கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 8, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

வனஜா என் தோழி!

 

 வனஜா என் நெருங்கிய தோழி. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப அன்னியோன்னியம். என் வீட்டுக்கு பக்கத்திலேதான் அவள் வீடும். ரெண்டு பேரும் ஒண்ணாதான் ஸ்கூல் போவோம். சாப்பிடுவோம். விளையாடுவோம். படிப்போம். அரட்டை அடிப்போம். இத்தனைக்கும், குணத்திலே நானும் அவளும் இரு துருவங்கள். நான் எப்பவுமே தைரியசாலி. ஆனால், அவள் எனக்கு நேரெதிர். வனஜாவிற்கு எதுக்கெடுத்தாலும், ஒரு பயம், வேண்டாத கவலை. அனாவசிய கற்பனையை வளர்த்துக் கொண்டு திகிலில் டென்ஷன் ஆகி விடுவாள். பதற்றத்திற்கு ஒரு ஸ்டாப் லாஸ்


தவறான பாடம்

 

 வெளிநாட்டிலிருக்கும் மகன் சேந்தனிடமிருந்து வந்த கடிதத்தை, இரண்டாவது தடவையாக வாசித்துப் பார்த்தாள் சரஸ்வதி. “அன்புள்ள அம்மா அறிவது! நீங்கள் இவ்விடம் வருவதற்கான, ஏற்பாடுகளெல்லாம் செய்திருக்கிறேன் . தாமதிக்காமல் புறப்படுங்கள். கொழும்புக்கு வந்து என் நண்பன் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தியுங்கள். அவன் பாஸ்போட் மற்றும் எல்லா அலுவல்களும் செய்து உங்களை என்னிடம் கூட்டிக் கொண்டு வந்து சேர்ப்பான். உடனடியாக நீங்கள் உவ்விடமிருந்து புறப்பட்டால் தான் அடுத்த மாதத் தொடக்கத்தில் வரும் என் மகன் பிரணவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்து சேரலாம்.


வேதம் என்ன சொல்கிறது?

 

 மனோகரி கண் முன்னால் காட்சி கொண்டு நிகழ இருக்கிற தங்களின் கல்யாண எழுத்தை எதிபார்த்து, மூடிக் கிடந்த அறைக்குள்ளே மங்கலான ஒளிகீற்றுகள் நடுவே ஒரு நித்திய தரிசன தேவதை போலச் சந்தோஷம் குதூகலித்து வெகு நேரமாகத் தன்னை மறந்து அமர்ந்திருந்தாள். வெளியே ஒரே ஆரவார இரைச்சலாக இருந்தது. மணமகன் , அதாவது அவளுடைய கனவுகளை நிறைவேற்றுவதற்காக வரப்போகும் வருங்காலக் கணவன், வானிலிருந்து ஒளி பளீரிட்டபடி வந்து இறங்கும் ஒரு தேவ புருஷனைப் போலத் தன்னை ஆட் கொள்ள


கண் விழித்தார் பெருமாள்

 

 பெருமாள் கண் விழித்தால் பிரளயம் ஏற்படும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு தினம் தான் இன்று. பெருமாள் கண் விழிக்கிறார், மிகவும் கடினமாக இருக்கிறது போலும். பல ஆண்டுகளாக சேர்ந்தே இருந்த இமைகள் இரண்டும் பிரிய மனம் இல்லாமல் பட்டாம்பூச்சி சிறகை விரிப்பது போல படபடகிறது. சாதாரண மின் விளக்கின் ஒளி கூட கதிரவனின் ஒளி போல அவர் கண்களில் கூசுகிறது. மீண்டும் ஒரு முறை பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு வேறு. ஒரு வழியாக கண்களை கசக்கி கொண்டு


அவளுக்கு யாரும் இணையில்லை

 

 நாள்:நவம்பர் 5 2010,இடம்:கொலன் நகரம்,ஜெர்மனி. அன்று காலை அலுவலகம் வந்ததும் காலண்டரில் தேதியை நகர்த்தினேன். முன்தினம் இரவு லீவுக்கு வருவது பற்றி அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது.அதன்படி வரும் டிசம்பர் இறுதியில் முப்பது நாட்கள் விடுப்பில் அப்படியே பொங்கலையும் சேர்த்துக் கொண்டாடும் நோக்கில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன். ‘என்ன சார் காலைலயே பிஸியா? வாங்க கோப்பிக்கு போகலாம்’ என்று நாற்காலியின் பின்புறம் தட்டினாள் நந்தினி.’ஹாய்! குட் மார்னிங்!ஒன்னும் இல்ல லீவ் அப்ளைப்