கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 26, 2014

9 கதைகள் கிடைத்துள்ளன.

தங்க எலி

 

 ஒரு நகரத்தில் வியாபாரி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சூதாடும் பழக்கம் இருந்தது. ஒருமுறை சூதாட்டத்தில் தன் சொத்துக்கள் அனைத்தையும் அவன் இழந்துவிட்டான். அனைத்தையும் இழந்ததால், தன் மனைவியைக் காப்பாற்ற முடியாத நிலையை எண்ணி மனம் நொந்து, நோய்வாய்ப்பட்டு ஒருநாள் இறந்துபோனான். அவன் இறந்த சமயத்தில் அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். கணவன் இறந்த சில நாள்களுக்குப் பிறகு அவள் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். குழந்தையை வைத்துக்கொண்டு அவள் வறுமையில் வாடினாள். பல


தியாகத் தாயின் ஹஜ் பயணம்

 

 அதிகாலை 5.00 மணியைத்தாண்ட, என்னங்க சுபஹுத் தொழுகைக்கும் பாங்கு கேட்டு முடிஞ்சிதிங்கோ, எழும்புங்கோ என்றவாறு தன் கணவன் அசனாரை படுக்கையில் இருந்து எழுப்பினார் பரீதா. இந்த நேரத்திற்குப் போனால்தான் 8 கி.மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று வெயில் ஏறுமுன்னர் ஒரு வண்டிலுக்கான விறகுக் கட்டைகளை எடுக்க முடியும். அசனார் பரம ஏழை. அவரிடமுள்ள சொத்துக்கள் என்றால் மாட்டு வண்டியொன்றும், ஒரு சோடி மாடுகளும்தான். வழமையாக மேலும் 4 வண்டிக்காரர்களுடன் சோர்ந்துதான் அசனார் இத்தொழிலுக்குச் செல்வார்.


நிலம்

 

 கந்தசாமிக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலங்கள் எல்லாம் பயிர் செய்யப்படாமல் வெறும் கறம்பாகவே கிடந்தன. புதரும் மண்டிக் கிடந்தது. வரப்புகள் தெரியவில்லை. வாய்க்கால் தெரியவில்லை. ஒரு காலத்தில்- ஒரு காலத்தில் என்ன பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு – அந்த நிலங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமாக இருந்தன. இப்போது அது கந்தசாமியின் கையில். கந்தசாமி அந்த நிலங்களை வேறு யாருக்கோ விற்கப் போகிறாராம். தகவல் கிடைத்ததும் கிளம்பிவிட்டேன். அத்தனையும் அருமையான நிலங்கள். போட்ட விதை


கருவ மரம் பஸ் ஸ்டாப்

 

 என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரத்திலிருக்கும் கல்லூரிக்கு சென்று வரும் எனக்கு, குறிப்பாக ஒரேயொரு பேருந்து நிலையத்தை மாத்திரம் மறக்கவே இயலாது. ஆம்! அதுதான் அந்த ‘கருவ மரம் பஸ் ஸ்டாப்’. தினமும் கல்லூரிக்குச் செல்லும் எனக்கு தவறாமல் என் தந்தை பத்து ரூபாய் கொடுப்பது வழக்கம். பேருந்து பயணச்சீட்டு ஆறு ரூபாய் போக மீதி நான்கு ரூபாய் எனக்கு மிச்சம். கல்லூரி


இந்நாட்டு மன்னர்

 

 பிரமிப்பாய் இருந்தது ராமநாதனுக்கு. கிட்டத்தட்ட ஐந்தே வருடங்களுக்குள் ஒருவன் பொருளாதார நிலை இப்படிக் கூட மாற முடியுமா என்ற வியப்பில் ஆழ்ந்து நின்றார். நகரத்தின் மையப்பகுதியில் வீடு, கார்,ஆள், அம்பலம் என்று எதிலும் பெருமை. எப்படி இருந்த பழனி, எப்படி மாறிவிட்டான்? “”வள்ளி… அது… வந்து.. பழைய சாதம் மிச்சம் இருக்கு.. வாங்கிக்கிறியா?” “”எதுக்கு மேகலா அக்கா இப்படித் தயங்கறீங்க. வெறும் தண்ணியைக் குடிச்சு வயத்தை நிரப்பிக்கிறதுக்கு, பழைய சாதம் அமிர்தமாச்சே…? போடுங்க தாராளமாய்” தன் மனைவிக்கும்,