கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2014

109 கதைகள் கிடைத்துள்ளன.

நாய்களைப் பற்றிய சில சிந்தனைகள்

 

 நானும் என் ராஜமும் மைத்துனியின் கல்யாணத்திற்குச் சென்று விட்டு உத்தமர் கோவிலிலிருந்து ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஏதோ ஒரு ஸ்டேஷனில் (பெரிய மனுஷர்களைப் போல் இந்த இடத்தில் எனக்கும் ஞாபகம் வர மறுக்கிறது!) பிளாட்பாரத்தின் எதிர்ப் புறமாக இரண்டு சின்னப் பயல்கள் வண்டிக்குள் தாவினார்கள். எட்டு, ஒன்பது வயதுக்குள்தான் இருக்கும்; அரையில் மிக அழுக்கான – ஜலத்தில் நனையாத – வஸ்திரம்தான் உடுத்தியிருந்தார்கள். நாங்கள் இருப்பதையே அவர்கள் லட்சியம் செய்யவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவுடன் அவர்களில்


ஒரு கைபேசி கலவரம்

 

 இரவு மணி 10.00. அறையில் படித்துக்கொண்டிருந்த எனக்கு கை நழுவி புத்தகம் விழுந்தது நான்காவது முறை. இனி படிக்க முடியாது. தெளிவாய்த் தெரிந்தது. விழுந்த புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்து நாற்காலியை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன். கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் என்னவோ ஓடிக்கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய என் மனைவி வள்ளி உட்கார்ந்தபடியே “கொர்ர்’. தட்டி எழுப்பினால் திடுக்கிட்டு விழிப்பாள். அடுத்து… தூக்கத்திற்கு அது கெடுதல். ஆகையால் மெல்ல அவள் தோள்மீது


சின்னச் சின்ன சந்தோஷம்

 

 “”டேக் இட் ஈஸி” என்று கவிதா முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தான் ராமலிங்கம். “”இப்ப நான் என்ன கேட்டேன்னு இப்படிக் கலங்கறே? ஓ காட்!” கவிதா மவுனமாக இருந்தாள். இந்தக் கோடை காலத்தில், “ஸôன்டியாகோ”விலிருந்து சென்னைக்கு வருவது அவருக்குப் பிடிக்காது. வெயில் சுட்டெரிக்கும். அவ்வப்போது லேசான தூறல் விழுந்து பூமி குளிர்ந்தால் கூட, கொசுக்கள் மொய்த்து படையெடுக்கும். உறவினர் வீட்டுக்குப் போவதென்றால் ஆட்டோவில் வீசுகிற அனலும் போக்குவரத்து நெரிசலும்… இருந்தாலும் வேறு வழியில்லை. கணவருடைய அத்தை இறந்து


பூப்பூத்து…

 

 பார்க்கப் போன இடமும் பார்க்கச் சென்ற நபரும் முக்கியப்பட்டுப் போகிறார். அள்ளிச் சிதறிச் சிரித்த விண்மீன்களின் கைபிடித்தும்,அதனுடன் பேசியும் சிரித்தும், உறவாடியுமாய் போய்க் கொண்டிருந்தவன் அமர் ந்திருந்த இரு சக்கர வாகனம் காற்று செல்லும் திசையில் பறந்து கொண்டிருக்கிறது. பறக்கட்டும், பறக்கட்டும் அப்படியே கனம் தெரியாமல் உடல் இலகு வாகி பஞ்சு போல் லேசாகி லேசாகி மேல்,மேல் சென்று விண் மீனகள் கண்சிமிட்டி மிதக்கிற வெண்பஞ்சு பொதிகளுக்குள்ளாய் மிதக்கச்செய்யட்டும், அங்கே சாலை இல்லை,போக்குவரத்து இல்லை. போக்குவரத்து விதிகளோ


விளங்கவில்லை விமலாவிற்கு!

 

 பத்தாம் வகுப்பு பி பிரிவு. தேர்வாகட்டும், வினாடி வினாவாகட்டும், கட்டுரை பேச்சு போட்டியாகட்டும், பரிசை தட்டி செல்லும் மாணவர் உள்ள வகுப்பு. ஆனால் இந்த வகுப்பில் தான் சுட்டித்தனமும் , குறும்பும் வால் தனமும் கொஞ்சம் அதிகம். அன்று உயிரியல் பாடம். ஆசிரியை விமலாவின் வகுப்பு. புதிதாக மாற்றலாகி வந்த ஆசிரியை. அவருக்கு, கேள்வி பதில் மூலமாகத்தான் மாணவர்கள் கவனத்தை ஈர்க்க முடியும், தக்க வைக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை. ஆனால், இந்த பத்தாம் வகுப்பு


முதலிரவு

 

 நீங்களே சொல்லுங்க.. ஒரு வயசுப் பையனுக்கு என்னலாம் ஆசயிருக்கும்…? அட மத்தத விட்டுடலாம், முதலிரவப்பத்தி எப்படிலாம் ஆசபட்டிருப்பான்..? விவரம் தெரிஞ்ச நாள்லயிருந்து எப்படிலாம் கனவு கண்டிருப்பான்..? அட என்ன விடுங்க, நீங்க கனவு காணலையா…? இல்லன்னு சும்மா ஒரு நாகரீகத்துக்காக சொல்லிடலாம், ஆனா உண்மை என்னன்னு உங்க மனசுக்குத்தானே தெரியும்.? இப்பெல்லாம் பசங்க எவ்வவளவு அட்வான்சா இருக்காங்க? கல்யாணத்துக்கு முன்னையே எல்லாத்தையும் பார்த்துடுறாங்க, நானும் தான் இருக்கேனே? ‘தண்டக் கருமாந்திரம்’. சரி கல்யாணத்துக்கு முன்ன எதுவும் இல்லைனா


மரநிழல் மனிதர்கள்

 

 அக்கா சற்று சந்தோஷமான மனநிலையில் இருப்பதுபோலத் தென்பட்டது. இன்று ஷெல்லடிச் சத்தம் இல்லை. இடம் பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பலாம் என்ற அறிவித்தலும் வந்திருக்கிறது. சொந்த இடங்களைப் போல் சொர்க்கம் வேறேது? இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரு தொகைப்பேர் பூரணி மாமி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். இவ்வளவு சனத்தொகையையும் மாமி வீடு தாங்காது என்று சகலருக்கும் தெரியும். ஆனாலும் வேறு வழியில்லை. மாமி முகம் கோணாது எல்லோரையும் ஆதரித்தாள். வேளா வேளைக்கு


கடிகார மனிதர்

 

 கூட்டம் ஆறு மணிக்கு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஐந்து மணிக்கே வந்து விட்டிருந்தார்கள். நேரம் பொன்னானது என்று தெரியாதவர்கள். அவர் மட்டும்தான் குறித்த நேரத்திற்கு வந்தார். மணி ஆறு அடிப்பதற்கும் அவருடைய கார் மண்டபத்துக்கு எதிரே வந்து நிர்ப்பதர்க்கும் சரியாக இருந்தது. அன்று அவருக்குப் பாராட்டு விழா. கடிகாரத்தோடு ஓட்ட ஒழுகும் நெறியை மேற்கொண்டு ஒற்றை வினாடியும் வீணடிக்காமல், தம்முடைய தொழிற்சாலைகளையும் பிற நிறுவனங்களையும் அவர் கண்காணித்து வருவதுபற்றி அவருக்கு அந்தப் பாராட்டு விழா. எளியவராய்ப்


தெருவிளக்கு

 

 ஒரு ஐப்பசி மாதம் மாலை நேரம். மழை பொழிந்து எங்கும் மண்வாசனை வீசிக்கொன்ட்டிருக்க, காந்தள் மலர் போல தூறல் மெதுவாய் விழுந்துகொண்டு இருந்தது. கருமேகங்கள் மழையாய் கரைந்துபோக, வானம் லேசாய் வெளுக்க ஆரம்பித்தது. பறவைகள் வேகமாய் தன் கூடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தன . தேய்பிறை நிலவு வெண்மேகங்களின் உள்ளே இருந்து எட்டி பார்த்தபடி தயங்கி தயங்கி வெளியே வந்தது. ஆறுகள் வந்து சங்கமிக்கும் கடல் போல , நெடுஞ்சாலையில் வந்து இணையும் ஒரு தொடர் சாலையில் உள்ள


தாத்தா லட்டு திண்ண ஆசையா?

 

 இரவு 8.30 மணி!!! தியாகராஜனின் வீடு!!! “டேய் பொன்ராஜ் , தங்கராஜ் சாப்பிட வாங்க ,அப்பா நீங்களும் சாப்பிட வாங்க” என ராமராஜனையும் அழைத்து கொரடா வேலை பார்த்து கொண்டிருந்தார் தியாகராஜன். இட்லி, வடை, பூரி என அனைத்தையும் பரிமாற தொடங்கினாள் அகிலாண்டம் மேஜையில் இருந்த ஒரு பாத்திரம் மட்டும் திறக்காமல் இருந்தது. இதை பார்த்த ராமராஜன் “அகிலாண்டம் அதுல என்ன இருக்கு?” “மாமா அதுல இட்லி தான் இருக்கு, இதுல காலி ஆனதும் எடுத்துக்கலாம்” “தாத்தா