கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 19, 2013

13 கதைகள் கிடைத்துள்ளன.

நிற்பதுவே நடப்பதுவே

 

 மாடிப்படி இருளில் மூழ்கியிருந்தது. தட்டுத் தடுமாறி குத்துமதிப்பாக நடந்து விக்ரம் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றேன். பின்பு தான் மொபைல் ஞாபகம் வந்தது. அதை எடுத்து, அதன் சின்னப் புன்னகையில் காலிங் பெல்லை தேடி அடித்தேன். மணி இரண்டே முக்கால். அதிகாலை. எதிர் ஃப்ளாட்டை திரும்பி பார்த்துக் கொண்டேன். சத்தம் கேட்டு வந்துவிடக் கூடாது. அதிகாலையில் அநாவசியமாக தூக்கம் கலைப்பது மகா பாவம். மொபைல் எடுத்து விக்ரமின் நம்பரை அழைத்தேன். பதிலே காணோம். படுபாவி, இப்படி படுத்துகிறான்.


நீ

 

 நீ என்னை விட உயரம் சற்று குறைவு. கப்பல் தரை தட்டுவது போல என் கண்கள் உன் உச்சந்தலை தட்டும். நேருக்கு நேர் நின்று பேசுகையில் என் கண்கள் சில சமயங்களில் உன் நெற்றி வகிடில் வாகனமாக தறிகெட்டு ஓடத் துவங்கும். அங்குமிங்கும் பார்வையை அலையவிட்டபடி பேசுகிற வழக்கம் கொண்ட நீ, சடாரென நிமிரும் போதெல்லாம் காதல் விபத்தொன்று நிகழ்ந்தென்னை தடுமாறச் செய்யும். துவக்கத்திலே ‘ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் நீ?’ என்ற கேள்வி உன் பார்வையில்


ஆசை

 

 காகத்திற்கு வெகு நாட்களாகவே காரசாரமாக மாசாலா தடவிய சிக்கன் சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஒரு நாள் காகம் இரை தேடிவிட்டு இளைப்பாருவதற்காக மரத்தடியில் போய் அமர்ந்தது. அந்த மரத்திற்கு பக்கத்தில் இருக்கும் வீட்டில் பூனை ஒன்று இருந்தது. அந்த வீட்டுக்காரர் பூனைக்கான காலை உணவை கொண்டு வந்து பூனை முன் வைத்தார். தட்டில் இருக்கும் உணவை பூனை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பூனை இந்தளவுக்கு ரசித்து ருசித்து சாப்பிடுதே! அப்படி என்ன சுவையான உணவு


உதவி

 

 இதுவரை பல விலங்குகளின் உயிருக்கு எமனாக இருந்த நரிக்கு இன்று ஒரு சிறிய முள் எமனானது. இரண்டு நாளைக்கு முன் தன் காலில் குத்திய முள்ளை எடுக்க முடியாமல் நரி வலியால் துடித்துக் கொண்டிருந்தது. நரியின் குகைக்கு பக்கத்தில் இருக்கும் புதரைதான் முயல்கள் காலம்காலமாக தங்களின் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன. நரி தினம்தோறும் அந்த முயல் கூட்டத்திலிருந்து ஒவ்வொரு முயலாக கொன்று தின்று தன் பசியை தீர்த்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்நது வந்தது. முயல்கள் நரிக்கு


மனம் திருந்திய மதன்

 

 வீட்டுக்குள் தயங்கித் தயங்கி பூனை போல அக்கம் பக்கம் நோட்டம் விட்டபடி உள்ளே நுழைந்து புத்தகப் பையை ஒரு மூலையில் வைத்தான் மதன். பையின் அடியில் இருந்த டிஃபன் பாக்ஸ் சப்தம் கேட்டு சமையல் அறையிலிருந்து “வந்துட்டியா மதன்’ என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள் மதனின் அம்மா அமுதா. நம்ம வந்தது அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது என்று பிரமித்தான் மதன். ஆனால், தன் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் தாய் நன்கறிவாள்; அவளை ஏமாற்றவே முடியாது என்பதை அவன்