கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

128 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டாவது சாவு

 

 சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி …. எதிரே இருந்த கல்லூரி கேண்டான் சுவரில் மோதியது படுவேகமாக…. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் தூக்கி வீசப்பட்டார்கள் வண்டியை ஓட்டிவந்த ராஜேஷ்-ம், பின்னால் அமர்ந்திருந்த விக்கியும். காண்டான் முன்னால் கட்டிட வேலைக்காக மணலும், கருங்கற்களும் கொட்டப்பட்டிருந்தது. பின்னால் இருந்த விக்கி மணல் மீது விழுந்து சிறிய காயங்களோடு தப்பிக்க, ராஜேஷ் குவித்து வைக்கப்பட்டிருந்த கருங்கற்கள் மீது தலைகுப்புற


ஆறும் ஒன்பதும்

 

 வெளியே நிலா வெளிச்சம் பாலாய் காய்ந்துகொண்டிருந்தது. வெனீஷியன் ப்ளைண்ட்ஸிலிருந்து சந்திரன் அரைகுறையாய் தென்பட்டுக் கொண்டிருந்தான். மொட்டை மாடிவரையில் படர்ந்திருந்த ஜாதி மல்லிகை ஜன்னல் விழியாக நறுமணத்தை குப்பென்று வீசிக்கொண்டிருந்தது. தொலைவில் எங்கிருந்தோ பதினோரு மணியடித்த ஓசை. மறுபடியும் நிசப்தம். ஊர் முழுவதும் நிசப்தமாக தூக்கத்தில் ஆழ்ந்திருந்து. மயக்கம் குறைந்து விட்டாலும் இன்னும் முழுவதுமாக தெளியவில்லை. திரும்பிப் பார்த்தான். பக்கத்தில் சிறுக் குழந்தையைப் போல் அப்பாவியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மாலதி. குவித்த தாமரை மொட்டு போல் இருந்தன இமைகள்


புள்ளிமான்களும், சாதாரண மான்களும்!

 

 அது ஒரு அழகிய காடு. அங்கு பூத்துக் குலுங்கும் மலர்களும், மரங்களும் செழிப்பாக வளர்ந்திருந்தன. ருசிமிக்க இனிமையான பழவகைகளும் வளர்ந்திருந்தன. அக்காட்டில் எல்லா வகையான பறவைகளும் சுதந்திரமாய் திரிந்தன. அக்காட்டின் நடுவே சின்ன நீரோடை ஓடிக் கொண்டிருந்தது. அக்காட்டின் முன்பகுதியில் புறா, மயில்கள், ஆடுகள், அணில்கள், மான்கள், புள்ளி மான்கள், முயல்கள் என சாதுவான பிராணிகள் வாழ்ந்துக் கொண்டிருந்தன. பின் பகுதியில் சிறுத்தை, புலி, சிங்கம் போன்ற கொடிய மிருகங்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தன. அங்கு வளர்ந்திருக்கும் புல்களையும்,


மீன்

 

 “இவடத்தில துறையடிக்குப் போய், அம்பது ரூபாக்கு என்னெண்டாலும் மீன வாங்கித்து வாங்க!’ என்று ஐம்பது ரூபா நோட்டைக் கணவனிடம் நீட்டினாள் மனைவி பொன்னம்மா, அதை வாங்கியவர் அவளிடம் சொன்னார். ‘இந்த நாளையில அம்பது ரூபாக்கு ஆர் மீன் தரப்போறானுகள்?’ கெளுத்தி மீனும் வாங்கேலா!’ “நீங்க என்ன கத கதைக்கிaங்க? நேத்து முந்தனாத்தெல்லாம் துறையடியில சரியான மீனாமே! அம்பது ரூபாக்கு ரெண்டு சூரன் மீன் குடுத்தவனுகளாமே! இதால நம்மட றோட்டால வாங்கித்துப் போன சனமெல்லாம் சொன்னதுங்கள்!”. “நேத்து முந்தனாத்தெல்லாம்


அம்மா அம்மாதான்

 

 தன்னிடமிருந்த மாற்றுச் சாவியால் கேட்டைத் திறந்த சண்முகம், ஸ்கூட்டரை உள்ளே தள்ளவும், வீட்டுக்குள் யாரோ விளக்குப் போடவும் சரியாக இருந்தது. அடுத்த நொடியே வீடு இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். ஸ்கூட்டரைத் தள்ளுவதை நிறுத்திவிட்டு யார் விழித்துக் கொண்டிருப்பது என நோட்டமிட, கதவைத் திறந்து கொண்டு அபிராமி வெளிப்பட்டாள். நல்லவேளை பிள்ளைகள் விழித்திருக்கவில்லை. ஆடிட் காரணமாக நேற்றும் இப்படி பதினொரு மணிக்கு வீட்டுக்கு வந்தபோது தூங்கிக் கொண்டிருக்க வேண்டிய பிள்ளைகள் தூங்காமல் விழித்துக்