கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

170 கதைகள் கிடைத்துள்ளன.

போட்டோ

 

 பரபரப்பாய் இருந்தது, ராமுத்தாயிக்கு. போட்டோவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். கண்ணாடி உடம்போடு சேர குளிர்ச்சியாக இருந்தது. எத்தனை நாளாய் இப்படி ஒரு போட்டோ பிடிக்க வேண்டுமென்று அவளுக்குக் கனவுகள். இன்று எல்லாம் நிறைவேறிவிட்டது போலிருந்தது. போட்டோவைப் பார்த்தாள். ராமுத்தாயின் முகம் சுருக்கமாய் இருந்தது. எத்தனை கவலை ரேகைகள் முகத்தில். எத்தனை கஷ்டங்கள் வாழ்க்கையில், கஷ்டங்களும் அழுகைகளும் முகத்தில் ரேகைகள்போல ஆக்கிவிட்டது. வயதாகி விட்டதல்லவா இதற்குமேல் இதையெல்லாம் எதற்கு நினைக்கவேண்டும் என்று நினைத்தாள். ஒரு கையில் போட்டோவைப்


பெருந்திணைக் காமம்

 

 கதிரேசன் பூச்சிமருந்து குடித்துவிட்ட செய்தி எனக குத் தெரிந்தபோது வானம் கருத்து விண் மீன்கள் பூத்திருந்தன. நிலா வெளிச்சம் கடல் நீரின்வெண்மைபோலப் படர்ந்திருந்தது. சித்திரை மாதத்துக் கோடையின் அனல் காற்று பு ழு க்கத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது. நிறமற்ற ரத்தம்போல் வியர்வைத் துளிகள் வழிந்தன. என் இதயப் படபடப்பும் மூச்சுக காற்றின் சத்தமும் அந்த இடத்தின் மௌனத்தைச் சிதறடித்தன. உறக்கத்திலிருந்து விடுபட்டிருந்தாலும், அது ஒருவேளை கனவோ என நினைத்தேன். கனவாகவே இருந்துவிடக கூடாதா என்று விரும்பியபடியே படுக கையைவிட்டு


பைத்திய ருசி

 

 பைத்தியங்களைக் கழுவிக் கழுவி பைத்தியமான நதி. அடிப்பருத்து அகல இலைகளைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் அப்பெரிய மரத்தின் நீள வேர்கள் குடித்துக்கொண்டிருந்த நதி எப்போதும்போல் நகர்ந்து கொண்டிருந்தது. புனல் பெருக்கோடும் ஆர்ப்பாட்ட வேகமும் இல்லை, நீரின்றி நிலம் காட்டி மணல் நரம்பை வெயிலில் விரிக்கும் நிசப்தமும் இல்லை. நீர் நீராகவே கொள்ளும் நித்திய நதி. நீரின் நிறமும் குணமும் மாற்ற முயற்சித்துத் தோற்ற வெயில் பற்றி அறிந்தவர்கள் அவர்கள். உதிர்ந்த சருகுகளின் மீது மாலை வெயில் புரண்டு


வனதேவதையின் இசைக் குறிப்புகள்

 

 1. திரும்பவுமொருமுறை டேவிட் கீபோர்டை தொட்டு பார்த்தான். பழக்கப்படாத வளர்ப்பு பிராணியைப்போல் அது பிடிகொடுக்காமல் முரண்டு பிடித்தது.அவன் இதை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான்கைந்து வருடங்களாய் தன்னோடு உடலுறுப்பு போல் ஒட்டிக்கொண்டிருந்த இசையறிவு சட்டென்று ஒரு அதிகாலையில் முழுமையாய் அந்நியப்பட்டுப் போய்விடுமா என்ன? பயத்திலும் அதிர்ச்சியிலும் அவனது கை கால்கள் உறைந்து போய்விட்டன.ரொம்பவே சிரமப்பட்டு இயல்பான உடல்மொழியை வலிந்து மீட்டவனாய் தன்னறையை விட்டகன்று கூடத்திற்கு வந்தான். அப்பா நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியின் அலைவரிசையை மாற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் தன்னிருப்பை காட்டிக்


மனம் ஒரு குரங்கோ?

 

 மதியமே வேலை முடிந்துவிட்டது.. அலுவலகத்தில் இருக்கும் சொச்ச நண்பர்களையும் பார்த்து அவர்களின் பிராஜக்ட் நலத்தை விசாரித்து, வழக்கம் போல அலுவலகத்தில் இருக்கும் ஏதோ ஒரு பெண்ணின் உடையலங்காரத்தை மிகவும் மட்டமாக விமரிசித்து, வாய் கிழிய சிரித்தாயிற்று.. அடுத்தது கிளம்ப வேண்டியது தான் பாக்கி.. 5 மணிக்கு மேனேஜரிடம் போய் “ஷல் ஐ லீவ், ஃபினிஷ்ட் டுடேஸ் வொர்க்…. “, என்றால் அவன் அவர் பெண்ணை மணமுடிக்க கேட்ட முக பாவனையுடன் “வாட் நௌ இட்செல்ஃப் …” என்று