கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 20, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

கரும்புகை…

 

 இடது கையில் பச்சை நரம்பு ஓடித்தெரிகிற சுமதியக்கா இன்று சற்று தாமத மாகத்தான் டீக்கொண்டு வருகிறாள். காலை ,மதியம் மாலை மூன்று வேளை யுமாய் அவளது கடையிலிந்துதான் டீ. டீ என்றால் டீ மட்டும் இல்லை. கூடவே அன்பும் கலந்து, ”சார் வேலை கெடக்கும் நாள்பூராம்,அதுக் காக,,,,,,மொ தல்ல வச்ச டீய எடுத்து சாப்புட்டுக்கங்க, ஆறிப்போறது க்குள்ள என்கிறவள்,நம்ம பாடு என்னைக்கு கொறைய என்னைக்கு நம்ம ஒடம்ப கவனிக்க? மொதல்ல…” என்பாள் அன்பொழுக சின்னதும் பெரியதுமான இரண்டு


சங்கர ராமன்

 

 சங்கரன்: 15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாரதி, அம்மா ராதை. சென்னையில் அண்ணா நகரில். சங்கரன் மூன்றாவது குழந்தை, இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு. நடுத்தர வர்க்க குடும்பம். சாரதி ஒரு சைவ ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார். ஏற்ற இறக்கமான வாழ்க்கை. ‘அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்குமாமே?’ சாரதியின் ராசி அந்த வகை. ராமன்: 15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம்,


கனத்த நாள்

 

 மயிலண்ணையைக் காணவில்லை! இதிலேதான் படுத்திருந்தார்.. விறாந்தையில்! படுத்த பாய் விரித்தபடி கிடக்கிறது. ஆளைக் காணோம்! எங்கே போயிருப்பார்.. இந்த இரவு நேரத்தில்? விறாந்தையில் எனது படுக்கையிற் கிடந்தவாறே விழிகளாற் துளாவி முற்றத்தைப் பார்த்தேன். வெளியே இருளில் மறைந்து மறைந்து ஓர் உருவம் அசைவது போலத் தெரிகிறது. அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்.. மயிலண்ணை? நல்ல உன்னிப்பாகக் கவனித்தேன். அட, அது மயிலண்ணையில்லை – மரம்! மங்கலான நிலா வெளிச்சத்தில் காற்றில் அசையும் செடிகளின் நிழல்கள்.. யாரோ அசைவதைப் போலத்


பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

 

 வாடகைக்காரில் இருந்து இறங்கிக் கொண்டேன். லேசாய்த் தூறிக் கொண்டிருந்தது. இரைச்சலுடன் காற்றில் என்னைச் சுற்றி சுழற்றியடிக்கும் மழை. மங்கலான தெரு விளக்குகள். வெளிறி மங்கிய ஆளரவமற்ற வெளியில் ரயில் நிலையத்தின் பெரு நிழல் தலைநீட்டிக் கிடந்தது. தெருவோரத்தில் வரிசையான மரங்கள். அவற்றின் கிளைகள் பெருமூச்சு விட்டபடி குலுங்கி மயிர்க்கால்களாய் ஆடின. திடுதிப்பென்று நான் நினைத்துக் கொண்டேன் ଭ சந்தேகமேயில்லை. இதெல்லாம் என் அவஸ்தையை சகிக்க முடியாத அளவு அதிகப்படுத்தத்தான். இலையுதிர் காலத்தை முன்கூட்டிக் காட்டினாப் போல. அட


சட்டம் என் கையில்

 

 “ம்ம்.. இன்னியோட எல்லாமே முடிஞ்சுது. இத்தனை காலம்…, எத்தனையோ வேதனையை அனுபவிச்சாச்சு. ஊர் முன்ன குத்தவாளியா நின்னது மட்டுமில்லாம நல்ல வேலையும், சொத்தும் இழந்துட்டோம் இந்த சூறாவளியால். இப்போ இந்த முப்பத்தி எட்டு வயசுலேயே வாழ்க்கை சூனியமா மாறிடிச்சு… அவன் இப்படி மோட்டுவளைய பாத்துகிட்டு பித்து பிடிச்ச மாதிரி இருக்கறத பாக்க முடியாம தான் நான் இங்க வந்துட்டேன். அவனை நான் இப்போ என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த….” மாமி தன் அம்மாவிடம் பேசுவதை எல்லாம் நான் வீட்டினுள்ளே