கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

128 கதைகள் கிடைத்துள்ளன.

ஓர் வாடிக்கையாளனின் சபலம்…!

 

 ஏனோ..அன்று அதிகாலை மூன்று மணிக்கு விழிப்பு வந்து..எழுந்து..பாத் ரூம் சென்று விட்டு திரும்ப வந்த படுத்த போது.. சரியாக எனது அலைபேசி அழைத்தது.. இரண்டாவது ரிங்கில்லே..எடுத்து.., அழைத்தது யார் என தெரிந்தும்.. “ ஹலோ..” என்றேன். நண்பன் தான் அழைத்திருந்தான்..அவன் எனது நண்பன் மட்டுமல்ல…எனது முதலாளியும் அவர் தான். நான் அவர் கம்பெனியில் தான் வேலை செய்கிறேன்.. அவரது கார் டிரைவர்.. பெயர்தான் கார் டிரைவர்..ஏறக்குறைய..அவரின் வலது கை போல் தான் செயல்பட்டுகொண்டிருந்தேன். அவர் வீட்டில் அவர்


அப்பாவைப் பற்றி ஒரு வாக்குமூலம்

 

 உங்களுக்கு என் அப்பாவைப் பற்றி தெரியுமா? அவரைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சரி, அது இருக்கட்டும். நீங்கள் ஜென்டாராட்டா தோட்டம் பற்றியாவது கேள்விப்பட்டதுண்டா? அப்படி தெரிந்திருந்தால் என் அப்பாவையும் தெரிந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். சபாக் பெர்ணம் சாலையின் பத்தாவது மைலில் அமைந்திருக்கிறது இந்த ஜெண்டாராட்டா தோட்டம். பலருக்கு மூனாம்நம்பர் எஸ்டேட் என்பதுதான் பரீட்சார்த்தமான பெயர். தோட்டத்திற்கு நுழையும் பிரதான வாயிலின் அருகே விசாலமான திடல். இடது கோடியில் கிளைகளைப் பரந்து விரித்து நிற்கின்ற பெரிய


புரு

 

 வக்கீல் மாமாவிடமிருந்து அவசர பச்சைச் செய்தி கிடைத்தவுடன் மூத்தவன் சல்யன் மனைவி ரேஷ்மாவுடன் ராக்கெட்டில் வந்தான். அடுத்தவன் கேசரி, மனைவி லதா, மகள் நீதுவுடன் ஏர் டாக்ஸியில் வந்தான். அடுத்தவள் அனா என்ற அன்னம், மகனை கணவனுடன் ஊரில் விட்டுவிட்டு வந்திருந்தாள். மூவரும் படுக்கையில் நினைவிழந்து இருந்த கிழவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். பெரியவர் உண்மையில் ரொம்ப நைந்து போயிருந்தார். அவரது முகம் மட்டும் திறந்திருக்க உடல் வெள்ளைப் போர்வையால் போர்த்தப்பட்டிருந்தது. அவ்வப்போது நினைவிழப்பதாக வக்கீல் வேறு கூறியிருந்தார்.


மிஸ்டர் ராஜாமணி

 

 என் மருமான் சின்ன ராஜாமணியைப்பற்றி என் ஆபீஸ் துரையவர்கள் கேள்விப்பட்டு அவனைத்தாம் பார்க்க வேண்டுமென்று சொல்லியிருந்தார். இந்தச் செய்தியை நான் குழந்தையிடம் தெரிவித்தேன். அவனும் வெள்ளைக்காரர் எவரையும் பார்த்ததில்லை யாகையால் மிகவும் ஆவலுடன் தன்னுடைய நிஜாரையும், சொக்காயையும் மாட்டிக்கொண்டு தயாராய் நின்றான். குழந்தையுடன் துரையின் பங்களாவுக்குக் கிளம்பினேன். போகும் வழி முழுவதும் ராஜாமணி, ”துரை எப்படி மாமா இருக்கும்? அது பேசுமோ? அதுக்கு காலெல்லாம் இருக்குமோ? அது சாப்பிடுமோ? என்னத்தை மாமா சாப்பிடும்?” என்று பல கேள்விகளும்


பிழைக்கத் தெரியாதவர்…?

 

 பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தநீலச்சட்டைக்காரரைப் பார்த்த போது சத்யமூர்த்தி போலத் தெரிந்தது. கார் அந்த பஸ் ஸ்டாப்பைக் கடந்து சில அடிகள் முன்னோக்கிச் சென்று விட்டிருந்தாலும் காரை நிறுத்தி ஜெயக்குமார் அந்த மனிதரை உற்றுப் பார்த்தார். சத்யமூர்த்தி தான். மனிதர் வேலையில் இருந்த போது எப்படி இருந்தாரோ பார்க்க அப்படியே தான் இப்போதும் தெரிந்தார். எந்தப் பெரிய முன்னேற்றமும் தெரியவில்லை. ஜெயக்குமார் ஏளனமாக நினைத்துக் கொண்டார். “இப்போது பஸ் பயணம் தானா?இது வரை ஓட்டிக் கொண்டிருந்த பழைய ஸ்கூட்டர்