கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

புத்தாக்கம்!

 

 “கண்ணா….! போன வருசம் என்னைக் கவுத்த மாதிரி இந்த வருசமும் கவுத்திடாதே!” “எடுத்தேன் கவுத்தேனு பேசுறது சரி இல்ல கோபி. !” “உன்னோட வாயில இருந்து ‘கவுத்தேனு’ என்ற வார்த்தை உன்னை அறியாமலேயே வந்துடுச்சுப் பாத்தியா…….!” “கெட்டவன் என்றைக்கும் கெட்டவனாதான் இருக்கனுமா என்ன?” “மனிதனா இருந்தா நீ சொல்ற மாதிரி திருந்த வாய்ப்பு இருக்கு. ஆனா, நரி குணம் கொண்ட நீ திருந்தி மனிதனா வாழ்வதற்குச் சான்சே இல்ல!” “சந்தர்பச் சூழ்நிலையாலக் கூடாதவர்களோடுக் கூடி ஏதோ ஓர்


பூப்பும் பறிப்பும்

 

 துரும்பு ஒன்று காற்றிலே பறக்கும்போது அது ஏன் பறக்குது என்பது ஞானிக்குத் தெரியுமாம். அவர்கள் சகுனங்களை அறிவார்களாம். பிறர் வார்த்தைகளிலிருந்து அவர்கள் உள்ளத்தை அறிவார்களாம். முகச்சாடைகளிலிருந்து அவர்கள் சுபாவத்தை அறிவார்களாம் என்றுதான் அறிந்திருக்கிறேன். ஆனால் சாதாரண மனிதர்களாகிய எமக்கு இவை முடியாமற் போகின்றது. திருமணமாகி ஐந்து வருடங்களாகக்; காத்திருந்து கிடைத்த அழகான அருமை மகள். அக்குழந்தை மார்பில் வாய் புதைந்து கொடுத்த வலிகள் இன்னும் மாறாது எடையற்ற மலர்களாக அந்தத் தாயுள் விரிவதுண்டு. இப்போது வயது ஒன்பது


அவரோகணம்

 

 1 மணல் மேடுகளின்மீது அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். மண்ணின் ஒத்தடம். எல்லாரையும்விட உயரத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு. கடல் காற்று. ஆனால் இது இன்னும் எத்தனை நாளைக்கென்று தெரியவில்லை. ஏற்கனவே நாலைந்து மணல்மேடுகளை புல்டோஸர்களைக் கொண்டு கற்பழித்துவிட்டார்கள். இந்த ஹாஜி மணல்மேடுதான் பாக்கி. (இதற்கு ஹாஜி என்று பெயரிட்டு பிரபலப்படுத்திய ஹாஜி யார் ?) அடுத்த தடவை வரும்போது ஹாஜி இருந்த இடத்தைக்கூட அடையாளம் கண்டுகொள்வது சிரமம். கடற்கரையை அழகுபடுத்துகிறார்களாம். இவர்களைவிட உயர்ந்த நிலையில் மண்கூட இருக்கக்


புலம்பெயர்ந்த காகம்

 

 கா காகா கா.. என்ற சத்தம் அவர் வீட்டின் பின் பக்கமிருந்து வந்திருக்க வேண்டும். கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்துக் கொண்டார். மணி காலை 5.30 என்றது. தன்னிடமிருந்த மாற்றுத் திறப்பின் மூலம் கதவினைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். கா.. கா என்ற குரல் இந்தமுறை அதிக வன்மையுடன் அவரைத் தொட்டது. பின்புறம் சென்று பார்க்கலாமா? என்று நினைத்து மீண்டும் அந்த குரல் வந்தால் போய்ப் பார்க்கலாம் எனத் தீர்மானித்தார். உறங்கிக் கிடந்த வீட்டை எழுப்ப நினைத்து


ஆணாதிக்கம்

 

 நான் எனது திருமணப் போட்டோவை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றோடு எனக்கும் மோகனாவுக்கும் திருமணமாகி சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.அவள் மட்டும் என்னுடன் இருந்திருந்தால் கோவில்,சினிமா,பீசா ஹட் என்று இந்நாள் மகிழ்ச்சியாக கழிந்திருக்கும்.அவள் தான் என்னோடு கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டாளே.மோகனா அழகானவள் மட்டுமல்ல அன்பானவளும் கூட.அதிலும் நான் நோய் வாய்ப்பட்ட போதும் சரி கவலைகளில் உழன்ற வேளைகளிலும் சரி ஒரு தாய் போல் என்னை அரவணைத்தவள் அவள். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்த போதும் பணத்திமிர்