கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 28, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

படிக்கட்டு…

 

 இவன் சென்ற பஸ்ஸின் கண்டக்டராய் அவர்.அவர் சிரிப்புக் கண்டக்டரும் இல்லை அதே வேளையில் சீரியஸ் கண்டக்டரும் இல்லை அவர். ஆனால் கண்டக்டர், கண்டக்டர் அய்யா, கண்டக்டர் சார், கண்டக்டர் அண்ணே என்கிற அழைப்பொழிகளிலும் அதன் இயக்கத்திலுமாய் அன்றாடம் முனைப்புக்காட்டி இயங்கிக் கொண்டிருக்கிற அவரின் வயது 50 இருக்கலாம். தொலை தூர பஸ்களில் ஓடுகிற கண்டக்டரைப்போல இல்லாமல் கொஞ்சம் கறார் கம்மியாகவும் போட்டிருக்கிற சீருடையில் அங்கங் கேநூல்பிரிந்து தொங்கியும் தொள தொளப்பாய் தெரிகிறவருமாய், எப்பொழுது துணி எடுத்து என்ன


நட்சத்திரம்

 

 “ரொம்ப சந்தோஷம், ஆண்ட்டி… உங்க பொண்ணு வள்ளி-க்கு முதல் பிரசவத்திலேயே பையன் பொறந்துட்டான். புள்ள நல்லா கொழு கொழுன்னு இருக்கான். முதல்ல போய் சுத்தி போடுங்க…” “நிஜம் தான் சாந்தி.. பேரன் பிறந்தது சந்தோசம் தான் .. ” என்றாள் பார்வதி. “ஆங்..உங்க பேரனுக்கு பேரு வைச்சாச்சா ? என்ன நட்சத்திரம்? ” “ரோகிணி நட்சத்திரம்… பேரு விஜய் ஆனந்த் -னு வைச்சிருக்கோம்..” “… ரோகிணியா ??? பகவான் கண்ணன் நட்சத்திரம்.. இவனுக்கு தான் இரண்டு மாமன்களாச்சே


பாம்பு

 

 உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை. உண்மையிலேயே பாம்பு வந்தது. அந்தப் பாம்பு வந்தது எங்கள் வீட்டுக்கல்ல. ஜசீலா அன்ரியின் வீட்டுக்கு. எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறமாக மூன்றாவதாக உள்ளது ஜசீலா அன்ரியின் வீடு. இரவு ஒன்பது மணியைப்போல எனது அறையில் சற்று ஆற அமர்ந்திருந்தேன். அப்போதுதான் மனைவி ஓடிவந்து கூறினாள். ‘ஜசீலா அன்ரி வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்திருக்கு.. உங்கள வரட்டாம்!” எட்டு பத்து வயதுமான எனது பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களை அந்தப்படியே போட்டுவிட்டு ஓடத்


காகம் எப்படிக் கருப்பானது?

 

 ஆதிகாலத்தில் காகங்கள் சற்று நீண்ட தோகை போன்ற இறக்கைகளுடன் வெண்மை நிறத்தில்தான் இருந்தனவாம்! அப்படிப்பட்ட காக்கை இனத்தில் ஒரு காக்கைக் குஞ்சு தன் பெற்றோருடன் ஒரு மரத்தில் வசித்து வந்தது. அது ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். “அது என்ன?’ “இது ஏன் இப்படி?’, “இதைச் செய்தது யார்?’ என்று தன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது ஒருநாள் மரத்தை விட்டுக் கீழே இறங்கி வந்ததும், அதை ஒரு பூனை தாவிப் பிடிக்க முயன்றது.


சால மிகுத்து

 

 கழற்றாத கண்ணாடியுடன் முகவாய் நெஞ்சைத் தொட நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த அப்பாவைப் பார்ப்பதற்கு, ப்ளஸ் டூ படிக்கும் அவரது மகள் சவிதாவுக்குக் கஷ்டமாக இருந்தது. சொன்னால் கோபப்படுவார் அல்லது அறிவுரை சொல்லுவார். இரண்டுமே அவஸ்தை. “”உக்காந்து தூங்கறதுக்கு படுத்து தூங்கலாமில்லையா?” என்ற அம்மாவின் குரலுக்கு விழித்தவர், தாடையின் தூக்க எச்சிலை துடைத்துக் கொண்டார். விடிகாலையில் வெளியூரிலிருந்து வந்தவுடனே அலுவலகம் சென்று வந்த அலுப்பில் கண்கள் சிவந்திருந்தன. “”போய் படுத்துக்கோங்கப்பா. இன்னும் ஒரு சேப்டர் முடிச்சுட்டு தூங்கறேன்.