Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2014

110 கதைகள் கிடைத்துள்ளன.

உணர்வுகள்!

 

 “”பூங்கோதை! வகுப்பை கவனிக்காமல் அங்கே என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” கணக்கு ஆசிரியர் தேவராஜன் சற்று உரத்த குரலில் கேட்டதும், வகுப்பில் இருந்த அனைவரின் பார்வையும் பூங்கோதை பக்கம் திரும்பியது. திடுக்கிட்டு ஆசிரியரைப் பார்த்த பூங்கோதை, “”ஒன்னுமில்ல சார்” என்று மெதுவாக எழுந்து நின்றாள். “ஒன்னுமில்லாமலா பாடத்தைக் கவனிக்காம ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாய்? பாடம் நடத்தும்போது அப்படி என்ன வேடிக்கை வேண்டியிருக்கு? சரி உட்கார்… வகுப்பு முடிஞ்சதும் என்னை வந்து பார்த்துட்டுப் போ” என்றார். “”சரி…


தினந்தோறும் ஞாயிறாய்…

 

 அறிவழகனுக்கு “ஞாயிறு’ என்றால் ரொம்பப் பிடிக்கும். தினந்தோறும் ஞாயிறாய் இருக்கக் கூடாதா என்று ஏங்காத நாளே இல்லை எனலாம். அவனுக்கு அவ்வளவு பிடிக்குதே, அந்த ஞாயிறில் அப்படி என்னதான் இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். உங்களுக்குத் தெரியாததா? இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள். ஞாயிறென்றால், அதிகாலையில் எழத் தேவையில்லை. ஜாலியாக 8, 8.30 வரை கூடத் தூங்கலாம். ஞாயிறன்றுதான் அம்மா அவனுக்குப் பிடித்த பலகாரங்கள் செய்வார். சனிக்கிழமையே வீட்டுப்பாடம் எல்லாம் முடித்து விடுவதால் ஞாயிறன்று தம்பியுடன் சேர்ந்து நன்றாக


தேவதரிசனம்!

 

 கண்ணுக்கெட்டியதூரம் வரையில் விரிந்து பரந்திருந்தது இரவு வான். அந்த இரவின் கருமையினைக் கிழித்துக் கொண்டு முழுநிலா. அடிவானில் தெரிந்த வட்டநிலா உண்மையில் நகரின் இன்னுமொரு தெருவிளக்காகத் தொலைவில் தெரிந்தது. அருகில் கட்டிலில் குழந்தையை அணைத்தபடி தூங்கிக் கிடந்த மனைவியின்மேல் ஒருகணம் பார்வை பதிந்து மீண்டது. மீண்டும் ஜன்னலினூடு விரிந்து கிடக்கும் இரவு வான் மீது கவனம் குவிந்தது. வழக்கம் போல் தத்துவ விசாரம். அர்த்தமேதுமுண்டா? வாழ்க்கையின் நிலையாமையினை உணர்ந்த சித்தார்த்தன் துறந்து சென்றான். துறத்தல்தான் கேள்விக்குரிய பதிலா?


எதேச்சதிகாரம்

 

 பகல் பதினொன்று மணியிருக்கும். கோடை வெயிலின் கதகளியில் கால நிலை குச்சுப்புடி ஆடிக் கொண்டிருந்தது. வெயிலின் வியர்வையில் சோர்வு உழவு செய்து கொண்டிருந்ததில் மனித குல நமைச்சல காரணமேயில்லாமல் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. மனிதனின் மனோ நிலை மாற்றங்களுக்கு பிரதான காரணமாக காலநிலை மாற்றங்கள் கவனயீர்ப்பு செய்து விடுகின்றன… மற்றும்… என கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் உளவியலாளர்களைக் கொஞ்சம் விட்டு விட்டு கரையோரமாய் நீண்டு சென்று கடலை முறைத்துக் கொண்டிருக்கும் கொங்ரீட் வீதியின் அழுக்கற்ற அழகினைப் பார்த்து


தூக்கணாங் குருவிகள்..!

 

 “வாப்பா..! வாப்பா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க…எழும்புங்க!” கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்த ஷைனுக்குட்டியின் குரலைத் தொடர்ந்து யாரோ பலமாக உலுப்பியது போலிருந்தது ஷக்கீப்புக்கு. “யா..யாரும்மா.. வந்திருக்கிறது?” கண்ணைத் திறக்காமலே கேட்டான். இன்று விடுமுறை என்ற தைரியத்திலே இரவெல்லாம் டீவியில் லண்டன் ஒலிம்பிக்சும் இன்டர்நெற்றில் நாஸா றோவர்-க்யுரியோஸிட்டியின் செவ்வாய்த் தரையிறக்கமும் பார்த்துவிட்டுத் தூங்கச் சென்றிருந்தான் அவன். திரும்பத்திரும்ப ஒரு நூறுதடவையாவது செவ்வாயில் இறங்கியதால் ஒத்துழைக்க மறுத்த கண்களுடன் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றபோது எதிரிலிருந்த நிலைக்கண்ணாடியில் சற்றே உப்பியிருந்த முகத்துடன் தலைகலைந்த