Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

169 கதைகள் கிடைத்துள்ளன.

லிண்டா தாமஸ்

 

 ” சித்து உனக்கு நாய்கள் பிடிக்குமா? ” – இதுதான் லிண்டா என்று அழைக்கப்படும் லிண்டா தாமஸ் அலுவலக விஷயம் தாண்டி என்னிடம் கேட்ட முதல் கேள்வி. பேசிய முதல் விஷயம். பெரும்பான்மையான நாட்கள் அவர் வீட்டிலிருந்தே வேலை செய்வார். 17 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனம் அவருக்கு இந்தச் சலுகை கூட தராமல் போனால்தான் ஆச்சர்யம். அந்த நிறுவனத்தில் தனது 25 ஆம் வயதில் ஒரு கால் அட்டண்டராக சேர்ந்தவர். படிப்படியாக முன்னேறி, இன்று அவர்தம்


மூடுபனி கோபுரங்கள்

 

 இரவு உணவை சற்று முன்னதாகவே முடித்து விட்டு, கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தேன். ஏனோ கவனம் புத்தகத்தினுள் செல்ல மறுத்தது. ‘ச்சை!”. புத்தகத்தை மூடி தலை மாட்டில் வைத்து விட்டு ஓட்டுக் கூரையையே பார்த்தபடி படுத்திருந்தேன். எங்கோ தொலைவில் ஒரு நாய் குரைக்கும் ஓசை விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டேயிருந்தது. ‘அந்த வாத்தியார் சொல்வதுதான் சரியோ?…நான்தான் முட்டாள்தனமாய் வலியப் போய் “இந்தக் கிராமத்துக்கு மாற்றல் வேணும்!” னு கேட்டு…வாங்கி…மாபெரும் தப்புப் பண்ணிட்டேனோ?” அந்தச்


காத்திருப்பு

 

 ஊரிலிருந்து அப்பா வருவதாக அலைபேசியில் அவர் சொல்லக் கேட்டவுடன் சந்திர மோகனுக்கு எதிர்ப்பார்பு ஆரம்பித்துவிட்டது. இந்த முறை எப்படியும் ஷன்முகப்ப்ரியாவைப் பற்றி சொல்லி விட வேண்டும். சென்ற முறை ஊருக்கு சென்ற போது பிரியா குறித்து பேச எத்தனித்த போதெல்லாம் ஏதோ வேறு விஷயம் வந்து விட, எடுத்துச் சொல்ல சரியான தருணம் அமையவில்லை. எப்படி ஆரம்பித்தது என்று மோகனுக்கே தெரியாமல்தான் ஷன்முகப்ப்ரியாவை அவன் வாழ்க்கையில் ஒரு பங்காக உணரத் தொடங்கினான். அவள் குறித்து அவ்வளவு தீவிரமாக


இதுவரை அறுபத்திநான்கு

 

 1. அக்கரவிலக்கணம் நான் பனிரெண்டாம் வகுப்பில் படிக்கிறேன். எனது டியூசன் சாரை பார்க்காமல், பேசாமல் இருக்க முடியவில்லை. அவருக்கும் அப்படித்தான். நாங்கள் அவ்வப்போது தொட்டுக் கொள்வோம். எனக்கு அடிக்கடி முத்தம் கொடுப்பார். ஒரு நாள் டியூசன் கிளாசில் வைத்து அவரிடம் என்னை முழுமையாய் இழந்து விட்டேன். ஆனால் சமீபமாக அவர் என்னை கவனிப்பதில்லை. பத்தாம் வகுப்பில் படிக்கும் கிரிஜாவிடமே பேசிக் கொண்டிருக்கிறார். கேட்டால் நீ சந்தேகப் படாதே என்கிறார். என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நான்


இந்த இனிய மாலை வேளையில்

 

 மாலை நான்கு மணிக்கு கூட்டம் ஆரம்பிப்பதாக அறிவித்து இருந்தாலும் காலையிலிருந்தே விழா ஏற்பாடுகள் சீக்கிரமாகவே துவங்கி விட்டன. பத்து மணிக்கு சாமியானா போடுபவர் வந்து ஒரு மணி நேரத்தில் தன் வேலையை முடித்து விட்டார். அதற்குள் அரங்க மேடை அமைப்பவரும் வந்து தன் பணியை பணியாட்கள் சிலருடன் ஆரம்பித்து விட்டார். அப்பொழுது பார்வையாளர்கள் அமர்வதற்காக இருக்கைகளும் வந்து சேர்ந்துவிட்டன. இன்னும் ஒலிபெருக்கி, டியூப்லைட் மற்றும் மின்சார வேலையும் ஏற்பாடானது. தவிர தண்ணீர், மேடை அலங்காரம் இத்யாதி விஷயங்கள்