கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

170 கதைகள் கிடைத்துள்ளன.

செக்குமாடு

 

 1 தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம். அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து


காற்றைக் கலைக்கும் ரேகைகள்

 

 ‘’இந்தச் சண்டாளப் பாவிய கொல்லதுக்கு ஆருமேயில்லியா’’ புட்டுக்காரிப் போட்டக் கூப்பாட்டத்தில் தன் மௌனத்தைத் தவற விட்டபடி அதிர்ந்து நின்று கொண்டிருந்தது இரவு. கிணற்றுக் கரையோரம் கிடந்த நாய் சுவடி தன் ஊளையைப் பெருக்க, மேலவிளையின் சாக்குட்டன் வீட்டில் முதல் வெளிச்சம் பற்றிக் கொண்டது. சாக்குட்டன் உடனே தனது வீட்டின் தெற்குப் புரையை நோக்கி வேகமாக ஓடினான். சாணி மூலையையொட்டி உணங்கப் போட்டிருந்த தென்னம்பாளைகளுக்கிடையில் படுத்துக் கிடந்தத் துப்பிதுப்பியை அடித்தெழுப்பினான். இருவரும் கீறிக் கொண்டு புட்டுக்காரியின் வீட்டுத் தாழ்வாரத்தின்மீது


மனசு ஒரு கதையாய்

 

 மாமியார் மருமகளை மாவடுக்கிற சட்டுவத்தை எங்கவச்சே மாமயிலே எனக் கேட்க மருமகள் அல்லையிலே வைச்சிட்டனா, அலுங்கி நடந்துட்டனா, கொண்டையிலே வெச்சிட்டனா, குலுங்கி நடந்துட்டனா, தூரத்து பெண்களுக்கு தூக்கி குடுத்தனா, இல்லாப் பொறப்புக்கு எடுத்து குடுத்துட்டனா, கட்டடா பல்லாக்க, காலமே போய் சேர்வோம் பூட்டடா பல்லாக்க புறந்திடம் போய்ச் சேர்வேன் என்று சொல்லி புறப்பட கணவன் வருகிறான். அவனிடம் துப்பிட்டுச் சொங்கழகா, துவண்டோ நடையழகா, உன்னப்பெத்த தாயாரு, ஊரறிய பேசறாங்க என்று சொல்கிறாள் மனைவி. மகன் தாயிடம், கடுகு


எப்படி சொல்வேன்

 

 அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆர்த்தியை இன்று சந்திப்போம் என்று சங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டான். அவ்வளவு கூட்ட நெரிசலிலும் ஆர்த்தி சங்கரை அடையாளம் கண்டுக்கொண்டாள். முகத்ததை திருப்பிக் கொண்டு நகர நினைத்தவனை அவனின் பெயரை சொல்லி அழைத்து கையசைத்தாள். “ஹாய்” சங்கர் எப்டி இருக்க என்றால் அழகான புன்னகையோடு. சங்கர் பொய்யான புன்னகையை வரவழைத்துக் கொண்டு தலையை மட்டும் ஆட்டினான். புழைய விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்தி ஏதேதோ அவள் பேசினாள். ஆனால் சங்கரோ அவள் பேச்சிற்கு தலையை


நீ நான்

 

 சொல்லப்போனால் இந்த வீட்டிற்கு அது வந்து போன பிறகிலிருந்து தான் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கின்றன. இப்போதெல்லாம் நானும் தைரியமாக வீட்டை வளைய வரத்தான் செய்கிறேன் . எல்லோர் முகத்திலும் ஒரு விதமான திகைப்பும்ää சந்தேகமும் நிழலாகக் கிடக்கின்றன. கிடக்கட்டும்…… இதனைத் தொடர்ந்து சம்பவங்களை நான் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். எப்போதும்; மூடியே இருக்கும் கதவுக்குப்; பின்னே உள்ள தெருக்களில் கூட சலசலப்பு எழ ஆரம்பித்துவிட்டது. நான் இந்த வீட்டிற்கு முதன்; முதலில் வந்த போது கூடத்தான்