலிலோ இரவிலோ


உலூபி

 

 முன்னொரு காலத்தில் உலூபி என்றொரு வித்தை காட்டுபவன் வாழ்ந்து வந்தான். அவன் ஊரா ஊராகச் சென்று வித்தை காட்டி பிழைப்பு நடத்தி வந்தான். பல்வேறு வித்தைகளைச் செய்து காட்டி மக்களை மகிழ்விப்பதில் அவன் கெட்டிக்காரனாக இருந்தான். கயிற்றின் மீது நடப்பான்! தன் தோள் மீது இருவரை அமர வைத்துக் கொண்டு ஒற்றைக் காலில் பல மணி நேரம் நிற்பான். எப்படிப்பட்ட பூட்டையும் திறப்பான். கண்களைக் கட்டிக் கொண்டு தனக்கு எதிரில் நிற்பவரின் தலையில் வைக்கப்பட்டிருக்கும் பழத்தை இரு


தள்ளு வண்டி

 

 மாடியில் ஜன்னல் வழியாக எதிரே தெரியும் குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ராமர் கோவிலில் ஆண்களும் பெண்களும் வேக வேகமாக பிரதக்ஷ¢ணம் செய்து கொண்டிருந்தார்கள். என் பார்வை கோவிலின் அருகேயிருந்த மைதானம் நோக்கிச் சென்றது.தள்ளுவண்டியில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.உள்ளேயிருந்து என் மனைவி”என்ன வேடிக்கை பாக்கறேள்? என்றவாறே வந்தாள். ஒண்ணுமில்ல,நம்ம ஹரியோட தள்ளுவண்டி வியாபாரத்தப் பாத்துண்டிருக்கேன்.என்னமாத்தான் வியாபாரம் பண்ணறான்! ”ஆமாம்,ரொம்ப நன்னா வியாபாரம் நடக்கறது.பக்கத்தில ஒரு எடம் வாங்கியிருக்கானாம்.சீக்கிறமே அங்க ஒரு கேண்டீன் ஆரம்பிக்கப்போறானாம்.அவன் அம்மா சொன்னா.” என்றாள்


நாய்ப் பிழைப்பு

 

 முன்குறிப்பு: இது, முழுக்க முழுக்க தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மை நிகழ்வு. ஒருவேளை ஏதேனும் அரசு அலுவலகத்தில் நடந்திருந்தால், அதற்கு இந்தக் கதையில் வரும் நாய்கள் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது! அந்த நிறுவனத்தில், நிதித் துறை மேலாளர் கணேசனுக்கு எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு, ‘கறார்’ கணேசன் என்ற பட்டப்பெயரும் உண்டு. அவர் மேசைக்கு ஏதேனும் பணப்பட்டியல் போனால், ‘அது கையெழுத்தாகி வருமா அல்லது கொக்கி போட்டு வருமா’ என்று அனுப்பிய அலுவலர்கள், பிரசவ வார்டில்