கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 11, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

விருந்து

 

 அட சாந்தன்! நீங்கள் எப்ப ஒஸ்ரேலியா வந்தனியள்? – ஆர் குமரனோ? நாங்கள் இஞ்சை வந்து ஒண்டரை வருஷமாப் போச்சு. எப்பிடி உன்ரை பாடுகள் போகுது? நீ வெளிக்கிட்டு ஒரு பத்துப் பதின்மூண்டு வருஷம் இருக்கும் என்ன? – பரவாயில்லை சாந்தன். இப்ப நாங்கள் ‘டிலகேயிலை’ இருக்கிறம். நீங்கள்? – நாங்கள் ‘அல்ற்ரோனா’விலை. – அப்ப கிட்டத்தான். என்ன ஒரு பிள்ளையோடை நிப்பாட்டிப் போட்டியள் போல. – உம். ஒண்டு காணும். இந்த ‘லவற்ரன் மாக்கெற்றிலை’ எல்லாம்


மனோதர்மம்

 

 மூச்சு வாங்க வாங்க சைக்கிள் பெடலை மிதித்தார். விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும். வயதான மனைவியின் நினைவுகள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. நோய் நிலைமை எப்படியோ…. ஏதாவது சாப்பிட்டிருப்பாளோ! மருமகள் ஏதோ ஒரு வழி பார்த்து சாப்பாடு கொடுத்திருப்பாள் எனச் சமாதானமடைய முயன்றார். அடுத்த கணமே துணுக்குறும் மனசு. பாவம்.. அவள்தான் என்ன செய்வாள்? தன் மூன்று குஞ்சுகளின் வயிற்றுப் பாட்டையும் பார்க்கமுடியாமல்.. தானும் மெலிந்து எலும்பும் தோலுமாகப் போனாள். பிள்ளைகளின் பட்டினியைத் தாங்காமால் அவள் அடிக்கடி சொல்வதும் நினைவில்


ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

 

 இன்றைக்காவது வந்திருக்குமா ? அவளிடமிருந்து கடிதம் ! பழகிப் போன ஆஃபீஸ் ! பழகிப் போன அவமதிப்புகள் ! பழகிப் போன சின்னச் சின்ன தோல்விகள் ! என்ன செய்தாலும் தவறு சொல்லி பல்லிளிக்கிற முட்டாள் கம்ப்யூட்டர் ! நாள் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிற சக ஆஃபீஸ்வாசிகள் ! ஆளுக்கொரு தீவாய் அஞ்சு மணி வரை உழைத்து விட்டு ‘ நாளைக்குப் பார்ப்போம் ‘ – சம்பிரதாயப் புன்னகையுடன் விடைபெற்று நொிசலான தெருக்களிடை வாகனப் புகை சுவாசிப்பிடை


தலைப்பிரசவம்…

 

 காதுக்குள் டன் டன் னாய் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது டாக்டர் சொன்ன வார்த்தைகள். குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லையாம்… காலை யாரோ பாதாளத்திலிருந்து இழுப்பது போல் இருக்கிறது. நாளை மனைவிக்கு பிரசவம் என்று நாள் சொல்லியிருந்தார்கள், அதனால் தான் இன்று மனைவி பிாியாவுடன் வந்திருந்தான் விக்னேஷ் ….. சிாிப்பும் கனவுகளுமாக வந்து செக்கப் பண்ணியபோது தான் டாக்டர் முகம் மாறத் துவங்கியது…. எதிர்பார்க்கவே இல்லை…. திடாரென்று இப்படி சொன்னபோது இடிவிழுந்தது போல் இருந்தது… டாக்டர்….


ஒர் ஆணாதிக்கக் கதை

 

 தேவி தன்னைப்போல் ஓர் இஞ்சினீயர் என்பதினால் மட்டுமல்ல தான் ஒரு முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ள அவளுக்கு சர்வ சுதந்திரமும் கொடுத்திருந்தான் கணேஷ்.இருவரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள்.அதனால் தனித்தனி தொழில் நடத்தினார்கள். கணேஷுக்கு கிண்டியில் மோட்டார் பாக உற்பத்தி தொழிற்சாலை. அவன் மனைவி தேவிக்கு அம்பத்தூாில் ஒரு ரசாயனத் தொழிற்சாலை. அவர்கள் தொழில் வளர்ந்ததுபோலவே அவர்களுடைய மகள் திவ்யாவும் வளர்ந்து 5 வயதை எட்டிவருகிறாள். கோடம்பாக்கத்தில் ஒரு கான்வென்டில் யூ.கே.ஜா படிக்கிறாள். தேவி ஃபியட்டிலும், கணேஷ் கான்டசாவிலும் போய்வர