கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

சூரியனைத் தேடும் இலைகள்

 

 வெளிக்காற்றில் சிறிது நேரம் நிற்கவேண்டும் எனத் தோன்றியது பகவதிக்கு. அந்த மாடியறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். மேலே அம்மாவாசை ஆகாயம். கருப்பு வானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த நட்சத்திரப் பூச்சிகள் திமிறிக்கொண்டிருந்தன. கீழே அந்தக் கட்டடத்திலிருந்து பத்தடி தள்ளி, ‘கோங்கா ‘ (கங்கை) நதியின் ஒரு படித்துறை. அருகே மங்கலாக எரிந்து கொண்டிருந்த ஒரு மின்சார விளக்கொளியில் கோங்கா நீர் மஞ்சளாய்த் தெரிந்தது. அந்தப் படித்துறையில் மோதும் நீரலைகளில் பலவிதமான அசுத்தப் பொருட்கள் மிதந்து கொண்டிருந்தன. சாம்பல் நிற


சில பயணக் குறிப்புகள்

 

 இங்குதான் அவள் உயிர்ப்பாள். கிளைத்துப் பரந்து குவியும் பரவசத்தின் மையத்தில். அலையடிக்கும் நீரின் அண்மையில். நீரின் மீதான ஆசையும் ஏக்கமும் என்றும் அவளுள் நீங்காதிருக்க. அப்பா அம்மா இருவருக்கும் அலைகளின் பாடல் பிடிக்கும். கூடவே மொழியில் செதுக்கிய பாடல்களும். அர்த்தம் பொதிந்த கவிதைகளை இருவரும் சேர்ந்து பாடுவதை நினைத்துப் பார்ப்பது அவளுக்குப் பிடிக்கும். கவிமொழியே அவளையும் கடலையும் அவளைப் பெற்றோரையும் வரவழைத்ததாகக் கற்பனை செய்வதும் அவளுக்குப் பிடித்தமானது. அங்கு எடுத்த அவர்களின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறாள். பழுப்பேறிய தங்கநிறத்தில்


பாசிகள்

 

 நண்பன் ஒருத்தன் டாக்ஸி ஓட்டுகிறான். சொந்த ஊர்க்காரன். மெட்ராஸ் போனால் பார்க்காமல் வரமாட்டேன். வண்டியிலேயே உட்கார்ந்து கதை பேசி, அரட்டை அடித்து பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பேன். முன்சீட்டில் உட்கார்ந்து கொள்வேன். எப்போதும் போல அவன் பின்னால் சவாரி ஏற்றிக்கொள்வான். எனக்காகவே ரெண்டு பேர் சவாரியாக கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்து ஏற்றிக்கொள்வான். மூணுபேர் வந்தால் ‘வேண்டாம் சார், வண்டி வராது ‘ என்று சொல்லி விடுவான். கொஞ்சம் குஷாலான பேர் வழி அவன். வாய்த்துடுக்கு. முன் பின் தெரியாத


தெரியாத பக்கங்கள்

 

 அந்த வீட்டின் வாசலுக்கு வந்து சைக்கிளை நிறுத்தி ‘இதுதான் வீடு.. இறங்கு!” என மாமன்; சொன்னபோதுதான் நினைவு திரும்பியவள் போலானாள் பிரேமா. சைக்கிளில் அமர்ந்தபடியே வீட்டைப் பார்த்தாள். பெரிய வீடு…. முன் பின் தெரியாத இடம். மிரட்சியடைந்து முகம் மாறினாள். ‘பயப்பிடாமல் இறங்கம்மா!” சைக்கிளை ஒரு பக்கமாக மதிலிற் சாத்தினான். ‘வா போகலாம்!” பயமும் குழப்பமும் போகவிடாது தடுத்தன. பிரேமா சிணுங்கி மறுத்தாள். மாமன் சற்று அதட்டலாகப் பேசினான். ‘இந்தா…. சொல்லிப்போட்டன்…. உள்ளுக்குள்ள வந்து அழுதுகொண்டு நிக்கக்கூடாது.”


மூன்றாவது போட்டி

 

 சமவயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு அலுவலகத்தில், அதுவும் ஒரே துறையில் ஒரே நாளில் சேர்ந்தால், சேர்ந்த நாள் முதலாய் நன்றாக பேசிப் பழகினால் அவர்கள் இருவரைப்பற்றியும் இந்த உலகம் என்னவெல்லாம் பேசுமோ, அதுவெல்லாம் பேசினது – என்னையும் சாந்தகுமாாியையும் பற்றி. கல்லூாியிலும் அம்மா அப்பாவின் கூட்டுக்குள்ளும் ராஜாக்கள் போல வாழ்ந்திருந்துவிட்டு நிஜ உலகத்தினுள் நுழைந்தபோது ஒரு சுழலுக்குள் வந்து சிக்கிக் கொண்டதுபோல அந்த வங்கி அலுவலகம் எங்களுக்கு ஒரு பெரும் மாயமான் வேட்டையாய் பயம்காட்டியது. எங்களுக்கு