Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2014

109 கதைகள் கிடைத்துள்ளன.

கிராமம்

 

 (ஒரு உண்மைச்சம்பவம்) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான். ஐந்து பிள்ளைகளைப்பெற்றும் தான் தனிமையில் இருப்பதை பெரிதுபடுத்தாமல், உத்யோக காரணங்களுக்காக எல்லோருமே வெளியூரில் இருப்பதை நினைத்தும், சமீபத்தில் மறைந்துபோன தன் கணவரை நினைத்தும் கவலைப்படும் அம்மா, எப்போது பிள்ளைகள் போனில் பேசினாலும் அவர்கள் கவலைப்படக் கூடாதென்பதற்காக சந்தோசமாகத்தான் பேசுவாள். அந்தப் பகுதியில் யாருக்கு என்ன குறை நேர்ந்தாலும் தான் முன்னின்று தீர்த்துவைத்து நல்லது செய்யும் ஒரு


போராட்டம்

 

 ஓர் இரவு: நடுநிசியில் ஈரம் சொட்டச் சொட்ட அறைக்குள் நுழைந்தாள் அம்மா. ஒன்றும் புரியாதவனாய் விழித்துக்கொண்டிருந்தேன். சுவரில் சாய்ந்து சறுக்கியபடி தரையில் குத்திட்டாள் அம்மா. ஈரமான உடைகள் அவள் அங்கங்களோடு அழுத்தியிருந்தன. குளிரில் அவளது உரோமங்கள் விரைத்திருந்தன. உடல் வளைந்து, கரங்கள் கால்களை கட்டிக்கொண்டிருந்தன. கட்டிலை விட்டு அம்மாவிடம் வந்தேன். சாய்ந்திருந்த அவளது தலையை எனது இரண்டு கரங்களால் நிமிர்த்தினேன். அம்மா அழவில்லை. விசும்பினாள். நான் கேட்டேன், “யேம்மா! என்னாம்மாச்சி? யேம்மா இப்படி இருக்கே?” அம்மா சொன்னாள்,


பாட்டும் பதவியும்!

 

 காட்டு அரசனாக வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று, வயதாகி, இறந்துவிட்டது. அந்தக் காட்டில் வேறு சிங்கமே இல்லை. காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் ஒன்று கூடிப் புதிய அரசனைத் தேர்ந்தெடுக்கக் கூட்டம் போட்டன. “”ஆந்தையாருக்குதான் கண்ணு ரெண்டும் பெரிசா இருக்கு! ஆந்தையாரையே நம் அரசனாக நியமித்து விடலாம்!” என்று கூட்டத்திலிருந்து ஒரு விலங்கு கூறியது. “”ஆந்தையாருக்குக் கண்கள் பெரிசா இருந்து என்ன பிரயோசனம்? அவருக்குப் பகலில் கண் தெரியாதே!” என்று அந்த யோசனையை, கூட்டம் நிராகரித்துவிட்டது. “”விலங்குகளிலேயே சுறுசுறுப்பானது


சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ…

 

 இரண்டு நாட்களுக்கு முன்னால் சிறிய முதலாளி ஒருவர் என் வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் முயல்பிடிக்க வந்தார். அவரது தொப்பியில் ஒரு குருவி இருந்தது. அவர் அதைப்பார்க்கவில்லை. மாறாக கையில் தொரட்டுகோலை பிடித்துக் கொண்டு புதரில் குத்தியபடி முயலை வெயியே வரும்படி சத்தமிட்டார். நான் குருவியை என்னிடம் வருமாறு கையசைத்துக் கூப்பிட்டதும் தொப்பியிலிருந்து குருவி என்னிடம் பறந்து வந்தது. முள்ளங்கி தோட்டங்கள் சற்றியிருக்க அருகே என் ஓட்டு வீடு இருந்தது. தூரத்தில் பூமிக்கு அப்பால் பச்சையாய் பந்துபோல ஒன்று


அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்

 

 எண்கள் குழப்பமாய் ஒரு வரிசைக் கிரமத்தில் என்றில்லாது பெரிதும் சிறியதுமாய் வந்து வந்து போக. எண்களுக்கு பின்னாள் மஞ்சளும் நீலமுமாய் விளக்கு வெளிச்சங்கள் தோன்றி மறைந்தன. எல்லாமே செல்லிடை பேசிகளின் எண்கள் . ஓடிக் கொண்டிருந்த எண்கள் ஒரு இடத்தில் நின்று கொள்ள அந்த எண்ணின் தொடர்புக்கு ஏற்ப மணிச்சத்தம் . வெறுமனே இருந்த மணிச் சத்தங்களை மாற்றி திரைப் படப் பாடல்களை எவன் நுழைத்தது. பாடல் காதோரம் கிசு கிசுக்கத் துவங்கியது ?நினைத்து நினைத்துப் பார்த்தால்


ஸரஸ்வதி காலெண்டர்

 

 போஸ்டாபீஸ் பத்மநாபையரை ஊரில் தெரியாதவர் கிடையாது. அவர் வேலை பார்ப்பதுதான் போஸ்டாபீஸ் என்றாலோ, அவர் சட்டை வேஷ்டிகளிலும் பல ஆபீஸ்களைத் திறந்து வைத்திருந்தார். சம்சாரி என்பதற்கு இல்லை; ஒரு பெண்டாட்டியும் இரண்டு குழந்தைகளுந்தான். ஆனாலும் அநாவசியமான செலவுகள் ஒன்றுமே செய்ய மாட்டார். சிக்கனம் என்பதற்கு ஓர் அத்தாட்சியாய் நின்றவர் பத்மநாபையர்தான். தீபாவளி சமயத்தில் எவனாவது மெயில் பியூனை மிரட்டி ஒரு வேஷ்டியும் சம்பாதித்து விடுவார். மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டாலோ, எல்லாக் கறிகாய்க் கடைக்காரர்களிடமும் சண்டை. ”காசுக்கு எட்டுக் கொடுப்பியா?


ஒரு அணா தர்மம்

 

 வேதபுரி நாட்டை ரவிவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் தன் குடிமக்களை நல்ல நிலையில் வைத்திருந்தார். தினமும் காலை முதல் மதியம் வரை மக்களிடம் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்வார். இரவு நேரத்தில் மாற வேதபுரி நாட்டை ரவிவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் தன் குடிமக்களை நல்ல நிலையில் வைத்திருந்தார். தினமும் காலை முதல் மதியம் வரை மக்களிடம் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்வார். இரவு நேரத்தில் மாறுவேஷம் பூண்டு


பாபுவின் துணிவு

 

 பாவுக்கு “வீடியோ கேம்’ விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதிலும், “கிரிக்கெட்’ என்றால் கேட்கவே வேண்டாம். அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் 11 பேர் விளையாடும் விளையாட்டைத் தனி ஒருவனாக விளையாடிக் கொண்டிருப்பான். இடையிடையே, “வா….வ்…வ், சூப்பர், அச்சச்சோ…’ என்ற கமென்ட்ஸ் மட்டும் வந்துகொண்டிருக்கும். ஏழாம் வகுப்பு படிக்கும் பாபுவுக்கு கம்ப்யூட்டரில் “ஏ டு இசட்’ அத்துப்படி. ஆன்லைனில் அப்பாவுக்கு பஸ் டிக்கெட், டிரெயின் டிக்கெட் எல்லாம் அவன்தான் பதிவு செய்து தருவான். கம்ப்யூட்டரைப் பற்றி


நண்பனே.. எனது உயிர் நண்பனே!

 

 எனக்கு நீண்டகால நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு நிமிஷம் இருங்கள்! ‘இருந்தான்’ என்றா சொன்னேன்? அப்படிச் கூறினால் அவன் இப்போது எனக்கு நண்பன் இல்லை என்றாகி விடும் என்பதால் உங்களின் அனுமதியுடன் அதிலேயுள்ள ‘ந்தான்’ என்ற விகுதியை மாற்றி விடுகின்றேன். இருக்கின்றான்! அவன் ஓர் பாடசாலை ஆசிரியன். பெரிய புத்திசாலியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஆனால் யாரைப் பார்த்தாலும் சுவாரசியமாகப் பேசக்கூடியவன். அதுமட்டுமல்ல இடம், பொருள், ஏவல் அறிந்து நடந்து கொள்ளுவதிலே பெரிய சாமர்த்தியசாலி அவன். ஆங்கில மொழியறிவும்