கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 19, 2014

9 கதைகள் கிடைத்துள்ளன.

மனப்பான்மைகள்

 

 திருமணத்துக்குப் போயிருந்தேன். நண்பனது திருமணம், நெருங்கிய நண்பன்தான். ஆனால் பார்த்து மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. மறக்காமல் பத்திரிகை அனுப்பியிருந்தான். கடைசி வரைக்கும் புறப்படுவதாகவே உத்தேசம் இல்லை. பொருளாதார நெருக்கடிதான். என்னோடு படித்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு உத்தியோகத்துக்குப் போய்விட்டார்கள். நான் மட்டும் விதி விலக்கு. எனக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை. பெரிய இடத்து சிபாரிசோ, லஞ்சம் கொடுக்குமளவுக்கு ஒரு பெருந்தொகையோ என்னிடமில்லாதது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எங்கெங்கோ பொறுக்கிப்போட்டு வண்டிச் சார்ஜை தயார் செய்துகொண்டு புறப்பட்டு வந்தேன்.


சொந்தக்காரன்

 

 கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர்.


சமூகக்குற்றம்!

 

 ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. ‘டாக்ஸி’யில் இருக்கிற ஓட்டி ‘ஒவனு’க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் பயணம்.ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. ‘டாக்ஸி’யில் இருக்கிற ஓட்டி ‘ஒவனு’க்குள் இருக்கிற மாதிரி


பூமாலை அம்மா

 

 தலையில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய சிறுமூட்டை ஆகியவற்றை ஒரு தட்டுக் கூடையில் வைத்துச் சுமந்து ப+மாலை போயக்; கொண்டிருக்கிறாள். சின்னப் பூப்போட்ட ரோஸ்; கலர் சேலை. கருநீலத்தில் ரவிக்கை. முதுகுவரைக்கும் தொங்கும் தலைமுடி. லேசாக வாடியிருக்கும் மல்லிகைப்பூ. கைகளில் பிளாஸ்டிக் வளையல். நெற்றியில் ஐம்பது காசு அளவு குங்குமம். கால்களில் சிணுங்குகின்ற கொலுசு. கரக்… கரக்.. என ஓசையிடும் பிளாஸ்டிக் செருப்பு. இதையெல்லாம் பார்க்கும் போது பெண்கள் கூட இவ்வளவு நேர்த்தியாக அலங்காரம் செய்ய முடியுமா?


நாங்கள் கோபியை மிரட்டினோம்

 

 நாங்கள் கோபியை அடித்துப் பிடித்து இழுத்து வந்தபோது அவன் எங்கள் கண்ணுக்குப் புலப்படாத முள்ளம்பன்றிகளை கவனித்துக்கொண்டிருந்தான். பிரபாதான் அவன் மண்டையில் ஒன்று போட்டான் “என்னலே அங்க முறச்சு முறச்சு பாக்க?” கோபி திகைத்து வேறு உலகிலிருந்து இறங்கி வந்தவன் போல “பன்னி, முள்ளம் பன்னி” என்றான். மோகன் ஜிப்பை அவிழ்த்து “இதாலே முள்ளம் பன்னி” அப்படின்னு கேட்டபோது கோபி “இதுக்கு முள் இல்லைலா” என்றான். அப்போதே எங்களுக்கு பொறி தட்டியிருக்கவேண்டும் சரியான வட்டு கேசிடம் மாட்டிக்கொண்டோமென்று. பிரபா