கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

128 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்வலி

 

 யம்மா! தாங்கமுடியலம்மா, கடவுளே! எதுக்காக இன்னும் இந்த உசுர வச்சு, இப்படிச் சித்ரவதைப் படுத்தறப்பா? “ஏம்மா! ஒரேயடியாப் போய்ச்சேர்ற மாதிரி எதாச்சும் மாத்திரை மருந்து இருந்தா குடும்மா, ஒனக்குப் புண்ணியமாப் போகும்” என்று முதுகுத்தண்டில் உள்ள பிரச்சினையால், மாதக்கணக்கில் படுத்த படுக்கையாக இருந்த தணிகாசலம் நர்ஸ் வந்தபோது புலம்பியதைக் கேட்டுத் திடுக்கிட்ட பக்கத்துப் படுக்கைக்காரர் ராமசாமி, “அப்படியெல்லாம் சொல்லாதிங்க, வயசாயிட்டாலே ஒடம்புக்கு நோவு வர்றதுதான். எப்படிப் பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்புன்னு ஒண்ணைத் தடுக்கமுடியாதோ! அது மாதிரித்தான்


டாம் டாம் தாமோதரன்

 

 “டாம் டாம்! வாழ்க! தானைத்தலைவர் தாமோதரன் வாழ்க!வருங்கால அமைச்சர் தாமோதரன் வாழ்க! என்ற கோசம் அந்த தெருவையே இரண்டாக்கியது. தாமோதரன் திறந்த ஜீப்பில் நின்றபடி கழுத்து நிநைய மாலைகளுடன் தன் சகாக்களுடன் வந்து கொன்டிருந்தார். தெருவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடியிருந்தார்கள். வீட்டின் அருகே ஜீப் நின்றதும் இறங்கியவர், சரி..சரி..நீங்க போங்க..நாளைக்கு கூட்டத்தில் சந்திக்கலாம் என்று தனது ஆதரவாளர்களிடம் சொல்லிவிட்டு கழுத்தில் இருந்த மாலைகளை கழட்டி எடுத்து கையில் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். “மங்களம்.


சட்டவாட்சி…!

 

 ‘யுவர் ஓனர்… ஒன் த மெட்டீடிரியல் டேட் எட் த டைம் ஒஃப் தி இன்ஸிடென்ட்… வட் ஹேட் ஹெப்பன்ட்… என ஆங்கிலத்தில் அரம்பித்த அத்தணை வாக்கியங்களினதும் தமிழாக்கத்தினை நோக்கின் அது பின்வருமாறு அமைகின்றது சாதாரண மொழி பெயர்ப்பில் ‘சம்பவம் நடந்த காலப்பகுதியில் வழக்கில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தப் பெண் பிள்ளையும் இதோ கூட்டிலே நிக்குற எனது கட்சிக்காரரான இந்த சந்தேக நபரும் கடந்த ரெண்டு வருஷமா மிகத்தீவிரமா காதலிச்சிருக்காங்க. இந்த காதல் விஷயம் ரெண்டு பேரோட


கரும்புகை…

 

 இடது கையில் பச்சை நரம்பு ஓடித்தெரிகிற சுமதியக்கா இன்று சற்று தாமத மாகத்தான் டீக்கொண்டு வருகிறாள். காலை ,மதியம் மாலை மூன்று வேளை யுமாய் அவளது கடையிலிந்துதான் டீ. டீ என்றால் டீ மட்டும் இல்லை. கூடவே அன்பும் கலந்து, ”சார் வேலை கெடக்கும் நாள்பூராம்,அதுக் காக,,,,,,மொ தல்ல வச்ச டீய எடுத்து சாப்புட்டுக்கங்க, ஆறிப்போறது க்குள்ள என்கிறவள்,நம்ம பாடு என்னைக்கு கொறைய என்னைக்கு நம்ம ஒடம்ப கவனிக்க? மொதல்ல…” என்பாள் அன்பொழுக சின்னதும் பெரியதுமான இரண்டு


சங்கர ராமன்

 

 சங்கரன்: 15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாரதி, அம்மா ராதை. சென்னையில் அண்ணா நகரில். சங்கரன் மூன்றாவது குழந்தை, இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு. நடுத்தர வர்க்க குடும்பம். சாரதி ஒரு சைவ ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார். ஏற்ற இறக்கமான வாழ்க்கை. ‘அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்குமாமே?’ சாரதியின் ராசி அந்த வகை. ராமன்: 15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம்,