கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 25, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

அமிழ்து…. அமிழ்து…

 

 தேனி தேனரசன். தேனரசன் தான் தேனியில் தான் பிக்க வேண்டுமென முன்பிவியில் முடிவு ஏதும் எடுத்திருக்கவில்லை. தமிழ்ப் பற்றாளரும் ஒரு கிராமப் பஞ்சாயத்து அலுவலக கிளார்க்கான அவரது தந்தை துரைசாமியும் தன் மகன் பின்னாளில் தேனி தேனரசன் எனப் பெரும் புகழ் அடைவான் என எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் என்னவோ, “தேனரசன்’ என் பெயர்தான் வைத்தார். தேனரசன் நான்காம் வகுப்பு படிக்கையில் து.தேனரசன் என்று வரலாறு நோட்டில் பெயர் எழுதிக் கொண்டு வரவும் துரைசாமி தமிழ்வழியான எல்லா ஏடுகளிலும்


பரிணாமம்

 

 இப்போதெல்லாம் அவன் என்னோடு அவ்வளவாகப் பேசுவதில்லை. நட்ட நடு ஹாலில் ஈஸிசேரில் கால் விரித்து நடுநாயகமாய் படுத்துக் கொண்டிருக்கும் என்னை ஏùடுத்தும் பார்க்காமல், சுவரோரமாய் பதுங்கி நடந்து பின்கட்டுக்குச் சென்றுவிடுகிான். கல்லுக்குண்டாய் படுத்துக் கொண்டிருக்கும் என்னைக் கொஞ்சமும் மதிக்காமல் இப்படி அட்டைப் பூச்சியாய் சுவரை ஒட்டிக்கொண்டு போகும் அவனைப் பார்க்கும் போது எனக்குள் கோபம் கொப்பளிக்கும். நான் ரெ rowத்திரம் பொங்கிய முகத்தோடு, அவனையே வெறித்தபடி அவன் செல்லும் திசை முழுக்க என் பார்வையைச் செலுத்துவேன். அவன்


சாமியாடி

 

 இன்னும் சற்று தூரத்தில் எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம். பேருந்தில் இருந்து இறங்குவதற்காக கடைசி படிக்கட்டில் வந்து நின்று கொண்டேன். பேருந்து நிறுத்தத்தை நெருங்கும் போது அந்த குளந்தங்கரை திண்டில் உட்கார்ந்திருந்த இரண்டு பேர் எழுந்து வந்து சாலையோரம் நின்று கொண்டார்கள். எங்கள் ஊர்காரர்கள் போல தெரிந்தது. நெருங்கும் போது தான் இருவரில் ஒரு பெண்ணை அடையாளம் தெரிந்தது. சந்தியா. என் சொந்தத்தில் வரும் ஒரு மாமன் மகள். பேருந்து நின்றவுடன் நான் இறங்க, அவர்கள் இருவரும்


தீராக்காதல்

 

 இது என்ன மாதிரியான மனநிலை? சந்தோஷமா?சந்தோஷம் என்று எப்படி இதைச் சொல்ல முடியும்? வருத்தத்திற்குரிய செயலல்லவா இது. துக்கமான மனநிலை என்பதா?துக்கம் என்றும் சொல்லமுடியவில்லை. காற்றில் பறக்கின்ற இறகு போல மனது மட்டும் லேசாக இருக்கின்றது. ஆனால் கண்ணீர் தடையின்றி சுரந்து கொண்டே இருக்கிறது. வலி தாங்காமல் வரும் கண்ணீர் அல்ல இது.பதில் சொல்ல முடியாத கேள்விக்கான பாரத்தின் வடிகால் இது. எதிர்காலம் பற்றிய பயம் இது. ஆனால் இந்த தண்டனை எனக்கு வேணும் தான். பாவத்தின்


களவாடிய பொழுதுகள்..

 

 வெறுமையை யாரால் அனுபவிக்க முடியும். எனக்கு இந்த வெறுமையான நேரம் மிக பிடிக்கும். ஒரு விடுமுறை நாளின் மாலைவேளை நண்பர்கள் அற்றவனாய், உறவுகள் துறந்தவனாய் தனியாக சென்று கொண்டு இருப்பேன். யாரிடமும் பேச பிடிக்காது, என்னை அறியாத மக்கள் இருக்கும் ஒரு சுழலில் என்னை விதைத்து கொள்வேன். எந்த சிந்தனையும் இருக்காது, பேச்சும் இருக்காது. ஆனால் அது அமைதி கொள்ளும் நேரம் என்ற அர்த்தம் அல்ல. சுவாரசியமான புத்தகங்களின் பக்கத்திற்குள் ஒளிந்திருக்கும் வெறுமையான காகிதமோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்


போகும் இடம்

 

 கடைசியாக அம்மா கொழும்புக்கு வந்து சேர்ந்தாள். கடைசியாக என்று சொன்னால், அம்மா தனது வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் கொழும்புக்கு வந்து சேர்ந்தாள் என்று அர்த்தமல்ல. ஒருவகையில் பார்க்கப்போனால் இது அவளது வாழ்வின் கடைசிக் காலமும்தான்! சரிக்குச் சரி நாலு ஆண்களும் நாலு பெண்களுமாக எட்டுக் குஞ்சுகளைப் பெற்றவள் அம்மா. ‘பிள்ளைகள் வளர்ந்து ஆளாவதைப் பார்க்க முன்னரே மனிசன் போய்ச் சேர்ந்திட்டுதே..!’ என்ற கவலையும் ஏக்கமும் அம்மாவுக்கு எப்போதும் உண்டு. எனினும் அப்பா இல்லாத குறையே தெரியாமற்தான் பிள்ளைகளை


கென்சிங்டன் 1931 வெள்ளை கடிகாரம்

 

 அது 1879 இல் செய்யப்பட்ட சுவர் கடிகாரம் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.. இங்கே அல்ல, இங்கிலாந்தில். கடிகார முகத்திலேயே Kensington Station என்றுகொட்டை எழுத்தில் எழுதியிருக்கிறது. கூடவே London என்று வேறு. ஒரு வேளை நம்ம மூஸா தெருவிலேயே ஏதோ ஒரு காதர் பாய் செய்து விட்டு இந்த மாதிரி எழுதி வைத்துவிட்டாரோ என்கிற சந்தேகத்துக்கு இடமில்லாமல் அது இன்னும் துல்லியமாக ஓடிக்கொண்டிருக்கின்றது! Black Metal என்னும் உலோகத்தில் ஆங்கில “L” வடிவம் கண்ணாடி பிம்பத்தில்


தேவதூதரும் தலைவலியும்

 

 எனக்கு மட்டும் உதவி செய்வதற்கு சில தேவதூதர்களை கடவுள் படைத்திருப்பார் போலும்….நான் தலைவலியால் துன்பப்படுவதை அறிந்த அந்த இதயம், அலுவலகத்தில் எனக்காக விடுப்பு எடுத்துக் கொண்டார்… தலைவலி இப்போது இல்லைதான் இருப்பினும் அந்த தேவதூதரின் அன்புக்கட்டளைக்கு இணைங்கி மருத்துவமனைக்கு சென்றோம்.. அரசாங்கம் பாதி ..தனியார்பாதி என இரண்டு வகைமருத்துப் பிரிவுகளைக் கொண்ட அந்த பிரம்மாண்டமானமருத்துவமனைக்குள் நுழைந்தோம்… எங்களை சுமந்துசென்ற வாகனத்தை நிறுத்தும் இடத்தில் சேர்த்து விட்டு…மக்களுடன் கலந்து பொதுப் பிரிவுக்குள் சென்றோம்…மிகப்பெரிய இடப்பரப்பு முழுவதையும் மக்கள் அடைந்து


கைக்கிளைப்பதுமை…!

 

 கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி, நீங்க என்ன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிக்கணும்… நான் யார்? என்னோட ‘ஏய்ம்’ என்ன, என்னோட பழக்கவழக்கங்கள் எல்லாமே.. என்ன சொல்லட்டுமா..? என் பெயர் மோகன். மாநிறம், மெலிந்த தேகம், முன்நெற்றி கொஞ்சம் ஏத்தமா இருக்கும், “உன்னோட கண்கள் எப்பவுமே என்ன வசியம் செய்யுற ஏவல் பொருள்ன்னு” கீதா சொல்லிகிட்டே இருப்பா, அதே மாதிரி என்னோட சிரிப்பு ரம்யாவுக்கு ரொம்பவே பிடிக்கும். என்ன டா இவன் ஒரே பொண்ணுங்க பெயரா சொல்லிகிட்டே போறானேன்னு பாக்குறீங்களா?


தமிழீழம் 2030

 

 [என்றாவது ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று நம்புகிறவர்களுக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இப்படைப்பு சமர்ப்பணம்] ஆரவமர பத்து மணிக்கு எழிஞ்சே பழக்கமா போயிடிச்சிப்போ. என்னாவோ கெட்ட பழக்கம்! கண்ண முழிச்சதும் சொவருல ஒட்டிவச்சிருக்குற அந்தப் படத்தப் பாத்துப்புட்டாதான் நமக்கு நாளே ஓடும். அது மொத வேல; ரெண்டாவது, காலண்டர கிழிக்கனும். குணாவும் அமுதாவும் காலைலே முழிச்சுட்டாலும் காலண்டர கிழிக்காம எனக்குன்னு விட்டுட்டுப் போகுற ஒரே வேல அதுதான். எந்திரிச்சுப் போய் அந்த ஒத்த வேலயச் செஞ்சேன்.