கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

செக்கு மாடு

 

 தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம். அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான


மனோபாவம்

 

 இரவு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது காலிங் பெல் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எரிச்சல் எழுந்தது. யாரது?. நடுராத்திரியில நாகரீகமில்லாமல். இப்படியா அடிச்சிக்கிட்டே இருப்பான்?..செல்லை ஆன் பண்ண, நோக்கியா இரவு 11–50. என்றது. அதற்குள் இரண்டு தடவை ஒலித்துவிட்டது.. திறந்தேன். வெளியே ஆபீஸ் ஹெட்கிளார்க்கும், கூடவே கிளார்க்குகள் ஏ1 ம், ஏ3யும் நின்றுக் கொண்டிருந்தார்கள். வெளியே ஆபீஸ் ஜீப் நிற்கிறது. அய்யோ! யாரைக் கேட்டு இவங்க ஜீப்பை வெளியே எடுத்தாங்க? அதிகாரிக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவாரு. “சார்! சீக்கிரம்


‘பார்க்’காமை

 

 ஒரு நாளைப் போல இதே தொந்திரவு. என்னை தூங்க விட மாட்டேங்கிறாங்க. வேறே யாரு? என் தர்ம பத்தினி தான். “பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதோட சேர்ந்து கொலஸ்ட்ரால் வேற. வாக்கிங் கிளம்புங்க.” மனைவயின் அதட்டல். வேறே வழியில்லை. கிளம்பிட்டேன். காலை 6.00 மணி. பார்க்லே கொஞ்சம் கூட்டம். கேட் கிட்டே வரிசையாக ஸ்கூட்டர்/மோட்டார் பைக்குகள், ஒட்டி ஒட்டி. நடக்க வழியே இல்லை, வண்டிகளை இடித்து கொண்டே உள்ளே நுழைந்தேன். “கொஞ்சம்


வரந்தரும் தெய்வம்!

 

 “பண்போட அன்போட நலமோட வளமோட நூறு வருஷம் நீடூழி வாழணும்டா கண்ணா” தாத்தா பொக்கைவாய் சிரிக்க மலர்தூவி, பேரன் வருணை ஆசிர்வாதம் செய்தார். “தாத்தா! பூப்போட்டு ஆசிர்வாதம் பண்ணி எஸ்கேப் ஆகற டக்கால்ட்டி வேலைலாம் இங்க செல்லாது. அண்ணாக்கு வருஷா வருஷம் பர்த்டே கிஃப்ட் வாங்கித்தருவியே? இந்த வருஷம் எதும் இல்லியா..ம்ம்?!” நர்மதா தாத்தாவிடம் கேட்டுவிட்டுக் கண்சிமிட்டினாள். “யாருடி சொன்னா எதும் இல்லனு? இப்ப சொல்றேன் கேட்டுக்க…என் சொத்தே அவனுக்குத்தான். பத்திரம் எடுத்துட்டு வர சொல்லு உங்கப்பனை.


அவனும் அவளும்

 

 எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வரவில்லை. அப்படி எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை. வர்ணிப்புகளும் வேண்டாம். பொறு ஒரு கதை எழுதி ‘ரைப்’ செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் அனுப்பிவிடுவேன். அதைப்பார். அதைப் பார்த்திட்டு என்ன மாதிரி எண்டு சொல்லு. கவிதைகள் எழுதுவது நல்லாயிருக்கு. ஆனால் சிறுகதை. . . அந்தரப்படாதை. நல்லா வாசி. நல்ல புத்தகங்களை வாசி. சும்மா வாசிக்கிறதில்லை. நல்லாக உள்வாங்கிஇ அதுக்குள்ள போய் திளைத்துஇ இரசித்து வாசிக்கவேண்டம். இவைகள்