கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 18, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

என்னை மறந்ததேனோ?

 

 “பையன் பொறந்திருக்கான், பாக்க செக்கச்செவேலுன்னு ராஜா மாதிரி. இனி உனக்கென்னடா கவலை. இதை கொண்டாடனும்.” என்று கூறிய சுதாகரைப் பார்த்து சுந்தர் பூரித்துப்போனார். இங்கு ஆரம்பித்த மகவைப் பற்றிய சுந்தரின் பெருமிதம் மகனின் வளர்ச்சியோடும் சேர்ந்து வளர்ந்தது. “கண்ணா, ஜப்பான் தேசியக்கொடி எது? இந்தியா, அமெரிக்கா?” என்று நீண்ட பட்டியல்களை அடையாளம் காட்டும் அக்குழந்தை, லோகேஷ். “என்னங்க, இன்னிக்கி நீங்க வரும்போது அந்த ‘ஈஸி இங்கிலீஷ்’ சீடி வாங்கிகிட்டு வாங்க. அது இந்த சின்ன வயசுலையே கேக்க


ஒரு வேத விருட்சமும், சில விபரீத முடிவுகளும்

 

 நாதியற்றுத் தெருவுக்கே வந்துவிட்ட, தடம் புரண்டு போன தறுதலைச் சமூகத்தின் பெயர் சொல்ல வந்த முதல் வாரிசு போலப் போதையேறித் தள்ளாடிச் சரிந்து விழும் ஒரு பேதையாக, அப்போது ஆஷா அவன் காலடியில் கிடந்தாள். திருமண முதல் இரவன்றே கேசவன் முகம் கொடுத்து எதிர்கொள்ள நேர்ந்த மிகவும் கசப்பான ஒரு கொடிய அனுபவமாய் அது அவனை வதைத்தது. தான் வாழ்கின்ற இனியும் வாழ விரும்புகின்ற தமிழ்ப் பண்பு நிலை தவறாத, புனிதமான சத்திய வாழ்க்கையின் மாசற்ற பெருமைகளுக்கே


எங்கிருந்தோ வந்தான்…

 

 வேப்பம் பூ வாசம் ஸ்மெல் பண்ணிருக்கியா ?? வெயில் கால இரவின் நிலா பார்த்திருக்கியா ??? உதிர்ந்து கிடக்கிற மாம் பூவ எப்பவாது பொறுக்கி எடுத்த அனுபவம் இருக்கா உனக்கு ??? கலர் கலரா சேமியா ஐஸ் உறிஞ்சி இருக்கியா ??? வரிசையாக கேட்டு கொண்டே போகிறான். “இல்லை” என்ற என் ஒற்றை தலையாட்டலுக்கு பின் சொன்னான்…. “இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்னா வெயில் பழகனும். வெயில் அப்படி, வெயில் இப்படின்னு புலம்ப கூடாது. ஓகே வா ? என்று


ஷா ஆலம் முகாமின் ஆவிகள்

 

 ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன. இந்தக் கொடுமையான நரகவேதனையிலிருந்து ஆண்டவரால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும். என்ன ஒரு மிகப் பயங்கரமான அமளி இது? உங்களுடைய குரலையே உங்களால் மிகவும் பலவீனமாகத்தான் கேட்க முடிகிற அளவுக்கு கூக்குரலும் ஓலமும், முனகலும், பேரழுகையும் மொத்தமாய்ச் சேர்ந்த ஒரு கலவையாக…. நள்ளிரவுக்குப் பிறகு ஆவிகள் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க வருகின்றன. அநாதைகளைத் தடவிக் கொடுக்கின்றன.


மறை வாள் வீச்சு

 

 அந்தக் கடற்கரையில் அந்தலும் சிந்தலுமாக உதிர்ந்து கிடக்கின்‎ற கட்டடங்களும் , துருவேறி எந்த ஆட்சியிலோ வைத்து விட்டுப் போன நினைவுத் தூண்களுமாக. கால்கள் மண்ணில் புதைய மனம் வேறெதிலோ புதைந்து வெளியேற முடியாததை உணர்ந்தவளாக கடலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன் மெல்ல மெல்ல அலைகள் வந்து கால் நனைத்துப் போக நானும் உள்ளிறங்கினேன். இ‏ப்பொழுது இடைவரை கடல் போர்த்திக் கிடக்க அவ்வப் போது அலை வந்து உதைத்துப் போக சுகமாக உணர்ந்த படி இ‏ருந்தேன். அடி வாங்குவதை