கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

170 கதைகள் கிடைத்துள்ளன.

ஏன் கலவரம்?

 

 “வீ’ என்று பால் குக்கரின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் டாக்டர் ராஜீவ். மணி காலை 6.40. “ஐயையோ தூங்கி விட்டோமே’ என்று தன்னையே நொந்து கொண்டான். 7.30 மணிக்கு சென்னையில் அவன் பணிபுரியும் புறநகர் மருத்துவமனையின் அவுட் பேஷண்ட் பகுதியில் நோயாளிகளைப் பார்க்க வேண்டும். அவசரமாய்ப் பிரஷ் செய்து விட்டு காபிக்காக டைனிங் ஹாலுக்குச் சென்றவன், “”என்ன சுமோ ஐந்தரை மணிக்கு என்னை எழுப்பாமல் விட்டு விட்டாயே? லேட் ஆயிடுச்சி பார். இன்னிக்கு எக்சர்ûஸக்கு ஜூட்”


திசை அறிந்த கல்

 

 இப்போது இரண்டு நாட்களாகத்தான் அந்தப் பூனையைக் காணவில்லை. அது இல்லாதிருந்த இரவு வெறுமையாய்த் தெரிந்தது. மின்சாரம் தடைப்படுகிற குத்திருட்டில் கூட தன் கண்கள் பளிச்சிட நடு வீட்டுக்குள் வந்து நின்று கூர்மையாக விழித்துக் கொண்டிருக்கும் அது. அட்டைக் கறுப்பில் பளபளவென அதன் தேகம் மின்னினாலும் அதன் கண்கள் மட்டும் சாம்பலைப் பூசிவிட்டது மாதிரி மிதமான கறுப்பில் பளீரென்று துலங்கும். சில நேரங்களில் அவர்கள் பயந்திருக்கிறார்கள். “இதென்னடா, நடு வீட்டுக்குள் வந்து நின்று பழியாய் முறைத்துப் பார்த்து ஆட்களைப்


முன்னினிது

 

 “”ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இன்னிக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகணுங்க. வெளில தலகாட்ட முடியல. மானம் போகுது. அந்தக் கெழவன வந்ததும் என்ன ஏதுன்னுக் கேட்டு இப்பவே ஃபைனல் பண்ணிருங்க” பெரியவர் முத்துச்சாமி கேட்டைத் திறந்து கொண்டு, சுண்டல் வண்டியை உள்ளே தள்ளிக் கொண்டே வீட்டின் சுவர் கடிகாரத்தைப் பார்க்கிறார். மணி இரவு எட்டு மணியாகியிருந்தது. பெரிய மருமகளின் அர்ச்சனையும். காதில் துல்லியமாக விழுந்தது. வழக்கமான அர்ச்சனைதான், எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் உச்சத்தை எட்டியிருந்தது. பெரிய


தொலைதூரத்து வெளிச்சம்

 

 “”பாத மலை தெரியுது சிவா….எழுந்திரு” – மனசுக்குள்ளிருந்து எழுப்பினாள் மாலினி பசுந்தேயிலைகள் நிரம்பிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் துயில்பவனைப் போல் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்து நின்று பேருந்தை நிறுத்தும்படி குரல் கொடுத்தான். பேருந்து நிறுத்தமோ, சாலை பிரியுமிடமோ, மனித நடமாட்டமோ இல்லாத அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்ட வண்டியிலிருந்து இறங்கியவனைப் பார்த்து, சில பயணிகள் உதட்டைப் பிதுக்கினர். அண்டவெளி இதோ கூப்பிடும் தூரந்தான், வா என்று அழைப்பு விடுப்பது போல் தூரத்தே வான் தொட்டு


நந்தகுமாரின் வீட்டுக்காரர்

 

 நந்தகுமாரின் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் கிளம்புவதற்காக ராமமூர்த்தி காத்திருந்தார். அவர் மிக கோபமாக இருந்தார். இரண்டு நாளாய் அடக்கி வைத்திருந்த கோபம். ஒரு சின்ன வயதுக்காரன் அவரது ஈகோவை கிளறிவிட்ட கோபம். இதுதவிர அலுவலக பிரச்சனை வேறு அவரை அழுத்திக் கொண்டிருந்தது. அவருக்கு மதுரைக்கு வேலை மாற்றலாகி இருந்தது. அங்கே போய் வீடு பார்க்க வேண்டும். குடும்பத்தோடு குடிபோக வேண்டும். அவருக்கு நிறைய வேலைகள் இருந்தன. அதற்குள் நந்தகுமார் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென உறுதியாய் நினைத்துக்