கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 28, 2013

19 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதர்கள்

 

 “ஏனுங்கோ, இப்பிடி இங்க வந்து ஒக்காருங்க!’ லட்சுமி, ஜன்னலோரம் நகர்ந்தமர்ந்து தன் கணவருக்கு இடமளிக்கிறாள். அருகமர்ந்த நாச்சிமுத்துவிடம், “என்னங்க இது, இங்க இப்படியோரு சன நெரிசலு! ஒரு நாளைக்கே நாம் இப்பிடி நசுங்கிக் கசங்கிப் போறமே, புள்ள சென்னி எப்பிடித்தான் நெதமும் அமிஞ்சிக்கரைக்கு பஸ்சுல காலேசுக்கு வந்து போறானோ? பாவங்க பய!’ என்றாள் லட்சுமி. “அதெல்லாம் பாக்க ஏலுமா எச்சுமி? நாம என்ன, சென்னியப்பனுக்கு வண்டி வாகனம் வாங்கித் தரவா முடியும்? நம்மூர் சாயப்பட்ற தண்ணிப் பிரச்னைல


பாசம் என்னும் ப்ரணவம்!

 

 எல்லாம் முடிந்துவிட்டது. வீடு கழுவப்பட்டு காரியம் முடித்து கறி சமைத்து சாப்பிட்டு, ஒரு ஆத்மாவின் முடிவு அறிவிக்கப் பட்டுவிட்டது. கௌசிக்கு இன்னும் நம்பவே முடியவில்லை. ஹரி ஏன் இப்படி? புரியவில்லை. உறவுகளெல்லாம் புறப்பட்டு விட்டது அம்மா மட்டும் உடனிருப்பதாக முடிவு செய்யப்பட்டது. தம்பி தன் மனைவியுடன் கிளம்பியவன் அருகில் வந்தான். “அக்கா கவலைப்படாதே, நாங்கள்லாம் இருக்கோம், உன்னையும், கார்த்தியையும் நல்ல பார்த்துக்குவோம். ஆனா, மாமா உங்களை பார்த்துகிட்டா மாதிரி, எங்க யாராலயும் பார்த்துக்க முடியாதுக்கா’ ஓ வென


அந்தாதி

 

 அவள் ஓட்டிச் செல்லும் காரை எப்படியும் வருகின்ற சிக்னலில் பிடித்துவிடுவது என்ற முனைப்பில் இட வலம் என வெட்டி ஓட்டினேன். பொதுவாக யாரிடத்தும் அவ்வளவு ஈர்ப்போ ஈடுபாடோ ஏற்படாது எனக்கு. ஆனால் அவள் ஓட்டிச் சென்ற விதம் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால்தான் இந்த சேஸிங். நினைத்தது போலவே அந்த சிக்னலில் அவளுடைய கார் நின்றிருந்தது. கவனமாய் அருகில் சென்று அவளுடைய காருக்கு அருகில் சொருகினேன். புளூ டூத்தில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை பிறருக்கு புரியவைக்க


சம்மதமா?

 

 சுந்தரம் அவசரமாக ஆபீஸுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். வைதேகி அவரது டிபன் பாக்ஸை துடைத்து அவசரமாக பையில் வைத்தாள்! “சீக்கிரம் கொண்டா! ஏற்கெனவே அரை மணி நேரம் லேட்! செல்போன், ஐடிகார்ட் எல்லாத்தையும் எடுத்து வச்சியா? பர்ஸ்ல பணம் இருக்கா?’ “இருக்குங்க! நேரமாச்சுனு பைக்கை ரொம்ப வேகமா ஓட்டாதீங்க! அரை நாள் லீவு போட்டுட்டு நிதானமா போங்க!’ “லீவு இல்லை, வைதேகி! மீரா சீக்கிரமா போயிட்டாளா?’ கேட்டபடி வெளியே வந்து பைக்கை உதைத்தார். அது இடக்கு பண்ணியது! “இது


பொம்மைகளும் கிளர்ந்தெழும்!

 

 சவரத்தை முடித்துவிட்டு சுப்பு போய்விட்டான். அவனோடு அந்த வாடையும் போய்விட்டது. வாடை என்றால் வேற என்னவோ என்று நினைக்க வேண்டும். நல்…ல ஒரு மனுச வாடைதான். பருவ வயசில் உடம்பிலிருந்து ஆணிலும் பெண்ணிலும் அப்படி ஒரு வாடை இருக்கும். ஆயி தன்னுடைய தோள்களை கக்கத்தை முகர்ந்து பார்த்தாள். சை, இது ஒருவகையான வேர்வை வாடை நடுவயசை அடைந்துவிட்டவர்களுக்கான ஒரு இளம் கொச்சைவாடை. இது அதுஇல்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். ஆயி ரொம்பச் சின்ன வயசிலேயே பொட்டு(தாலி)