கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 13, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

மாடர்ன் தியேட்டர் அருகில்

 

 இந்த அழகான நகரம் எப்பொழுதும் பல வகையான ஓசைகளை எழுப்பி கொண்டே தான் இருக்கும், அந்த ஓசை அனைத்தும் இணைந்து இசையாய் ஒரு கானத்தை காலை முதலே இந்த நகர் எங்கும் காற்றோடு வருடிவிடும். ஆனால் இன்று இந்த நகரத்தால் ஒரு வெறுமையான பாடலை தான் தர முடிந்தது போலும்…! அந்த பாடலில் அமைதியே பெருமளவில் பின்னணி இசையை சேர்க்க, மவுனங்கள் கீதங்களை பாடியது. இந்த நகரில் இன்று தொழிற்சாலைகள் இயங்காததால் பிரமாண்ட இயந்திரங்கள் இசை சேர்க்கவில்லை.


மழையானவன்…

 

 முதல் காதல் எத்தனை வயதில் என்று கேட்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கே என் கண்களில் தெறிக்கிறது ஒரு நக்ஷத்திர ஆச்சர்யம். 3 வயதில் என்ற என்னுடைய பதிலுக்கு வேறு என்ன செய்ய முடியும் ? நினைவுக்கே வராத அந்த வயதில் நான் பார்த்தாக இரண்டு பேர் மட்டுமே நினைவில் இருக்கிறார்கள். ஒன்று. அழ அழ அம்மாவிடம் என்னை விட்டு சென்ற அம்மாச்சி. மற்றொன்று, இலங்கை பயங்கரம் பற்றிய கண்காட்சி ஒன்றில் அப்பா கை நீட்டி சுட்டி காண்பித்த


சந்தியாவின் முறுக்கும், சில முறுக்குகளும்

 

 காலை எழுந்திருச்சதிலிருந்து வயிற்றை ஏதோ பிசைவது போலவே இருந்துச்சு சந்தியாவுக்கு. பழையச்சோத்துப் பானையை திறந்து பார்த்தா. கொஞ்சம் சோறும், நிறைய நீருமாக இருந்தது. டம்ளரும், கரண்டியுமாக சோத்துப்;பானை பக்கத்துல உட்கார்ந்தாள். அம்மா பூஞ்சோலை காலையிலேயே வீட்டு வேலைக்கு கௌம்பி போயிட்டா “யக்கா… வயிறு நோவுதுக்கா…” தூங்கிக்கிட்ருந்த தம்பி எப்ப எந்திரிச்சான்..? “அம்மா நீராரதண்ணி வச்சிட்டு போயிருக்கு.. எந்திரிச்சு வந்து குடி..” பக்கத்துப்பானையில் இருந்த தண்ணீய மோண்டுக் குடிச்சுக்கிட்டா சந்தியா. நேற்று ராத்திரியும் சாப்புடல. நேத்து ராத்திரி பூஞ்சோலை


வேட்டை

 

 “இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம் “என்னவோ திடீர்னு விருந்து கெடச்ச மாதிரி.” முதலில் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. யாராவது பெயரைக் கேட்டால் பஞ்சவர்ணம் என்று சொல்கிறபோதே ஒரு வகைத் தாழ்வு மனப்பான்மையால் தலையைக் குனிந்து கொள்வது போலாகிவிடுகிறது அவளுக்கு. கிராமத்துப் பெயராகத்தான் இருக்கிறது. பஞ்சு


மீட்சி

 

 விடியாத காலையைப்போல பொழுது மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியனின் சிரித்த முகத்தைக்கூட இன்னும் காணக்கிடைக்கவில்லை. மேகம் கறுத்து மூடிக்கொண்டது. மண்வெட்டியைத் தோளில் வைத்துப் பிடித்தவாறு தோட்டத்தை நோக்கி அவர் நடந்தார்., வெள்ளனத்துடனே கொத்தத் தொடங்கிவிட்டால் வெய்யிலுக்கு முதல் நியாயமான அளவு கொத்தி முடித்துவிடலாம். வானம் மப்புக் கட்டியிருப்பதும் ஒரு வழிக்கு நல்லது. வெய்யில் இல்லாவிட்டால் இன்று முழுவதும் நின்று தரையைக் கொத்தி முடித்துவிடலாம். ஒருவேளை மழை வந்து வேலையைக் குழப்பிவிடுமோ..? அண்ணாந்து மேகத்தைப் பார்த்தார்.. உம்மென்று முகம்