கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

170 கதைகள் கிடைத்துள்ளன.

காற்றின் விதைகள்…

 

  வெகுநேரமாகியும் வீட்டு வேலைக்கான உதவிப்பெண் சாலம்மா வரவில்லை என்பதால், தேடிக்கொண்டு போனபோது அவள் காவேரி நகர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றிருப்பதாய்ச் சொன்னார்கள். மொபெட்டில் சென்றபோது அவ்வீட்டை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. மினி வேன் ஒன்றில் தட்டுமுட்டுச் சாமான்களுக்கு சிகரமாக நாற்காலி ஒன்று மல்லாக்கவைத்து அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அழைக்க வருவதை கவனித்துவிட்ட சாலம்மா வேகமாக வந்து, “”இன்னிக்கு வர்றத்துக்கு ஆவுறதில்லை. இங்க சொல்பா கெலசா (கொஞ்சம் வேலை) இருக்கு” என்றாள் கன்னடம் பிணைந்த தமிழில். “”ஏன்? என்னாச்சு?”


சோறு ஆறுதுங்க

 

 நடராஜன் தன் போட்டோ ஸ்டுடியோவின் மாடி வராந்தா குட்டை கைப்பிடிச் சுவரில் சாய்ந்து வண்ணம் தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். அன்று காலையிலிருந்தே அவனுக்கு வேலை எதிர் பார்க்காத விதமாய் ஒன்று மாற்றி ஒன்று சரியாய் இருந்தது. முதல் நாள் கல்யாண முகூர்த்த நாள் போலிருக்கிறது. மூன்று புதுமண ஜோடிகள், ஒரு பள்ளி தோழியர் கூட்டம், அம்மணமாய், அரை நிக்கருடன் என்று பல கோணங்களில் எடுக்கப்பட்ட குழந்தை ஒன்று என வாடிக்கைக்காரர்களின் பட்டியல் நீண்டு போனது. பத்து மணி


வாளியில் பயணம் செய்கிறவன்

 

 நிலக்கரி மொத்தமும் தீர்ந்துவிட்டது; வாளி காலியாக இருக்கிறது; மண்வாரிக்கு வேலை இல்லை; அடுப்பு, குளிரை வெளிமூச்சாக விடுகிறது; அறை உறைந்துகொண்டிருக்கிறது; ஜன்னலுக்கு வெளியே இருக்கும் இலைகள் விறைத்துப்போய் உறைபனியால் போர்த்தப்பட்டுள்ளன; தன்னிடம் உதவியைத் தேடும் எவருக்கும் எதிராக ஒரு வெள்ளி அரணைப்போல வானம். எனக்கு நிலக்கரி அவசியம் வேண்டும்; விறைத்துப்போய் இறப்பதற்கு என்னால் முடியாது; எனக்குப் பின்னால் இரக்கமற்ற அடுப்பு, முன்னால் இரக்கமற்ற வானம்; எனவே, இரண்டுக்கும் இடையே ஒரு பயணத்தை நான் மேற்கொள்ள வேண்டும்; பயணத்தின்


லூக்கா 22:34

 

 ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆரம்பத்தில் ஒரு துவக்கு இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணம் மார்செலாவுக்கு எழவே இல்லை. கனடாவில் அவளுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் ஆரம்பித்தது. ஒரு முடி திருத்தகத்துக்குப் போனால்கூட முதலில் உங்கள் உயரத்துக்கு ஏற்ப நாற்காலியை ஏற்றி இறக்குவார்கள். திருமணத்தில் அப்படி ஒன்றும் செய்வதில்லை. முதல் ஆறு மாதம் சுமுகமாகப் போனது. அதன் பின்னர்தான்


துளசி..

 

 காலை வெய்யில் இதமாக அடித்துக் கொண்டிருக்க படலையடியில் ‘றீங் றீங்’ பெல் சத்தம் யாரெனப் பார்போம் என வெளியில் வந்தாள் துளசி. ‘அட செந்தில் அண்ணையே… வாங்கோ’ என்று கூப்பிட்டுக் கொண்டே படலையை நோக்கி நகர்ந்தாள் துளசி. ‘அது பிள்ளை வந்து.. வீட்டுத்திட்டத்துக்கு கொஞ்சபேற்ற பேர் நோட்டிஸ் போட்டில போட்டிருக்கு உன்ர பேரும் போட்டிருக்கு போல இருக்கு போய் பார்’ என்று கூறிவிட்டு புறப்பட்டார் செந்தில். துளசிக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி. படலையில் இருந்து ‘அம்மா அம்மா..’ என்று