கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணில் தெரியுது ஒரு வானம்

 

 இந்த ஊஞ்சல் விளையாட்டு நந்தினிக்கு அப்படியொன்றும் புதிய அனுபவமல்ல. ஏற்கெனவே வீட்டு முற்றத்திலுள்ள பென்னம் பெரிய மாமரத்து உச்சாணிக் கிளையில், அண்ணா கட்டித் தந்த கயிற்று ஊஞ்சல், இன்னும் தான் இருக்கிறது. அதில் தினசரி தவறாமல்,அவள் ஆடி மகிழ்ந்ததெல்லாம்,இப்போது வெறும் சொப்பனம் போல்,தெரிகிறது.அவள் சிறு பிராயம் கடந்து, வயதுக்கு வரும் காலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதால், ஊஞ்சல் விளையாட்டுப்போன்ற ஏனைய விளையாட்டுகளுக்கும், வீட்டில் யாரும் அவளை அனுமதிப்பதில்லை. இந்தக் கல்லூரிக்கு வந்து சேர்ந்த பிறகு, அதனோடு பொருந்தாத,


பாஷை

 

 –ஹேய் ராஜி, ரெடியா ? பொறப்பட வேண்டியது தான் ? என்னா ராஜி ஒரு மாதிரியா இருக்கே ? அட இது என்னா கண்ல தண்ணி. என்ன நடந்தது ? சொல்லு ராஜி ? –அத்தான், என் மோதிரம் காணாப் போச்சு. –மோதிரம் காணாப் போச்சா ? எந்த மோதிரம் ? –என் நெளி மோதிரம். –எப்பிடிக் காணாப் போச்சு ? –வளையம் கொஞ்சம் பெரிசா இருக்குனு கொஞ்சம் நூல் சுத்திக்கிட்டு இருந்தேன். அப்ப ஏதோ அவசரமா


ஓவியம் விற்பனைக்கு அல்ல…

 

 ஓவியர் பாலு இடிக்கப் படபோகிற தன் ஆற்றங்கரை ஓரத்து வீட்டையும், அதை ஒட்டியுள்ள தன் தோட்டத்தையும் கடைசி முறையாக ஒரு முறை பார்த்துக்கொண்டார். கண்களில் நீர் தளும்பியது. மழைக்காலம் என்பதால் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு புது வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டு இருந்தது. தாத்தா கட்டிய இந்த வீடு, வீட்டைச் சுற்றியுள்ள தோட்டம், அதை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, இவைகள் தான், அவருக்கு சின்ன வயதிலே ஓவியனாக வேண்டும் என்ற அந்த வித்தை ஊன்றியது. பூத்துக் குழுங்கும் இந்த


தொலைதல்

 

 அந்தக் கட்டிடத்தினுள் எங்கேயோ சங்கரன் தன் டைாியைத் தொலைத்துவிட்டான். வீட்டுக்குப்போகிற வழியில்தான் அதை கவனித்தான்., எப்போதும் பான்ட் பாக்கெட்டில் பாரமாக உறுத்திக்கொண்டிருக்கும் டைாி., இன்றைக்கு திடாரென்று ஏதோ குறைபட்டதுபோல் உணர்வோடு கைவிட்டுப் பார்த்தபோது பாக்கெட்டின் வெறுமை கனமாய்த் தோன்றியது. கடவுளே, அதை எப்படித் தொலைத்தேன். ரொம்ப முக்கியமான டைாி என்று சொல்வதற்கில்லை. டைாியில் பர்ஸனலாய் ஏதும் எழுதுகிற வழக்கம் அவனுக்கு இல்லை., அவ்வளவு சின்ன டைாியில் ஒரு சமயத்தில் சில வார்த்தைகளுக்கு மேல் நுணுக்கி நுணுக்கி எழுதுவது


யாவாரம்

 

 மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் அவன் மனைவி காசாம்பு. கைப்பிடியளவு இனுக்குகள் சேரச் சேர கத்தையாய் கட்டி விரித்திருக்கும் ஈர சாக்குத் துண்டில் அடுக்குவதும் அவளே. வயதின் முதிர்வு இருவரையும் சீக்கிரமே சோர்வாக்கியது. “எத்தனை கட்டு தேறுது புள்ள?” தலைக்கு மேல் தூக்கித் தூக்கி துழாவிய அலக்கு தந்த தோள்வலியோடு, கழியை கீழிறக்கி தரையில் அண்டை கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டே