கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 13, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

காட்சிப் பொம்மைகள்

 

 காலைத் தினசரியை ஆர்வமாய் வாசித்துக் கொண்டிருந்த நந்தினியிடம் அவசரமாய் வந்து நின்ற வேதவல்லி அனுசரணையாய் சொன்னாள்: “”இன்னிக்கு மதியம் மாப்பிள்ள வீட்டுக்காரங்க வர்றாங்கம்மா… “நீட்’டா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு இருந்துக்க”. வாசிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டாள் நந்தினி. அவளின் இதயமும் தற்காலிகமாக சுவாசத்தை நிறுத்தியிருந்தது. பார்வை மட்டும் தொடர்ந்து தெறிப்பாய் நின்றது. அம்மாவை நேர்கோட்டில் பார்த்தாள். மனசுக்குள் குடம் உடைந்தது போலிருந்தது அவளுக்கு. “கவலை’ என்கிற குடம். வார்த்தைகள் வெள்ளமாக வெளிவந்து விழுந்தன. வெள்ளத்தின் வேகத்தில் கோபம் நுரைவிட்டுக் கொப்பளித்தது.


குருதியில் பூத்த மலர்

 

 “”ஊரே மொத்தமா இந்த எட்டு வருஷத்துல ரொம்ப மாறியிருக்கு முருகா… போற வழியே இப்படியிருந்தால், நம்ம ஊரு எப்படியிருக்கும்?” ஸ்ரீதர் கேட்டபடியே வர, சாலையை நோக்கி காரை வேகமாக ஓட்டி வந்த முருகன் திரும்பிப் பார்க்காமல், ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தியபடி பதில் சொன்னான்… “”ஆமாம்யா” “”எங்கே பாரு… திரும்பின இடமெல்லாம் விளைச்சல் நிலங்களை பிளாட் போட்டிருக்காங்க… இப்படியே போனால், கூடிய சீக்கிரமே நம்ம நாட்டுல விவசாயம் அழிஞ்சு போயிடுமே…” “”நீங்க சொல்றது உண்மைதான்ய்யா… ஊர்ல பருவ


அலமுவின் சுயசரிதை

 

 [ஸ்ரீமதி அலமு தன் சுய சரிதையை எழுதியிருக்கிறாள். அவளுக்கு எழுதுவதற்கான அவகாசம் அதிகமாய்க் கிடையாதாகையால், இந்தச் சரித்திரத்தின் நடை ஒரு மாதிரியாயிருந்தாலும் நீங்கள் மன்னித்துக் கொள்ளவும். அவளுடைய வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களைப்பற்றிய குறிப்புகள் அவ்வப்போது அவள் வைத்திருந்தபோதிலும், அவைகளை அவள் லக்ஷ்யம் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே, அவள் முக்கியமாகத் தன்னுடைய ஞாபக சக்தியின் பேரிலும், கற்பனை சக்தியின் பேரிலுமே பூராவாக நம்பிக்கை வைத்திருக்கிறாள். அலமு தன் கதையை எழுத ஆரம்பித்துவிட்ட சமாசாரம் கேள்விப்பட்ட அவளுடைய பழைய சிநேகிதிகளுக்கிடையே


மூன்று பந்துகளும் ஒரு பலூனும்…

 

 “ட்வெல்வ் அன் அன்டர் பாய்ஸ் iஃபனல். மிஸ்டர் சூரன் நாதன்! மிஸ்டர் மார்க் ஆண்டர்சன்!” ஆண்ட்ரூ வீல் அழைத்தார். நல்ல உயரம். பல ஆண்டுகளாக வெய்யிலில் டென்னிஸ் விளையாடிப் பழுத்த ஆரோக்கியமான உடல். சற்று கடுமையான ஆனால் புன்னகைக்குத் தயாராக இருக்கும் முகம். கோச்சுகளே உரிய கணீரென்ற குரல். அந்தக் குரலில் ஒட்டிக் கொண்டிருந்த ப்ரிட்டிஷ் உச்சரிப்பைச் சாமி கவனித்தான். சூரனுக்குத் தன்னை மிக மரியாதையாக மிஸ்டர் என்று அழைத்ததில் சிரிப்பு வந்தது. எப்போதும் அணியும் கண்ணாடியை


ஆத்மாவின் புத்துயிர்ப்பு!

 

 கி.பி.3025இல் ஒருநாள். பொழுது மெல்லப் புலர்ந்தது சேவல்களினது பறவைகளினதோ ஒலிகளேதுமில்லாமலே. கி.பி. 2800 அளவிலேயே இந்த நீலவண்ணக் கோளிலிருந்து உயிரினங்கள் அனைத்தும் ,றறிவு போட்ட குதியாட்டத்தில், மனிதனைத் தவிர அழிந்தொழிந்து போய் விட்டன. ஒரு சில விருட்ச வகைகளே எஞ்சியிருந்தன. மனிதர்கள் மாத்திரை உணவு வகைகள் பாவிக்கத்தொடங்கி மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி விட்டிருந்தன. இதற்கிடையில் ஏனைய உயிரினங்களுக்கு ஏற்பட்ட நிலை மனித இனத்துக்கும் ஏற்படும் காலம் வெகு அண்மையில், ஒரு நூற்றாண்டு காலத்துக்குள், அண்மித்து விட்டது. மனிதர்கள்