கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

128 கதைகள் கிடைத்துள்ளன.

கரைகள் தேடும் ஓடங்கள்…

 

 மடத்தடிச் சந்தியிலிருக்கும் சமாதிப் பிள்ளையார் கோயிலில், ‘இன்றைய எங்கள் பயணம் எந்தவொரு பிரச்சினையுமில்லாமல் முடியணும்டா சாமி’ என்று மானசீகமாக வேண்டிவிட்டு அருகிலிருக்கும் பழக்கடைகள் மலர்ச்சாலைகளையெல்லாம் தாண்டிச் சற்றுத்தள்ளியிருந்த பஸ்தரிப்பில் போய் நான் நின்றபோது என்னை உரசுவதுபோல வந்து க்ரீச்சிட்டு நின்றது அந்தப் புத்தம்புதுக் கருநீலநிற சொகுசுக் கார். ட்ரைவர் ஸீட்டில் இருந்து என்னை உரிமையோடு அழைத்தவனைப் பார்த்ததும் மறுப்பேதுமின்றி கதவைத்திறந்து முன்புற ஆசனத்தில் ஏறிக்கொண்டேன். பஸ்தரிப்பில் நின்றிருந்த பலரின் பார்வை முதுகிலே ஊசியாய்க் குத்தியது. அந்த ஏஸிக்


ரோஜா

 

 ஒரு பூ எப்படி இந்த காரியம் பண்ணும் .. குழம்பியவளாக எழுந்துகொண்டு அவள் சோம்பல் முறித்தாள். ஞாபகத்தில் குத்திய முட்கள் உடலெங்கும் வலிக்கிறார் போல ஒரு குறுகுறுப்பு ..அந்த பூவை மாலையில்தான் துர்கா மந்திர் சாலையில் ஒரு துணிக்கடை அருகே பார்த்த ஞாபகம் வந்தது. மிருதுளாவின் வீட்டுக்கு வந்த போது துணீக்கடைக்கு பக்கத்துகடையில் தொட்டிசெடிகளாக வைத்து ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான் குட்டையன பஞ்சாபி பையன் தான் கடையை கவனித்துகொண்டிருந்தான் .. வாசலில் இருந்த ஒரு ட்ரை சைக்கிளில் தொட்டி


ரோடுஸென்ஸ்

 

 ‘ரோடுஸென்ஸ்’ என்பது, இப்படிப் போனால் இந்த இடத்தில் ஆபத்து வரும் என்று முன் கூட்டியே தெரிந்து கொண்டு அந்தப் பக்கமாகப் போகாமல் இருப்பதுதான். வண்டியோட்டக் கற்றுக் கொடுக்கும் குரு, ‘மோட்டாரை ஓட்டப்போகும் ஏ ஆத்மாவே! நீ எத்தனை காலம் ஆபத்து வரும் என்று பயந்த வண்ணம் இருக்கிறாயோ, அதுவரை உனக்கு ஆபத்தே கிடையாது. எந்த நிமிஷத்தில், நமக்கு ஆபத்தே இல்லை’ என்று தைரியம் கொள்கிறாயோ, அப்போது அருகாமையிலேயே அது காத்திருக்கிறது’ என்று சொல்லிக் கொடுப்பார். “வீட்டிலே சொல்லிக்


தீராத சாபங்கள்

 

 முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ” சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மத்தியான வேளை; வேலைத்தளம் இயந்திர இரைச்சலும் மனிதக் கூச்சலுமின்றி அமைதியாக இருந்தது. சாப்பிட்டு முடித்த வேலையாட்கள், சிலர் அங்கங்கே உட்கார்ந்து பழமை பேசிக் கொண்டும், பெரும்பாலோர் மணலிலும் தரையிலுமாய்ப் படுத்துக் கண்மூடியும் கிடந்தனர். அக்கௌண்டென்ட் மணிசேகர் ஓரமாய் நின்று சிகரெட்டை இலயித்து இரசித்து ஊதிக்


பூங்கொத்து கொடுத்த பெண்

 

 நான் பாகிஸ்தானில் போய் இறங்கி இரண்டு மணி நேரம் முடிவதற்கிடையில் வேலை கேட்டு என்னிடம் ஐந்து விண்ணப்பங்கள் சேர்ந்துவிட்டன. நான் அப்பொழுது பணியில் சேரக்கூட இல்லை. என்னுடைய வேலையை பொறுப்பேற்பதற்கு இன்னும் 15 மணி நேரம் இருந்தது. ஆனால் விண்ணப்பங்கள் வரும் வேகம் குறையவில்லை. நான் விமான நிலையத்திலிருந்து பிடித்து வந்த வாடகைக்கார் சாரதியிலிருந்து, ஹொட்டல் சேவகர் வரை வேலைக்கு விண்ணப்பம் செய்தார்கள். இதில் அதிசயம் என்னவென்றால் இவர்கள் எல்லோரும் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த விண்ணப்பக் கடிதங்களையே