கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

170 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை

 

 கையில் திருப்பதி பிரசாதத்துடன் வீட்டு வாசலில் நின்ற பக்கத்து வீட்டு சுதாவை புன்னகையோடு உள்ளே வரவேற்றாள் சந்தியா. “அடடே, உள்ளே வா சுதா. திருப்பதியில இருந்து எப்ப வந்தீங்க?.  தரிசனமெல்லாம் எப்படி இருந்துச்சு! கூட்டமெல்லாம் அதிகம் இல்லயே?”, என்று சந்தியா கேள்விகளை அடுக்கிகொண்டே போனாள். “காலைலதா வந்தோம். தரிசனமெல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. பிரசாதம் கொடுத்துட்டு போகலான்னு வந்தேன். எங்க அண்ணனை காணோம்?”. “ஆபீசுக்கு போயிருக்காரு. இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே!”. “இன்னைக்கு என்ன ஆபீஸ்?”. “ஏதோ முக்கியமான


பிறழ்வு

 

 அருண் மதியம் பார்த்த ரயில் நிலையம் இதுவல்ல.எரிந்துக் கொண்டிருந்த தண்டவாளங்களும் இறுகிப் போய் மூச்சழுத்தி திமிறிய ரயிலும் வண்ணங்களழிந்த முகங்களுமாய் அடிமனதை புரட்டிய ரயில் நிலையம் கூடடையும் பறவைகளின் வானத்தில் கரும்புள்ளியாய் தொலைந்து போய்விட்டிருக்க வேண்டும். பகல் பொழுதின் அனல் கோடுகள் உண்டாக்கிய இறுக்கம் முற்றிலுமாக தளர்ந்து போக இதமாக வீசி வருடியது நள்ளிரவின் மென்காற்று.சப்தங்கள் வடிந்து போன இந்த இடம் அவன் கற்பனையே செய்திராத அளவிற்கு ரம்மியமாக இருந்தது.கழுத்தை திருப்பி கண்களை அங்குமிங்கும் மேயவிட்டவன் தெருவிளக்கின்


தலைவருடன் ஒரு நேர்காணல்

 

 தலைவர் என்ன பண்ணிட்டிருக்கிறார் – யார் இப்படி ஃபோன்ல உங்களைப்பத்தி விசாரிச்சாருன்னு சொல்லுங்க. அவள் கேட்டதும், சிரித்துக்கொண்டே தெரியும், என்ன எலக்ஷன் சமயத்தில் என்னை இவர் தலைவர் ஆக்கிட்டாரா என்று பதில் சொன்னாலும் தலைவர் என்ற சொல்லிலிருந்து மனசுக்குள்ளே வேறொரு போக்கில் சிந்தனை உருவாகிடுச்சு. நான் தலைவர்னா யாருக்கு தலைவர் அப்போ அவர் யாரு. தலைவரா இருந்தா கட்சி இருக்கணுமே. நினைத்தவுடன் மனசு சுத்த ஆரம்பிடுச்சு. ஆமா உடனடியா கட்சி ஒண்ணு இப்போ உருவாயிடுச்சு மனசுக்குள்ளே அ


நீலவர்ணத்திலிருந்து தப்பித்தல்

 

 குரோதம் மட்டுமே கொண்டிருந்த கடலினோடு எந்தப் பரிச்சயமுமற்ற நைஷாபோல் புனித ராயப்பரின் வருகைக்காகக் கடலுக்குச் சற்றும் பொருத்தமற்ற மிகச்சிறிய பைபர் படகில் காற்று ரீங்கரிக்கும் நடுக்கடலில் காத்திருந்தான். பயணியைப்போலவோ மீன்பிடிப்பவனைப்போலவோ தோற்றம் தந்திராத நைஷாபோலை பலகாலம் கரையொதுங்கி கிடந்த படகு நீலவர்ணத்திற்குள் அழைத்துவந்திருந்தது. பெரும் அலைக்குத் தாங்காத இற்றுப்போன பைபர் படகென்றாலும் மிதக்கும் தன்மை கொண்டிருந்ததால் அது கடலில் மிதந்துகொண்டிருந்தது. பாதை மாறாத சரக்குகப்பல்களுக்கான நீர்வழித்தடத்திற்கு வெகுதொலைவில் அப்படகு மிதந்துகொண்டிருந்ததால் எந்த ரடாரிலும் ஒரு புள்ளியைக்கூடக் காண்பித்திருக்கவில்லை.


தாய்மடி

 

 அப்பா இறந்துபோனது அரியரத்தினத்துக்கு ரொம்ப துக்கமாய் இருந்தது. ஜனனம் உலகத்தில் எதோ அர்த்தத்தைக்கொண்டு வருகிறது. அர்த்தத்தை உணர்த்திக்கொண்டு வருகிறது. மரணமோ அதை அழித்து விடுகிறது. வாழ்க்கை என்பதன் அபத்தத்தை மரணம் எடுத்துச்சொல்லி விடுகிறது. அர்த்த அனர்த்தக் குழப்பத்திலேயே பெரும்பாலோரின் வாழ்க்கை முடிந்துவிடவும் செய்கிறது. அர்த்தம் புரிபடுகிற வயதில் அரியரத்தினம் அதன் அனர்த்தங்களையும் சேர்த்தே மூர்க்கமாக உணர்த்தப்பட்டான். அறிவு என்பது குரங்கு கைப் பூமாலையாக மனிதனிடம் சிக்கித் தவிக்கிறதே என வேதனைப்பட்டான் அவன். ஆங்காரம், பட்டம், பதவி, அதிகாரப்