Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 11, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

பார்வைகள் புதிது

 

 என்னால் இதற்கு ஈடு கொடுத்து கொண்டு இனி மேலும் இருக்க முடியாது. இதற்கு ஒரு வழி பண்ணித்தான் ஆக வேண்டும் புலம்பினாள் மைதிலி. எனக்கு மட்டும் இதிலே சந்தோ~மாவா இருக்கு, நான் இதிலே என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய்? நீயே இவ்வளவு சலித்துக்;கொண்டால் நான் யாரிடம் போவது? உன்னுடைய பொருமையால் தான் நான் இவ்வளவு நாள் ஓட்டினேன் நிதானமாக பதிலளித்தான் சிவராமன். இந்த இதமான பதில் மைதிலியை ரொம்பவும் தணியவைத்தது. ரொம்ப சாரிங்க. நான்


அருணாசலமும் 40 கழுதைகளும்

 

 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். அருணாசலத்திற்குச் சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை தினமும் வகுப்பில் திட்டுவார்! நீ எல்லாம் ஏன்டா? படிக்கவர்றே! கழுதை மேய்க்கத்தான் நீ லாயக்கு என்றார். பயிற்சி நோட்டைத் தூக்கி வீசினார். அப்பவும் அருணாசலம் சிரித்தபடி நின்றான். தலைமை ஆசிரியர் சங்கரன் வகுப்புகளைப் பார்வையிட வராந்தாவில் வந்தார். “”இவனைப் போல் 40 கழுதைகளை ஏன் ஐயா, பள்ளியில் சேர்த்தீங்க” எனக் கேட்டார் கனகவல்லி டீச்சர். “”இவங்கள்லாம்


அஸ்மியாவின் பயணம்

 

 ”பெல்ஜியம் சென்ட்ரல் மிகவும் கம்பீரமாக இருந்தது. பரபரப்பான வேலை நேரம். பெல்ஜியம், கண்ணாடிக்குப் பெயர் போன இடம். பொதுவாக பெல்ஜியத்தில் இருந்துதான் பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்கள் உலகின் மற்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்னுமொரு விஷயத்துக்கும் பெல்ஜியம் மறைமுகமாகப் பெயர்போன இடம். ஆள் கடத்தல், அகதிகள் கடத்தல்! இவற்றை தமிழர்கள்தான் முன் நின்று நடத்துகிறார்கள். ஆட்களைக் கடத்துவதன் சூட்சுமம் வலுவாகத் தெரிந்தவர்கள் தமிழர்கள். ஹார்பர்களுக்குப் போகும் கள்ளப்பாதைகள், கன்டெய்னர் யார்டுகளுக்கு எத்தனை வரிசை முள் கம்பி அடிக்கப்பட்டிருக்கின்றன,


காதல் எனப்படுவது யாதெனில்?

 

 என்னுரை – ரத்னா: என் பெயர் ரத்னா.. அப்பா ஒரு அரசு ஊழியர். அம்மா இல்லத்தரசி. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்ல புரிதல். மொத்த அன்பையும் கொட்டி வளர்க்க ஒரே ஒரு குழந்தையுடன் நிறுத்திவிட்டார்கள்.. பிறந்த ஒன்றும் பெண்.. அப்பாவோட அம்மாவுக்கு, அதாவது என் பாட்டிக்கு நான் பிறந்ததில் அவ்வளவாக விருப்பமில்லை … அவங்களுக்கு ஆண்பிள்ளை தான் உசத்தி. பெண்ணென்றால் வீண் செலவாம், பிறந்த வீட்டில் தங்கமாட்டாளாம். நான்-சென்ஸ்.. ஆனா அப்பா அப்படி இல்லை.. அப்பாவுக்கு நான் பிறந்ததில்


மறுமலர்ச்சி

 

 அன்று மாலைக் கதிரவன் தனது செங்கீற்றுக்களை அடிவானத்தில் பரப்பிக்கொண்டிருந்த வேளையது. ஹிஷாம் ‘ஷொபிங் பேக்’ ஒன்றில் மரக்கறிகளுடன் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். அடர்ந்து வளர்ந்துள்ள வாழைத் தோட்டத்து நடுவே காணப்படும் அச்சிறிய மண் வீடு வாசற் படியில் நின்றுகொண்டிருந்த அஸ்ரா, தம்பி ஹிஷாம் கையில் சுமந்துகொண்டு வரும் ஷொப்பிங் பேக்கை உற்று நோக்கியவாறு; ‘தம்பி இன்டக்கி சரி சம்பளக் காசி கெடச்சா?’ என்று கேள்வி எழுப்பினாள். ‘இல்ல தாத்தா! தொர என்ன ஏமாத்திகிட்டே இருக்காரு! கடையில சேர்ந்து