கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 21, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

கொலையாளி

 

  நேரம் மாலை ஆறுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது.பரந்து விரிந்து கிடந்த சமுத்திரமானது தனது வாயை அகலத் திறந்து சூரியனை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.தனது அவல நிலையை உணர்ந்த சூரியனார் செந்நிற ஒளிக்கதிர்களை வானெங்கும் பரப்பி “அபாயம் அபாயம்“ என்று உலகத்தோருக்கு அறிவித்துக் கொண்டிருந்தார். சூரியனின் இயலாமையை உணர்ந்த சமுத்திரமோ தன் அலைக்கரங்களை முன்பை விட வேகமாக வீசி ஆர்ப்பரித்தது.செந்நிற வானமும் நீலக்கடலும் நுரை கக்கியவாறு கரையை நோக்கி வேகமாய்த் தவழ்ந்து கொண்டிருந்த அலைகளும் கடற்கரையில் பல


அகதியும் சில நாய்களும்

 

 குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது. வீரிட்ட அழுகை. இரவு முழுவதும் இதே கதைதான். அப்பன் எழுந்து வெளியே வந்தான். அப்பன் அவனது இயற்பெயர். குழந்தையின் அப்பனும் அவன்தான். பொழுது ஏற்கனவே விடிந்துகொண்டிருந்தது. நேரத்தோடு எழுந்த சில காகங்கள் முற்றத்திற்கு வந்திருந்து விடுப்புப் பார்த்தன. இரவு குழந்தை ஒவ்வொரு முறை அழுதபோதும் அப்பனின் நித்திரையும் குழம்பியது. அதனால் பொழுது விடியும் அசுகையே தெரியாமற் கிடந்திருக்கிறான். சிறியதொரு வாங்குபோல தொழிற்படும் மரக்கட்டையில் ஆறப்போட்டுக்கொண்டு அமர்ந்தான். அதையும் வெட்டி அடுப்புக்கு வைக்காதவரையிற்


வைதேகி காத்திருந்தாள்!

 

 சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிப் பகுதியில் அன்று சற்றே கூடுதலாகக் களை கட்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவர்களின் சந்திப்பு தினம் என்பதால் உற்சாகமும் எதிர்பார்ப்புமாக ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். மருத்துவக் கல்லூரி வளாகத்தின் அலுவலகத்தில் இருந்த பெண் அலுவலர் மிங்கியிடம் தங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் வந்து இறங்கிய வைதேகியை அடையாளம் கண்டு ஒடி வந்தாள் மாலினி. “ ஏய்! வைதேகி …எப்படி இருக்கே? எங்கே இருக்கே? நான்


பாரந்தாங்கி

 

 எனக்கு தாங்க முடியாத வலி எடுத்து விட்டது. பிரசவ வேதனை. கூடவே என்ன ஆகுமோ எனும் பயம். ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் கணவர் பக்கத்தில். ” ஒண்ணும் கவலைப் படாதே கலா. தைரியமா இரு. எல்லாம் நல்ல படியாக முடியும்”. ஆனால், அவர் முகத்தில் கலவரம். எனது பிரசவம் கொஞ்சம் கவலைக்கிடம். இது டாக்டர்கள் முன்பே சொன்னது தான். கர்பப்பை கோளாறு ,எனக்கு ஐந்து மாதத்திற்கு முன்பே தெரிந்தது தான். இருந்தும், தெரிந்து


ஏனோக்கு

 

 ஏனோக்கு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை அறிந்தபோது என் உள்ளம் துன்பத்தில் நிறைந்த அதே நேரம், வேதத்தில் உள்ள வசனம் என் நினைவுக்கு வந்தது. ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருகையில் காணப்ப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்’. (ஆதியாகமம் 5:24) எழுபது வயது முதியவர் ஒருவர் தன் கையைப் பின்னால் கோத்துக்கொண்டு தலை குனிந்து மிகுந்த யோசனையோடு மெதுவாக நடந்து வருவதையும், எதிரே வரும் யாராவது ‘வணக்கம் தாத்தா’, என்றால் பதிலுக்கு இரு கைகளையும் குவித்து