கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

170 கதைகள் கிடைத்துள்ளன.

சொந்த வீடு

 

 படுக்கையை விட்டு எழுந்த துளசியம்மாள் ஜன்னல் பக்கம்போய் வெளியே பார்த்தாள். ஒரே இருட்டாக இருந்தது. பக்கத்து வீட்டில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்த சத்தம் மட்டும் கேட்டது. திரும்பி வந்து கட்டிலில் உட்கார்ந்துகொண்டு அறையை ஒருமுறை நோட்டம் விட்டாள். அறையில் ஒரு சாமி படம்கூட இல்லை. ஷெல்பில் சீலைகள் மட்டும் ஏழு எட்டு மடித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு இரும்புக் கட்டில், ஒரு போர்வை, ஒரு தலையணை அவ்வளவுதான் அந்த அறையில் வேறு பொருள் இல்லை. அறையைக் கூட்டுவதற்கு விளக்குமாறுகூட இல்லை.


திருட்டுப்போன பொண்ணு

 

 “திருட்டுப்போன பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று வீட்டின் முன் தலையைச் சீவிக்கொண்டிருந்த பெண்ணிடம் சேதுபதி கேட்டான். “பொண்ணு ஊட்டயா கேக்குறீங்க?” “இல்லீங்க. திருட்டுப்போன பொண்ணுன்னு ஒருத்தங்க இருக்கங்களாமே அவுங்க வீட்டெ கேட்டன்.” “அது பேரூதான் பொண்ணு.” “நீங்க ஆள மாத்தி சொல்றீங்கின்னு நெனக்கிறன்.” லேசாக சிரித்துக்கொண்டே அந்தப் பெண் சொன்னாள். “நீங்க சொல்ற ஆளும் நான் சொல்ற ஆளும் – ஒரே ஆளுதான். அது பேரூ பொண்ணுதான். ஊருல அதெ திருட்டுப்போன பொண்ணுன்னும் சொல்வாங்க.” மீண்டும்


சின்ன முள்ளும் பெரிய முள்ளும்

 

 அனிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பரத்தைக் குளிப்பாட்ட வேண்டும், வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக்குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து குழந்தைக்கு ‘மூடே’ சரியில்லை. அனிதாவின் கோபம் பரத் மேல் இல்லை. பரத் அழுவது, அனிதா பரபரப்பது எல்லம் தெரிந்தும், தலையே நிமிராமல் கர்மமே கண்ணாக செய்தித்தாளில் ஆழ்ந்திருக்கும் மாமனாரிடம் தான். கொஞ்சம் பேரனைக் கூப்பிட்டு சமாதானப் படுத்தி வைத்துக் கொண்டால் ‘பரபர’வென்று எத்தனை காரியங்களை அனிதா முடிப்பாள்? ஸ்ரீபெரும்புதூர் மோட்டார் கம்பெனியில் உதவி மேலாளராகப் பணி


சின்னஞ்சிறு பெண் போலே…….

 

 காசியில் கங்கைக்கரையில் தஸாஸ்வமேத கட்டத்தில் ஏழு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மாலை நேர கங்கா ஆரத்திக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. ஒரே மாதிரி உடையலங்காரத்துடன் ஒவ்வொரு வளைவிலும் பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பாலகர்கள் பூஜையை ஆரம்பித்தனர். கரையிலிருந்து சற்று நேரம் ஆரத்தி ஏற்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களை படகுக்காரர்கள் படகில் ஏறி கங்கையிலிருந்து ஆரத்தி பார்க்கும்படி நச்சரிக்க ஆரம்பித்தனர். “உதர் ஸே ஆரத்தி தேக்னா தோ பஹ§த் சுந்தர் ஹோதா ஹை!” ஜனங்கள் நிறைந்து கிளம்ப


ஜான்சி ராணிகள்

 

 “ஏ புள்ள! நானெல்லாம் அந்த காலத்துல நெதமும் எட்டு மைலு தொலவு நடந்து போய் படிச்சிட்டு வந்தவந்தான்! அப்போ மாதிரியா இருக்குது ஊரு இப்போ? ரோட்டு போட்டிருக்காங்க. அக்கம் பக்கத்து ஊருங்களுக்கு பஸ்ஸ§ ஓடுது?” இளங்கோ வாத்தியார் பேசுவதை பூங்கோதையும் காவேரியும் விழிகள் விரியக் கேட்டுக் கொண்டிருந்தனர். எட்டாவது வரை கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பிட்டு, இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் என்று வாங்கிப் படித்தவர்களுக்கு பக்கத்து ஊரில் படிப்பு என்றதும் ஏற்படும் மலைப்பு புரிய வர,