கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 15, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

தாத்தா லட்டு திண்ண ஆசையா?

 

 இரவு 8.30 மணி!!! தியாகராஜனின் வீடு!!! “டேய் பொன்ராஜ் , தங்கராஜ் சாப்பிட வாங்க ,அப்பா நீங்களும் சாப்பிட வாங்க” என ராமராஜனையும் அழைத்து கொரடா வேலை பார்த்து கொண்டிருந்தார் தியாகராஜன். இட்லி, வடை, பூரி என அனைத்தையும் பரிமாற தொடங்கினாள் அகிலாண்டம் மேஜையில் இருந்த ஒரு பாத்திரம் மட்டும் திறக்காமல் இருந்தது. இதை பார்த்த ராமராஜன் “அகிலாண்டம் அதுல என்ன இருக்கு?” “மாமா அதுல இட்லி தான் இருக்கு, இதுல காலி ஆனதும் எடுத்துக்கலாம்” “தாத்தா


காதலர்கள் – ஜாக்கிரதை

 

 “இன்னும் எத்தன நாள் தான் இப்படியே இருக்குறதா உத்தேசம்…?” என்று வழக்கம் போல் கேட்டான் ‘திரு’. ஆனால், இந்த விஷயத்திற்கு இன்று ஒரு முடிவு கட்டிவிடவேண்டும் என்ற தீவரம் அவன் குரலில் தொனித்தது..! “எப்படியே….?” என்று சற்றும் சளைக்காமல் எதிர் கேள்வி கேட்டான் ‘ராஜா’ “எனக்கு என்னவோ இது சரியா படல…. சீக்கிரமா உன் காதல அவகிட்ட சொல்லு….” “காதல பத்தி உனக்கு என்ன டா தெரியும்…. அதெல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு செய்யுற காரியமா என்ன?” “சரிப்பா


வெட்டுக்குழி

 

 வெட்டப்பட்டுக்கிடக்கிறது குழி.நாலடி ஆழமும் இரண்டடி அகலமு மாய் மண் கீறி காட்சிப்பட்ட அதன் மேனி முழுவதும் மண்ணும் புழுதியும் சிறு சிறு சரளைக்கற்களுமாய்/போதாதற்கு ஆங்காங்கே நீட்டிக் கொண்டிருந்த டெலிபோன் கேபிள் வயர்கள் அறுந்து தெரிந்த தாய்/ அரைத்தெடுத்தசட்னியும்,அவித்தெடுத்தஇட்லியும் தட்டில் வைத்துப் பரிமாறப்படும் போது அதன் சுவையும் தன்மையும் மாறிப் போகிற தாய்/ நான்குஇட்லி கொஞ்சமாய்சட்னிஅதில்தோய்த்தெடுத்த விள்ளல்கள் நாவின் சுவையறும்புகளில் பட்டு உள்ளே பயணிக்கையில் பசியாறு பகிற அவர்களின் தனி மனம் எப்போதும் சுவை மிகுந்ததாகவே/ எப்பொழுதுமே அலுவலகத்தில்


பின் கட்டு

 

 கண்களில் விளக்கெண்ணெய் விடாத குறையாகக் கூட்டத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்.ஐ. சுந்தரம். இந்த வருடம் காலையிலிருந்தே கூட்டம் கட்டுக்கடங்கவில்லை. கடைசித் தேருக்கு எப்போதுமே கூட்டம் அதிகம் வரும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை கடைசித் தேர் வந்தால் சொல்லவே தேவையில்லை. வள்ளிமலையின் மேற்கில் பெருமாள்குப்பம் மூலையில் மூன்றாம் நாளான நேற்றிரவு நிறுத்தப்பட்ட தேர் இன்று காலை நகரத் தொடங்கியபோதே எஸ்.ஐ.சுந்தரத்துக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது. வண்ண வண்ண தோரணங்களும், வாய் விரிந்த ஆளிகளும், கால்களைத் தாவிப் பறக்கும் குதிரைகளும்,


சில விளையாட்டுக்கள்

 

 (சின்ன ராஜாமணி சொன்னபடி) லீவ் நாள் வரப்போறதுன்னு நினைச்சுண்டாலே எனக்குச் சந்தோஷம் தாங்கல்லே. நடுக் கிளாஸ்லே ‘டட்டட் டோய்!’ன்னு கத்துவோமான்னு தோண்றது. ஆனால், நான் அப்படிக் கத்தல்லை. ஏன்னா, வாத்தியார் ஏதாவது நினைத்துக்கொள்வார். அவர், ”என்னடாலே! என்ன ஆனந்தம் தாங்கல்லே! வீட்டுக் கணக்கைப் பார்த்தவுடனே அப்படியிருக்கோ?” இன்னுட்டு இரண்டு தீட்டுத் தீட்டிடுவார். அப்பா ஒரு நாளைக்கு என்னை ‘டென்னிஸ் கோர்ட்’டுக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தார். அதுமுதற் கொண்டு எனக்கும் டென்னிஸ் ஆட வேண்டுமென்ற ஆசை வந்துடுத்து. ஆனால் கோபாலக்


உணர்வுகள்!

 

 “”பூங்கோதை! வகுப்பை கவனிக்காமல் அங்கே என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” கணக்கு ஆசிரியர் தேவராஜன் சற்று உரத்த குரலில் கேட்டதும், வகுப்பில் இருந்த அனைவரின் பார்வையும் பூங்கோதை பக்கம் திரும்பியது. திடுக்கிட்டு ஆசிரியரைப் பார்த்த பூங்கோதை, “”ஒன்னுமில்ல சார்” என்று மெதுவாக எழுந்து நின்றாள். “ஒன்னுமில்லாமலா பாடத்தைக் கவனிக்காம ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாய்? பாடம் நடத்தும்போது அப்படி என்ன வேடிக்கை வேண்டியிருக்கு? சரி உட்கார்… வகுப்பு முடிஞ்சதும் என்னை வந்து பார்த்துட்டுப் போ” என்றார். “”சரி…


தினந்தோறும் ஞாயிறாய்…

 

 அறிவழகனுக்கு “ஞாயிறு’ என்றால் ரொம்பப் பிடிக்கும். தினந்தோறும் ஞாயிறாய் இருக்கக் கூடாதா என்று ஏங்காத நாளே இல்லை எனலாம். அவனுக்கு அவ்வளவு பிடிக்குதே, அந்த ஞாயிறில் அப்படி என்னதான் இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். உங்களுக்குத் தெரியாததா? இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள். ஞாயிறென்றால், அதிகாலையில் எழத் தேவையில்லை. ஜாலியாக 8, 8.30 வரை கூடத் தூங்கலாம். ஞாயிறன்றுதான் அம்மா அவனுக்குப் பிடித்த பலகாரங்கள் செய்வார். சனிக்கிழமையே வீட்டுப்பாடம் எல்லாம் முடித்து விடுவதால் ஞாயிறன்று தம்பியுடன் சேர்ந்து நன்றாக


தேவதரிசனம்!

 

 கண்ணுக்கெட்டியதூரம் வரையில் விரிந்து பரந்திருந்தது இரவு வான். அந்த இரவின் கருமையினைக் கிழித்துக் கொண்டு முழுநிலா. அடிவானில் தெரிந்த வட்டநிலா உண்மையில் நகரின் இன்னுமொரு தெருவிளக்காகத் தொலைவில் தெரிந்தது. அருகில் கட்டிலில் குழந்தையை அணைத்தபடி தூங்கிக் கிடந்த மனைவியின்மேல் ஒருகணம் பார்வை பதிந்து மீண்டது. மீண்டும் ஜன்னலினூடு விரிந்து கிடக்கும் இரவு வான் மீது கவனம் குவிந்தது. வழக்கம் போல் தத்துவ விசாரம். அர்த்தமேதுமுண்டா? வாழ்க்கையின் நிலையாமையினை உணர்ந்த சித்தார்த்தன் துறந்து சென்றான். துறத்தல்தான் கேள்விக்குரிய பதிலா?


எதேச்சதிகாரம்

 

 பகல் பதினொன்று மணியிருக்கும். கோடை வெயிலின் கதகளியில் கால நிலை குச்சுப்புடி ஆடிக் கொண்டிருந்தது. வெயிலின் வியர்வையில் சோர்வு உழவு செய்து கொண்டிருந்ததில் மனித குல நமைச்சல காரணமேயில்லாமல் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. மனிதனின் மனோ நிலை மாற்றங்களுக்கு பிரதான காரணமாக காலநிலை மாற்றங்கள் கவனயீர்ப்பு செய்து விடுகின்றன… மற்றும்… என கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் உளவியலாளர்களைக் கொஞ்சம் விட்டு விட்டு கரையோரமாய் நீண்டு சென்று கடலை முறைத்துக் கொண்டிருக்கும் கொங்ரீட் வீதியின் அழுக்கற்ற அழகினைப் பார்த்து


தூக்கணாங் குருவிகள்..!

 

 “வாப்பா..! வாப்பா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க…எழும்புங்க!” கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்த ஷைனுக்குட்டியின் குரலைத் தொடர்ந்து யாரோ பலமாக உலுப்பியது போலிருந்தது ஷக்கீப்புக்கு. “யா..யாரும்மா.. வந்திருக்கிறது?” கண்ணைத் திறக்காமலே கேட்டான். இன்று விடுமுறை என்ற தைரியத்திலே இரவெல்லாம் டீவியில் லண்டன் ஒலிம்பிக்சும் இன்டர்நெற்றில் நாஸா றோவர்-க்யுரியோஸிட்டியின் செவ்வாய்த் தரையிறக்கமும் பார்த்துவிட்டுத் தூங்கச் சென்றிருந்தான் அவன். திரும்பத்திரும்ப ஒரு நூறுதடவையாவது செவ்வாயில் இறங்கியதால் ஒத்துழைக்க மறுத்த கண்களுடன் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றபோது எதிரிலிருந்த நிலைக்கண்ணாடியில் சற்றே உப்பியிருந்த முகத்துடன் தலைகலைந்த