கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

170 கதைகள் கிடைத்துள்ளன.

பொம்மைகள்

 

 இன்று நாளை என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தே விட்டது. முகுந்த் மருத்துவப் படிப்பிற்காக மெல்பர்ன் யுனிவர்சிட்டி/ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது என்பதைத் தீர்மானித்தபின், முகுந்த்துடன் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் மிகப் பெரிய பொக்கிஷமாகப் பட்டது கமலாவுக்கு. கணேஷ்-கமலாவின் அருந்தவப் புதல்வன் முகுந்த் என்றால் ரொம்பவே சரியாக இருக்கும். திருமணமாகி வெகு நாட்களுக்குப் பிறகு முகுந்த் பிறந்ததில், கமலாவை விடக் கணேஷுக்குத்தான் அதீத சந்தோஷம். மூச்சுக்கு முந்நூறு தடவை முகுந்த் முகுந்த் என்று அவன் மீது இருவரும் அளவற்ற


மயிலும் குயிலும்

 

 பூஞ்சோலை கிராமம் பெயருக்கேற்றார்ப்போல பசுமை நிறைந்த சோலையாகக் காட்சியளித்தது. அங்கு எல்லாவகையான பழவகை மரங்களும், மூலிகை மரங்களும், பூப் பூக்கும் செடிகளும் வளர்ந்து செழிப்பாகப் பார்ப்பதற்கு அழகாக இருந்தன. அங்குள்ள மக்கள் பக்கத்து வயல்வெளிகளில் நெல் மற்றும் தானியங்களைப் பயிரிடுவார்கள். விதைக்கும் நாளிலும் அறுவடை நாளிலும், மற்ற நாட்களிலும் அம்மரங்கள் அடங்கிய பாதையில்தான் செல்வார்கள். அந்தப் பூஞ்சோலை கிராமத்தில் ஒரு மயிலும் குயிலும் வாழ்ந்து வந்தன. அவை சுதந்திரமாக அங்குள்ள பழங்களையும் தானியங்களையும் சாப்பிட்டு வந்தன. மயில்


தங்க முட்டை

 

 ஒரு கிராமத்தில் வயதான ஏழைக் கிழவி ஒருத்தி தன்னுடைய சிறிய குடிசையில் தனியாக வசித்து வந்தாள். அவளுக்கு உற்றார் உறவினர் என்று யாரும் கிடையாது. அவளிடம் இருந்த அந்தக் கோழி ஒன்றுதான் அவளின் சொத்து. தினமும் அது போடும் முட்டையை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள். அவளது குடிசைக்கு அருகில் பணக்காரப் பெண் ஒருத்தி தனியாக வசித்து வந்தாள். அவளுக்கும் உறவினர்கள் யாரும் கிடையாது. அவளிடம் நிறையப் பொன் பொருள்கள் இருந்தன.


பஞ்சு, சிலந்தி, மேகம்!

 

 முன்னொரு காலத்தில் ஜப்பானின் ஒரு பகுதியில் ‘யோஸôகோ’ எனும் பெயருடைய இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விவசாயி. ஒருநாள், அவன் தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தான். அப்போது பாம்பு ஒன்று ஒரு சிலந்தியைப் பிடித்து உண்ண முயற்சித்துக் கொண்டிருந்தது. யோஸôகோவுக்கு சிலந்தி மீது இரக்கம் ஏற்பட்டது. உடனே அவன் தனது தடியை எடுத்துக்கொண்டு ஓடிச் சென்று அந்தப் பாம்பை விரட்டியடித்தான். உயிர் தப்பிய சிலந்தி விவசாயிக்கு நன்றிக்கடன் பட்டதாய், தனது தலையைச் சாய்த்து அவனுக்கு நன்றி


நிலம் சொந்தமா? நிலத்திற்குச் சொந்தமா?

 

 ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, “”இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார். துறவி கேட்டார்: “”இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே” என்றார். “”அவன் எவன்? எப்போது சொன்னான்?” என்று சீறினான் அரசன்.””ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி. அரசர்,””அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை”என்றான். “”இருபது ஆண்டுகளுக்கு முன்