கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 12, 2013

2 கதைகள் கிடைத்துள்ளன.

பழக்கம்

 

  மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். “ஒன்றுமே சரியாகயில்லை” சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி விட்டது. செய்தித்தாள் படித்தாகி விட்டது. வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் வருகிற தமிழ் வானொலி கேட்டாகி விட்டது. எங்கேயோ தொலை தூரத்தில் உள்ள தோழியை தொலைபேசியில் கூப்பிட்டு ஒரு மணி நேரம் அறுத்தாகி விட்டது. இரவு உணவு தயாரித்தாகி விட்டது. அப்படியும் நேரம் போகவில்லை. மாலா மணியைப் பார்த்தாள். மணி மாலை நான்கு.


நிறைவேத்துவாயா ராஜி?

 

 தஞ்சாவூர் பாசஞ்சர் சிதம்பரத்தை அடையும்போது காலை மணி ஆறு இருக்கும். பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்டேஷனின் கடைகளில் காபி போடும் சத்தமும் தூங்கி எழுந்த கண்களோடு பெட்டியை தூக்கி நடக்கும் பாஸன்ஞர் கூட்டமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தூக்கம் கலைந்த ஹரிணியை மருமகள் ஷீலா தூக்கிக் கொள்ள மகன் ராகுல் ஆட்டோ தேடத் துவங்கினான். கடந்த ஐந்து வருஷமாக வாடிக்கை யாகப் போன பயணம் இது. நான் முதலில் பார்த்ததற்கு இந்த ஊர் பயங்கரமாக மாறிவிட்டது.