கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

170 கதைகள் கிடைத்துள்ளன.

வடகாற்று

 

 பனி அதிகமாக கொட்டிக் கொண்டிருந்த இலையுதிர்கால நாளொன்றின் முன்னிரவில், பாரிஸ் நகரத்தின்Rue De Ponthieu , 08. Champs Elysées பகுதியில் இருக்கும் Beauchamps விடுதியில், எதிர்பாராத விதமாக ஒரு போர்த்துக்கல் நாட்டுக்காரரைச் சந்தித்தான் தேவன். அந்தச் சந்திப்பை இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பழுப்பு வெள்ளையருக்கும் ஒரு ஆசியக் கறுப்பனுக்குமிடையிலான சந்திப்பு. ஒரு அகதிக்கும் ஒரு விருந்தாளிக்குமிடையிலான சந்திப்பு அது. எதிர்பாராத சந்திப்பு. அவன் வேலையை முடித்து தங்குமிடத்துக்கு புறப்பட ஆயத்தமாகியபோது வரவேற்புப் பகுதியில் யாரோ ஒருவர்


தருணம்

 

 பாண்டியின் சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கிடத்தினார்கள். தலையிலிருந்து பாதம் வரையிலும் வெண்ணிற பாப்லின் துணி மொடமொடப்புடன் சுற்றி கட்டப்பட்டிருக்க பாண்டியின் முகம் வீக்கம் கண்டிருந்தது. பத்துக்கு பத்து அளவில் இருந்த அந்த இடத்தில் ஆளாளுக்கு இடித்துக் கொண்டே எட்டி எட்டி பார்த்தார்கள். வேஸ்ட் குடோன் மாணிக்கம் ஒரு ரோஜா மாலையை அவன் நெஞ்சில் சாத்திவிட்டு நகர்ந்தார். இன்னும் இரண்டு மாலைகள் கால்மாட்டில் போடப்பட்டன. சடலத்தின் மீது இருந்த மருத்துவமனைக்கான வாடையோடு ரோஜாவின் மணம் அபத்தமாய் கலந்தது.


சந்திரன்,பானுமதி மற்றும் வில்சன்

 

 சந்திரன்- சிறையினில் யாருடனும் ஒட்டாமலே இருந்தான் சந்திரன். அவன் நினைவில் பத்திலக்க எண் ஒன்றினைத் தவிர வேறு எதுவுமே இல்லாமல் போனது. அறையில் இருந்த சக கைதி ஒருவன் வில்சனைப் போலவே ஜாடையில் இருந்ததில் அவனிடம் மட்டும் எப்போதாவது பேசுவான். அவனிடம் பேசும் பேச்சில் வில்சனின் ஞாபகங்கள் மட்டுமே இருக்கும். சிறையில் கொஞ்சம் செல்வாக்கான கைதி ஒருவனிடம் இருந்த செல்போனில் ஒருமுறை வில்சன் எண்ணுக்கு முயற்சித்ததில் ‘ தாங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்‘


அ-வசியக் கொலை

 

 தொழிலதிபர் செந்தில் பழி வாங்க முடிவு செய்து விட்டார். சுகாதார மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு துறை மந்திரி பெருமாளை, ஒரேயடியாக உலகை விட்டு ஒழித்து கட்டுவது என்று. “யாரிடம் வேலை காட்டுகிறான், அயோக்கியன்” புகைந்தார். “பணிக்கர், நீ என்ன பண்ணுவியோ, எப்படி பண்ணுவியோ தெரியாது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லே! பெருமாளை போட்டுத்தள்ளனும், ஏற்பாடு பண்ணு!”. பணிக்கர், செந்திலின் அடியாள். அவரது அந்தரங்க காரியதரிசியும் கூட. “ஐயா! அது அவ்வளவு சுலபமான காரியமில்லே! அமைச்சரை நாம நெருங்கவே


நகை

 

 “ராதா! நாம காதலிக்க ஆரம்பிச்சு நாலு மாசம் ஆயிடுச்சி இல்லே!” – பாலாஜி “நாலு மாசம், ஆறு நாள், எட்டு மணி, இருவது நிமிஷம்” – ராதா அவனை திருத்தினாள். “இப்படியே எவ்வளவு நாள்? நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கிறது? உங்க வீட்டிலே சொல்லிட்டியா?” “இன்னும் இல்லே பாலாஜி, சீக்கிரமே சொல்லிடறேன். உங்க வீட்டிலே நீ சொல்லிட்டியா?” “ம். அம்மாக்கு ஓகே. அப்பாதான் கொஞ்சம் நல்ல இடமா பாக்கலாமே! அரசாங்க குமாஸ்தா பொண்ணு வேண்டாமேன்னு பாக்கிறார்.” “ஏய்!